11-07-2019, 10:08 AM
பாகம் - 25
இது அவனுக்குச் சின்ன அடிதான். பெரிய அடி இன்னும் இருக்கிறது!
அன்றிரவு, ப்ரேம் வீட்டில்.
மாப்ளை ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!
சொல்லுங்க மாமா! ஏதாவது பிரச்சினையா? (அவனுக்கு உள்ளுக்குள் இன்னமும் உதறல் இருந்தது)
பிரச்சினைல்லாம் ஒண்ணுமில்லை மாப்ளை, எல்லாம் நல்ல விஷயந்தான்.
என்னன்னு சொல்லுங்க மாமா.
ஒண்ணுமில்லை மாப்ளை, நம்ம ஃப்ரெண்டு ஒருத்தரு, இந்த OMR ரோடுல மெயின்லியே, லேண்டோட சேத்து 6 வீடு இருக்குறா மாதிரி ஒரு அபார்ட்மெண்ட் கட்டுறாரு. எனக்கு ரொம்ப நல்லாத் தெரிஞ்சவரு. ஏரியாவும் நல்ல மெயின் ஏரியா. ரொம்பத் தெரிஞ்சவன்கிறதுனால, எனக்காக, ஒன்றரை கோடில முடிச்சுத் தரேன்னு சொல்லியிருக்காரு. எனக்கும், கல்யாணம் ஆனதுல இருந்து உங்களுக்கு ஏதாச்சும் பண்ணனும்னு நினைச்சிகிட்டே இருப்பேன். இப்ப இந்த ப்ராஜக்ட் வந்திருக்கு! அதுனால அந்த அபார்ட்மெண்ட்டை உங்க பேருல வாங்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க!
ப்ரேமுக்கு தலை கால் புரியவில்லை. அது பம்ப்பர் ஆஃபர் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. நல்லவன் போலவே பேசினான், நல்ல ஆஃபர் மாதிரிதான் மாமா இருக்கு.
ஆமா மாப்ளை, ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு.
என்ன மாமா?
நீங்க இதுல ஒரு 50 லட்சம்னாச்சும் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.
50 லட்சமா?
ஆமா மாப்ளை, நான் கிராமத்து ஆளு. நம்மூர்ல இப்பிடில்லாம் சொத்தை மாப்ளை பேருல வாங்குறதெல்லாம் பழக்கமிலாத விஷயம். நான் என் பொண்ணு பேருல வாங்குனா கூட பரவாயில்லைன்னு ஆயிரம் நொட்டை பேசுவாங்க. அதுனாலத்தான், நீங்களும் ஓரளவு காசு போட்டாத்தான், வெளிய நான் இது மாப்ளை சொத்துன்னு பேசிக்க முடியும். அதுதான் உங்களுக்கும் கவுரவமாயிருக்கும். என்ன சொல்றீங்க?
எல்லாம் சரி மாமா, ஆனா 50 லட்சத்துக்கு நான் எங்க போவேன்?
மாப்ளை, இதுக்காக நானும் ஊர்ல இருக்கிற ரெண்டு நிலத்தை வித்துதான் காசு புரட்டுறேன். நான் மட்டும் ஒரு கோடிக்கு எங்க போவேன் சொல்லுங்க?
நான் ரொம்ப உங்க பண விஷயத்துல தலையிடக் கூடாது! என் பொண்ணும் ஒரு வருஷத்துக்கு மேல வேலைக்குப் போகுது. நீங்களும் நல்லா சம்பாதிக்கிறீங்க! கையில ஓரளவுனாச்சும் சேத்து வெச்சிருப்பீங்க! வேற சொத்து ஏதாவது விக்க முடியுமான்னு பாருங்க. உங்களால முடியும்னா, நாம இந்த ப்ராஜக்டுக்கு ஓகே சொல்லலாம். இல்லைன்னா விட்டுடலாம். யோசிச்சு சொல்லுங்க. என் மகள்கிட்டயும் பேசுங்க என்று சொல்லி எழுந்தார்.
அவர் சென்றவுடன், என்னங்க சொல்றீங்க என்று மைதிலி கேட்டாள்.
என்னைக் கேட்டா? 50 லட்சத்துக்கு எங்க போறது?
ஏங்க, கைலியே 10 லட்சத்துக்குப் பக்கமா வெச்சிருப்பீங்க. என் சாலரியும் உங்ககிட்டதான் இருக்கு. நீங்க 6 வருஷமா வேலை பாக்குறீங்க. PF, அது இதுன்னு இருக்குமில்ல. அதெல்லாம் எடுங்க. ஊர்ல உங்களுக்கு இருக்குற, அந்தக் குட்டி நிலத்தை விக்கலாம்ல? நீங்க என்ன ஊருக்கு போயி விவசாயமா பண்ணப் போறீங்க? நான் சொல்றது சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்.
அவர்கள் போட்ட தூண்டிலில் ப்ரேம் வசமாய் சிக்கினான். அடுத்த நாளே, பணத்தை ஏற்பாடு செய்வதாய் மாமனாரிடம் சொன்னவன், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினான்.
இடையே, ராஜா, தனது நண்பன் ஒருவன் மூலம், _____ கம்பெனியிலிருந்து பேசுவது போல் ப்ரேமினை காண்டாக்ட் பண்ணி, பதவி உயர்வும், இப்போது வாங்கும் சம்பளத்தை விட ஒன்றரை மடங்கு சம்பள உயர்வு என்றும் அவனுக்கு வலை வீசினான். அது பெரிய அலுவலகம், அதுவும் ஓரளவு பக்கத்தில் இருக்கும் அலுவலகம் என்பதால், தனக்கு தொடர்ந்து அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று நினைத்த ப்ரேம் வசமாய் வலையில் சிக்கினான்.
போலியாய் ஆஃபர் லெட்டரை உருவாக்கிய ராஜா, அதன் மூலம், ப்ரேம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை ராஜினாமா செய்ய வைத்தான். அதில் வரும் ஃபைனல் செட்டில்மெண்ட்டையும், ப்ராஜக்டிற்கு போட நினைத்த ப்ரேம், எல்லாம் நல்லதிற்க்கே என்று நினைத்துக் கொண்டான்.
ஒன்றரை மாதத்திற்கும் மேலாகியிருந்தது!
ப்ரியா முந்தா நேற்றுதான் ஆன்சைட்டுக்கு கிளம்பிச் சென்றிருந்தாள். ப்ரேமும் பழைய ஆஃபிசிலிருந்து ரிலீவ் ஆகியிருந்தான். அக்ரிமெண்ட் படி, இன்னும் புதிய கம்பெனியில் சேர ஒரு மாதத்திற்கு பக்கமாய் நாள் இருந்தது!
ப்ரேமுக்கு கிடைத்த ஆஃபர், மைதிலியின் அப்பா கொடுக்கும் வீடு என எல்லாவற்றையும் கேட்டு பிரியா கூட அவனைக் கிண்டல் செய்ந்திருந்தாள்.
பரவால்லை ப்ரேம் நினைச்சதை சாதிச்சுட்ட! இன்னும் இந்த உலகம், உன்னை நம்புது பாரேன்!
பக்காத் தேவடியா நீ, உன்னையே இந்த ஊரும், உம் புருசனும் பத்தினின்னு நம்புறாங்க, எனக்கு என்ன என்று அவனும் சிரித்தான்.
அவனுடைய வீட்டில் ப்ரேம் சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால், விதியோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது!
எந்தப் பணத்திற்க்காக மைதிலியை ஏமாற்றினானோ, அந்தப் பணம் அவனிடமிருந்து சுத்தமாகப் பிடுங்கப்படிருந்தது. அந்த வீடு, கார், அம்மா நகை உட்பட அனைத்தும் மைதிலியின் பேரில் இருந்தது. அவனது சேவிங்ஸ் மொத்தமாய் துடைக்கப்பட்டிருந்தது. இருந்த ஒரே நிலமும் விற்கப்பட்டு, அந்தப் பணமும் மைதிலியின் அப்பாவிடம் மாட்டியிருந்தது! இது எதையுமே அறியாத ப்ரேம், சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.