மான்சி கதைகள் by sathiyan
அழுதவளை அழைத்தான் அவள் காதலன் "என்னடா ஷாக் ஆகிட்டயா?.. ஆனால் நிஜம் தானே சிமி?"

பதில் செய்யவில்லை மான்சி

"சிமி,, ஏதாவது பேசு சிமி.... ஒரு மாதிரியா இருக்கு சிமி... ஒரு வார்த்தை சொல்லேன்"

பேச வேண்டும்... பேசித்தான் ஆகவேண்டும்... இதை வளரவிட்டால் எத்தனை ஆபத்து? விரல்கள் டைப் செய்தன.... அன்று இவன் பெற்றோருக்கு இவள் சித்தி கூறியதையே இன்று இவனுக்கு கூற விளைந்தாள்

"முட்டாள்தனமான கூற்று சத்யன்... நான் திருமணமானவள்..... எனக்கு கணவர் இருக்கிறார்..... நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பழகியது எனது தவறுதான்... இனி வேண்டாம்.... பை சத்யன்" என்று அனுப்பிவிட்டு அவனது பதில் வரும் முன் ஆப்லைன் போனாள்......

விதி என்பது கடவுளின் கையிலிருக்கும் விளையாட்டு பொம்மை போலிருக்கு... அவர் இஷ்டத்துக்கு விதியை அசைக்க... அந்த விதி மனிதனை அசைத்துப் பார்க்கிறது...

மான்சியின் பதிலைப் படித்த அடுத்த நிமிடம் "இல்லை... இல்லை சிமி சொல்றது பொய்.. பொய்... பொய்" என்ற பெரும் அலறலோடு தனது லாப்டாப்பின் மீது சாய்தான் சத்யன்...



" கண்களில் நிறையாமல்....

" கருத்தினில் பதிந்தவளே,,

" அன்று,, உன் தாய்கான வரிகளில்...

" நான் என்னை இழந்தேன்...

" இன்று என் காதலுக்கான வரியில்..

" நான் நிதானம் இழந்தேன்...

" இனி என் உயிரை இழப்பது..

" உனது வரிகளில் இல்லை..

" வாழ்க்கையில் மட்டுமே!
அசையும் அத்தனையும் அசையாமல் நின்றுவிட்ட அதிசயம் நிகழ்ந்தது சத்யனின் உலகில்.... அத்தனையும் அப்படியே நின்றுவிட அவனது இதயம் மட்டும் அதி வேகமாக துடிக்கக் கண்டான்.....

அவசரமாய் நெஞ்சில் கைவைத்து அழுத்திப் பிடித்துத் துடிப்பை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்... அந்த முயற்சியில் கண்ணீர் மட்டுமே பெருகியது... அழுகிறோம் என்று உணர்வு சொல்ல இன்னும் அழு என்று மனம் சொல்லக் கேட்டான்....

காதலில் உதாசீனம் இத்தனை உயிர் வலியா?

மீண்டும் அவன் சிமி அடித்து அனுப்பிய அந்த உயிரெழுத்துக்களை வாசித்தான்... எழுத்துக்கு ஓர் உயிரைக் கொல்லும் சக்தியுண்டா? இதோ கொல்கிறதே உயிர் மெய் எழுத்துக்கள் சேர்ந்து அவன் உலகை இருட்டடித்து விட்டதே...

"நான் திருமணம் ஆனவள் சத்யன்" மறுபடியும் பல முறை வாசித்தான்... அவள் பொய்யுரைப்பதாகவே மனதுக்குத் தோன்றியது...

விரல்களின் நடுக்கத்தை நிதானத்துக்கு கொண்டு வந்து கீபோர்டில் வைத்தான் "நீ....... நீ பொய் சொல்ற சிமி"

சற்றுப் பொருத்து சிமியின் பதில் டிஜிட்டல் எழுத்துக்களில் வந்தன "பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன சத்யன்?..... உங்களிடம் ஆறுதல் தேடியது காயம் பட்ட என் மனம் தான் சத்யன்... என் உடல் அல்ல... ஆன்லைன் என்பது ஊமைகள் நடத்தும் நாடகம் போன்றது... வெறும் எழுத்துக்களை வைத்து எதிரில் இருப்பவரை நிர்ணயம் செய்யமுடியாது..... எதை வைத்து என் மீது காதல் வந்தது என்று கூறுகிறீர்கள்?" 

மிக நேர்த்தியான பதில்..... வாசித்த சத்யனின் உதட்டில் விரக்திச் சிரிப்பு "எதை வைத்து நேசம் வரும் சிமி? என் மனம் சொன்னது... நீ தான் எனக்கேற்றவள்னு... உன் ஏக்கத்தை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்னு என் மனம் சொன்னது சிமி"

"முட்டாள் மனம்,, நான் யார்? என் பெயர் நிஜமா? அழகா? அசிங்கமா? என் வாழ்க்கை முறையென்ன? அதில் யார் யார் இருக்கிறார்கள் இப்படி எதுவுமே தெரியாமல் காதலிக்கிறேன் என்று உங்களுக்குச் சொன்ன உங்கள் மனம் ஒரு முட்டாள் சத்யன்"

"ம் ம் முட்டாள் தான் சிமி,, நான் முட்டாள்... என் மனமும் முட்டாள்.... ஆனால் அதிலிருக்கும் நேசம் நிஜமடி பெண்ணே.... என் உயிர் நேசம் நிஜமடி பெண்ணே.... நீ அசிங்கமாகவே இருந்துவிட்டுப் போ... யாருக்கு வேண்டும் உன் அழகு? உன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. எனக்கு சிமி என்ற பெயர் போதும்.... உன் வாழ்வு எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... அந்த வாழ்வை உயிர்க்க என்னால் மட்டும் தான் முடியும் சிமி.... என் காதலை உன் இதயத்தில் வைக்காவிட்டால் பரவால்லை... காலடியில்... உன் காலடியில் வைத்துக்கொள்... ஒரு நாயைப் போல நன்றியுடன் உன்னைச் சுற்றிவரட்டும்" உள்ளத்துக் குமுறல்களையெல்லாம் வார்த்தைகளாக வடித்து விரிகளாக மாற்றி அவளுக்கு அனுப்பினான்....

நெடுநேரம் கழித்து அவளிடமிருந்து பதில் வந்தது "ப்ளீஸ் சத்யன் நிதர்சனத்தைப் புரிஞ்சுக்கங்க"

"எது நிதர்சனம் சிமி? என் மெசேஜ் பார்த்துட்டு இப்போ நீ அழுதியே அதுதான் நிதர்சனம்"

"அய்யோ நான் அழலை... நான் ஏன் அழனும் சத்யன்... அழவில்லை"

"நீ ஏன் அழனும்? அதை உன் மனதிடம் கேள் சொல்லும்... அல்லது அதற்குள் இருக்கும் என்னிடம் கேள்... நீ அழுத காரணத்தைச் சொல்லும்"

"என்ன சத்யன் இவ்வளவு பிடிவாதம்?"

"இதுக்குப் பெயர் பிடிவாதமில்லை சிமி..... என் வாழ்க்கை..... இப்போ தொலைச்சிட்டா பிறகு அது கிடைக்கும் போது நானிருக்க மாட்டேனே?"

"சத்யன் மறுபடியும் சொல்றேன்..... இதுபோல் ஆன்லைன் காதல் அத்தனையும் ஒருவித மாயை... இனக்கவர்ச்சி...... எதிர்பக்கம் இருப்பது வேறு பாலினம் என்பதால் ஏற்படும் ஒருவித கவர்ச்சி தான் இது.... தொடர்ந்து சில நாட்கள் பார்க்காமல் இருந்தால் மாறிவிடும் இந்த மாயை.....



"ஹாஹாஹாஹா கவிதாயிணி ஆச்சே.... உனக்கு பேசவா தெரியாது? ஆனா சிமி நீ சொல்ற இதெல்லாம் நிஜமா நேசிக்கிறவனுக்குப் பொருந்தாது..... கற்சிலையாக இருந்த கண்ணனை காதலித்த மீராவுக்கு எந்த ஆன்லைனும் உதவி செய்யலை.... அதுபோல் தான் என் காதலும் இந்த ஆன்லைன் இல்லாவிட்டாலும் நான் உன்னை நேசிப்பேன்...."

"அது உங்களோட தலைவலி,, எனக்குத் தேவையற்றது.... நான் திருமணம் ஆனவள் என்பது மட்டும் நிஜம்.... அதை மனதில் வைத்து பேசுங்கள்"

"எனக்கு சில சந்தேகங்கள் சிமி,,

"என்ன சந்தேகம் கேளுங்க,, தெரிஞ்சதை சொல்றேன்"

"எனக்கு சந்தேகமே நீ சொல்வதில் தான் சிமி,, நீ திருமணம் ஆனவள்னு சொல்ற ஓகே,, ஆனா உனது கவிதைகள் அத்தனையும் அம்மா இருந்தாங்க... அம்மாவைப் போல ஒரு உறவைத் தேடும் தேடல் இருந்தது... ஒரு கவிதையில் கூட உன் கணவனோ(?) அவன் மீதான காதலோ இல்லையே? இதிலே தெரியுதே நீ சொல்வது எத்தனைப் பொய்னு" நாக்கைத் துருத்தி ஏளன் செய்யும் பொம்மையின் படத்துடன் மெசேஜை அனுப்பினான்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 11-07-2019, 10:03 AM



Users browsing this thread: 1 Guest(s)