11-07-2019, 10:02 AM
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 9
மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு இணையத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.....
வழக்கம் போல அலுவல்கள் முடித்து பணிரெண்டு மணி வாக்கில் தனது மெயிலைத் திறந்தாள்... சத்யனிடமிருந்து ஏராளமான மெயில்கள் வந்திருந்தன... ஒவ்வொன்றாக திறந்தாள்.....
எல்லாம் புகைப்படங்கள்... சத்யன் மட்டும் தனியாக சில படங்கள்..... அம்மா அப்பாவுடன் சில படங்கள்..... எண்ணற்றப் படங்களில் அவளின் எண்ணத்தின் நாயகன்.... வித விதமான போஸ்களில் அழகனாக ஆணழகனாக சத்யன்.... பிரமிப்பு நீங்காது பார்த்துக் கொண்டேயிருந்தாள்
கடைசியாக ஒரு மெயிலில் அவனது பெங்களூர் வீட்டு முகவரி தொலைபேசி எண்... பின்னர் அவன் கலிபோர்னியாவில் தங்கியிருக்கும் வீட்டின் முகவரி அவனது கைப்பேசி நம்பர் படிப்பு மற்றும் அவர்களது குடும்ப தொழில் விபரம் என எல்லாவற்றையும் விளக்கமாக எழுதிவிட்டு கடைசியா "என்னை இப்போதாவது நம்ப முடிகிறதா சிமி?" என்று கேட்டிருந்தான்...
மான்சியின் இதயம் நிமிடத்தில் குலுங்கிப் போனது.... உன்னை நம்பாமல் இந்த உலகத்தில் வேறு யாரை நம்புவேன் சத்யா?.... என்று இதயம் ஓசையின் கதற... மானிட்டரில் தெரிந்த தனது காதலனின்... கணவனாக வரித்துக் கொண்டவனின் படத்தையே உற்றுப் பார்த்தாள்...
எத்தனை அழகு என்னவன்? அடர்ந்த கிராப்பை கலைத்துவிட்டிருக்கும் ஸ்டைல்..... ஆங்கிலேயனைப் போல் அகன்ற நெற்றி.... அதில் குத்தீட்டியாய் கூர்ந்து நோக்கும் கண்கள்.... அரேபியனைப் போன்ற கத்தியாய் நேர் நாசி.... தாடையில் ட்ரிம் செய்யப்பட்ட இருநாள் ரோமம் அவனுக்கு அழகாய்...... தடித்த உதடுகளில் நிக்கோடினின் தடங்கள்.... அகன்ற மார்பும் விரிந்த தோள்களும் அவனது உடற்பயிற்சியைக் கூற... ஆண்களுக்கே அவன் உயரமென்பதை அத்தனைப் புகைப்படமும் சொன்னது.... எத்தனையோ விதமான உடைகளில் அவனது உருவம்....
அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார்ப்போல் பட்டுவேட்டி சட்டையில் ஏதோவொரு கோவிலில் பெற்றோருடன் இருந்த படம் அவளது இதயத்தைக் கொள்ளைகொண்டது....
இவனுடன் வாழும் பாக்கியம் தனக்கில்லை என்ற வெறுமை நெஞ்சை அடைக்க கண்ணீர் துளி தன்னைக் காட்டிக் கொடுக்காதவாறு அடக்கிக் கொண்டு கொள்ளையடித்தவனை இதயக்கூட்டுக்குள் வைத்து அடைத்து விட்டு சாட்டை ஆன் செய்தாள்....
அவளுக்காகவே காத்திருந்தவன் போல் உடனே வந்தான் "என்ன மேடம்,, நான் தேறுவேனா?"
"எதுக்கு தேறணும்? இங்கே என் இன்ட்டர்வியூவா நடக்குது?"
"ம்ம்,, சொன்னாலும் சொல்லாடியும் கூட இது இன்ட்டர்வியூ தான்.... வாழ்க்கைக்காக நடக்கும் இன்ட்டர்வியூ"
"உளறாதீங்க சத்யன்"
"உளறல் இல்லை சிமி இது உண்மை... என் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் தேர்வு இது.... சொல்லு சிமி நான் எப்படியிருக்கேன்?"
அவன் கேள்வியின் அர்த்தம் உள்ளுக்குள் சென்று உரசிப் பார்த்தது "ம்ம் நல்லா தான் இருக்கீங்க சத்யன்... நல்ல பேமிலியும் கூட... உங்களை மேரேஜ் செய்துக்கப் போகும் பெண் கொடுத்து வைத்தவள்"
"ம்ம் தாங்க்ஸ் சிமி... அவதான் யார்னு தெரிஞ்சி போச்சே.... அதனால இந்த வாழ்த்தை நீ நேரடியாகவே சொல்லலாம்"
மான்சியின் அடிவயிறு தடதடக்க ஆரம்பித்தது.... கடவுளே இவனை அடக்க வழியில்லையா? இவள் கடவுளுக்கு கோரிக்கை வைக்கும் போதே அவனிடமிருந்து மெசேஜ் "சிமி நான் ஒண்ணு சொல்லனும்"
"ம்ம் சொல்லுங்க" விரல்கள் நடுங்க டைப் செய்தாள்....
"நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் சிமி... இத்தனை நாளா நெஞ்சுக்குள்ள வச்சுக்கிட்டு தவிச்சத்துக்கு இன்னைக்கு தான் முடிவு வந்திருக்கு" ஹாப்பி பொம்மையுடன் அவனது சந்தோஷ வரிகள்
"ம்ம்"
"என்னடா? நான் என்ன சொல்லப் போறேன்னு உன்னால யூகிக்க முடியுதா?"
"இல்ல... தெரியலை"
"நீ நடிக்கிறடி கள்ளி... உனக்குத் தெரியும் என் மனசு... ஆனாலும் என் வாயால அதை சொல்லனும்னு ஆசைப்படுற தானே?" லவ் ஸ்மைலி ஒன்று
"இல்ல சத்யன் எனக்கு நிஜமாவே புரியலை... தெரியலை"..... எவ்வளவு பெரிய பொய்
"ஓகே நீ நடிக்கிறேன்னு உனக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்.... இப்ப நானே சொல்லிடுறேன்"
"ம் சரி"
"சிமி.... நான் உன்னை விரும்புறேன் சிமி.... உயிருக்குயிறா நேசிக்கிறேன்.... ஐ லவ் யூ சிமி"
சொல்லியே விட்டான்... அவளின் சத்யன் தன் காதலை சொல்லியே விட்டான்.... இதயம் வெடித்து கதற வேண்டும் போல் இருந்தது தலையில் அடித்துக்கொண்டு தனது துயர் தீர ஓலமிட வேண்டும் போல் இருந்தது.... எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத நிகிழக்கூடாத கொடுமையிது... உயிர் காதலை அவளே மறுக்க வேண்டிய கொடுமை....
அலுவலகத்தில் அத்தனை பேரும் மதிய உணவிற்காக சென்றுவிட உண்மையாகவே கண்ணீர் விட்டு கதறியழுதாள்...
‘அம்மா என்ன வாழ்க்கையம்மா இது? நான் கேட்டேனா இப்படியொரு சம்பவப் பிணைப்பை... ஏனம்மா இத்தனை முடிச்சுகள் என் வாழ்வில் மட்டும்.... நீ நிறைந்த நீரோடு என்னையும் அழுத்தியிருக்கலாமே அம்மா,, காப்பாற்றிவிட்டு கடும் துன்பத்தைக் கொடுத்துவிட்டாயே? உன் பிஞ்சு மகள் இத்தனை சுமையை சுமப்பேனா என்று நீ யோசிக்க மறந்ததேனம்மா??’

first 5 lakhs viewed thread tamil