வயது ஒரு தடையல்ல! - Completed
#5
2.
 
பத்து வருடங்கள் கழித்து இன்றுதான் அக்கா என்று அழைத்திருக்கிறேன்!
 
அவள் இந்த வீட்டுக்கு வந்து, சில மாதங்கள் கழித்து, அவளாக நெருங்கி என் மேல் பாசம் காட்ட முயன்ற போது கூட, அவளை உதாசீனப்படுத்தியவன்! அதற்குப் பின்பும், எப்பொழுதாவது, மிகக் குறைவாக பேசியவன், அதுவும் அவளாக என்னிடம் பேசினாலொழிய பேசாதவன், இன்று நானாக அக்கா என்று சொன்னவுடன் அவளால் தாங்க முடியவில்லை!
 
தனக்கென்று யாரும் இல்லை என்று புலம்பியவளிடம், நான் இருப்பேன் என்று காட்டிய அன்பினை, அவளால் தாங்க முடியவில்லை! அவள் பாரம் தீர, என் மார்பிலேயே நீண்ட நேரம் அழுதாள்!
 
அவள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, இத்தனை நாளாக அவள் மனதில் இருக்கும் ஒரு விதமான அனாதை என்ற உணர்வையும், ஏன் இவ்வளவு நாளாய் இந்த அன்பைக் காட்டவில்லை என்ற கோபத்தையும், இன்னும் அவள் மனதில் இருந்த சின்னச் சின்ன கவலைகள் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்தாள்! ஆகையால் ரொம்ப நேரம் அழுதாள்!
 
அவளை அணைத்த படியே நானும் இருந்தேன்.
 
அழுதது அவளாயினும், அவளுடன் சேர்ந்து எனது இறுக்கம், கவலையும் கூட கரைவது போன்ற ஒரு உணர்வு! அவ்வளவு சோகத்திலும், நானும் இதே மனநிலையில் இருப்பேன் என்று எண்ணியிருந்தாள் போலும்.
 
என்னையும் தேற்றுவது போல், அவள் கைகள், என் முதுகை முழுதாக தடவிக் கொடுத்தது! என்னை ஆசுவாசப்படுத்தியது!

[Image: newpg-gharshana128.jpg]
அக்கா இல்லையா? மூத்தவள் கடமையை செய்கிறாள் போலும். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது! அவள் எப்போதும் இப்படித்தான், பாசத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பாள்!

 

நீண்ட நேரம் அழுதவளின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது! சிறிது நேரம் கழித்து விலகினாள்!

 

பாட்டில் தண்ணீரை நீட்டினேன்! குடித்தவள் தாங்க்ஸ் என்றாள்! அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு!

 

கொஞ்சம் இரு வரேன்!

 

சமையலறை சென்று இரண்டு கப்களில் டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்ற போது, அவள் முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்று இருந்தாள்! நான் டீயுடன் வந்ததை விட, நான் திரும்ப வந்தது, அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது!

 

தாங்க்ஸ்!

 

குடி!

 

குடித்து முடித்தும், இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். சிறிது நேரம் கழித்து சொன்னேன்.

 

இப்ப சொல்லு! என்ன உன் பிரச்சினைன்னு?

 
அவள் என்னை பார்த்தாள்! அதில பல கேள்விகள்!

[Image: newpg-gharshana14.jpg]

நீ உண்மையான அக்கறையில கேக்குறியா? இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம்? என் மேல பரிதாபப்படுறியா? உன்னை மாதிரியே, எனக்கும் யாருடைய பரிதாபமும் புடிக்காதுன்னு தெரியாதா உனக்கு? எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!

 

எனக்கும் புரிந்தது. மெதுவாகச் சொன்னேன்.

 

இதுவரைக்கும் நடந்ததை மாத்த முடியாது! அதுக்குன்னு சில விளக்கங்கள் இருக்கும். மாத்த முடியாட்டியும், ஏன் அப்புடி நடந்துன்னு பேசி புரிஞ்சிகிட்டு, இனி அப்படி நடக்காம பாத்துக்கலாம். ஆனா, அது அவ்ளோ முக்கியம் இல்லை இப்ப!

 

இப்ப முக்கியம், உன் பிரச்சினைதான். என்னால, நீ தற்கொலை வரை போனதை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. அப்படி என்ன பிரச்சினை உனக்கு?

 

அவள் இன்னும் வாய் திறக்கவில்லை!

 

நான் ஒண்ணும் வாய் வார்த்தைக்காக சொல்லலை. நான் தள்ளிதான் நின்னேனே ஒழிய, வெறுத்தது கிடையாது. உன்னை எனக்கு எப்பியுமே பிடிக்கும். இன்னும் சொல்லப் போனா, நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்! பெரிய இன்ஸ்பிரேஷன். சுத்தி நடக்குற எந்தப் பிரச்சினையும் நம்மை பாதிக்காம, தன்னைத் தானே ஒழுங்கா எப்புடி வளத்துக்குறதுன்னு உன்னைப் பாத்துதான் கத்துகிட்டேன்.

 

உன் ஒழுக்கம், தைரியம், மனவலிமை முக்கியமா, காசு பெருசில்லைன்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்! அப்படிப்பட்ட நீ இன்னிக்கு இப்பிடி பண்ணங்கிறதை என்னால தாங்க முடியலை.

 

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். எப்போதும் உணர்ச்சியைக் காட்டாத கல்லைப் போல இருப்பவன், இன்று இவ்வளவு பேசியது, அவளுக்கும் மிக்க ஆச்சரியம். அவளும் உணர்ச்சிவயப்பட்டு இருந்ததை அவள் கலங்கிய கண்கள் சொல்லியது.

 

மெல்ல அவள் கையைப் பிடித்தேன். நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணதையே என்னால தாங்க முடியலை! ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது?! இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே? ஹரீஷ் என்ன ஆனாரு? உன் மாமானார், மாமியார் என்ன ஆனாங்க? மறந்தும் நான், அவள் அப்பா, அம்மாவைப் பற்றி கேட்கவில்லை.

 

எனது அன்பில் மிகவும் கரைந்தாள். இருந்தும் தயங்கினாள்! என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்! அவள் உதடுகள் மட்டுமல்ல உடலும் நடுங்கியது!

 

அவள் சொல்லி முடித்தாள்!

 

கடுங்கோபத்திலும், திக்பிரம்மை பிடித்தும் இருந்தேன். செயல்களை விட, செய்யத் துணியும் ஆட்கள், அவர்கள் ஸ்டேட்டஸ், வயது, உறவு இவைதான் எனக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தது.

 

என் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். எனக்கே, இப்படி இருக்கையில், இவளுக்கு எப்படி இருக்கும்!

 
அவள் சொன்னது அப்படி!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 2 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 11-07-2019, 09:55 AM



Users browsing this thread: 9 Guest(s)