Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
காலைப் பிடித்து கெஞ்சிய மகளை அடித்துக் கொன்ற தந்தை

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சண்டையில் ‘அம்மாவை அடிக்காதீங்கப்பா’ என தந்தையின் காலை பிடித்து கதறிய சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைத்ததாக தாயும் கைதானார். நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
[Image: mur_2.jpg]
 
வி.கே.புரம் ராமலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் கைலாஷ் (37). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு லீலாவதி (34) என்ற மனைவியும் ஐஸ்வர்யா (13), சுகிர்தா (7) என்ற இரு மகள்களும் உள்ளனர். சுகிர்தா உள்ளூர் பள்ளியில் 2ம் வகுப்பும், ஐஸ்வர்யா ஆழ்வார்குறிச்சி பள்ளியிலும் படித்து வந்தனர்.
 
கைலாஷ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர்காலம் கருதியாவது மது குடிக்காதீர்கள் என லீலாதி கண்டித்தார். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் லீலாவதியை கைலாஷ் தாக்கினார். இதைப்பார்த்த சிறுமி சுகிதர்தா ‘அம்மாவை அடிக்காதீங்கப்பா’ என தந்தையின் காலை பிடித்து கெஞ்சியுள்ளனார்.
ஆத்திரமடைந்த கைலாஷ் சிறுமியை அடித்து உதைத்து தள்ளியுள்ளார். அடியை தாங்கிக் கொண்டு எழுந்து வந்த சிறுமி, மீண்டும் ’அம்மாவை அடிக்காதீங்கப்பா…. ப்ளீஸ்ப்பா’ என கெஞ்சியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கைலாஷ், சிறுமியை அடித்து தூக்கி வீசியதில் சுவரில் தலை மோதியது. இதில் சிறுமி சுகிர்தா தலையிலும், நெற்றியிலும் காயமடைந்து மயங்கி சாய்ந்தாள். இதைக்கண்டு பதறிய இருவரும் உடனே அவளை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பெற்றோரிடம் டாக்டர் விசாரித்த போது, மாடிக்கு விளையாடச் சென்ற சிறுமி கீழே இறங்கி வரும் போது கால் இடறி விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் வி.கே.புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
 
தகவலறிந்த அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன், வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக கணவன், மனைவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் சிறுமி மாடியில் இருந்து இறந்து வரும் போது தான் தவறி விழுந்து விட்டாள், உடனே நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அதற்குள் இறந்து விட்டாள் என கூறினர்.
 
போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி.யின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்பக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கணவன் மீது கொலை வழக்கும், அதற்கு உடந்தையாக இருந்து குற்றத்தை மறைத்ததாக மனைவி மீதும் வழக்கும் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். 
 
பெற்றோர் சண்டையில் மகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 11-07-2019, 09:22 AM



Users browsing this thread: 98 Guest(s)