11-07-2019, 09:18 AM
இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோலி விளக்கம்!
தோனியும், ஜடேஜாவும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷாட்களை நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். அது தவிர நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம். மேலும் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை என தெரிவித்தார்.
மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டி மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்பு அதே நிலையில் இருந்து போட்டி இன்று மீண்டும் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து அணியின் இலக்கை நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் முதல் அரைமணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவர்கள் தான்.
தோனியும், ஜடேஜாவும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷாட்களை நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். அது தவிர நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம். மேலும் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை என தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil