02-01-2019, 07:10 PM
அதைத்தொடர்ந்து, பயனாளர் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும். பயனாளர்கள் ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியில், பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
ஆபத்து நேரத்தில் காவலன் sos செயலியில் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் போது, அவசரத்தில் காவல்துறையை அழைப்பதற்குச் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் SOS என்ற பட்டனை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விடும்.
அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது. மேலும், அழைப்பவரின் அந்த நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரியல்டைம் டிராக்கிங் வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் இந்தச் செயலியில், பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும். காவலன் Kavalan SOS app பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வுத் தூண்டல் (shake trigger) வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாகச் செயல்படும்.