02-01-2019, 07:10 PM
காவலன் SOS செயலியின் பயன்
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஆப்கள் அவர்களுக்கு அவசர காலங்களில் உதவிகரமாக இருக்கும். பெண்கள் அல்லது வயது முதியவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
பதிவிறக்கம் செய்த பிறகு, அப்ளிகேஷனை ஓபன் செய்தால், பயனாளர்களின் வசதிக்கேற்ப ஆங்கிலம் / தமிழ் என்று இரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொழியைத் தேர்வு செய்த பிறகு, ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும். ரிஜிஸ்டிரேஷன் (registration) என்ற பக்கத்தில், பயனாளர்கள் தங்கள் அலைபேசி எண், பெயர், மாற்று அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின் நெக்ஸ்ட் (NEXT) பட்டனை அழுத்த வேண்டும்.