Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
smart apps
#1
அவசர உதவிக்கு ஆண்ட்ராய்டு ஆப்... தமிழ்நாடு போலீஸின் ஆப் எப்படி இருக்கிறது? #KavalanSOS
ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
[Image: 146144_thumb.jpg]
பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகக் காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் `KAVALAN SOS APP' (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அது என்ன காவலன் SOS செயலி?
சமீபத்தில் தமிழக காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலன் SOS கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை வைத்திருந்தால் பொதுமக்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
smart apps - by johnypowas - 02-01-2019, 07:07 PM
RE: smart apps - by johnypowas - 02-01-2019, 07:10 PM
RE: smart apps - by johnypowas - 02-01-2019, 07:10 PM
RE: smart apps - by johnypowas - 02-01-2019, 07:11 PM
RE: smart apps - by johnypowas - 21-01-2019, 11:54 AM
RE: smart apps - by johnypowas - 21-01-2019, 11:55 AM
RE: smart apps - by johnypowas - 21-01-2019, 11:59 AM
RE: smart apps - by johnypowas - 24-01-2019, 06:48 PM



Users browsing this thread: 1 Guest(s)