9 hours ago
(Yesterday, 08:50 AM)Tamil reader Wrote: நண்பர்களே மன்னிக்கவும் xossipy அப்டேட் வந்ததால் தெரியாமல் கைபட்டு பெரிய மெசேஸ் வந்துவிட்டத்து மன்னிக்கவும்
ஆசிரியர் கவனத்திருக்கு நீங்கள்
யார்ரோ ஒருத்தி
Sahjith
இவர்களின் சொற்களின் கூட்டிற்கு நீங்கள் மனது மாறிவிட்டீர்கள் என்று நினைக்கிறன்
தயவுசெய்து கதையின் போக்கை மாற்றவேண்டாம் தயவு செய்து
அப்படியே தொடருங்கள்
நண்பரே, முதலில் மற்றவர்கள் எழுதும் கருத்துகளை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். அரைகுறையாகப் படித்துவிட்டு வந்து அறிவுரை சொல்ல வேண்டாம்.
பவித்ரா யாருடன் சேர வேண்டும், யாருடன் ஓடிப்போக வேண்டும், யாரைக் கொல்ல வேண்டும், அடுத்ததாக என்னென்ன பாலியல் காட்சிகள் வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைப்பதெல்லாம் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளாக இருக்கலாம். ஆனால் கதையின் ஆரம்ப நோக்கம், கதாபாத்திரங்களின் உளவியல், எழுத்தின் தரம் பற்றிப் பேசினால் மட்டும் ஆசிரியரைக் குழப்புகிறோம் என்று சொல்கிறீர்கள்.
அப்படியென்றால் உங்களுடைய பார்வையில் கதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல் என்ன? உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் கருத்துகள் மட்டும்தான் சரியான கருத்துகளா?
இது காமக்கதையாக இருந்தாலும் அதற்கென்று ஒரு கதைநியாயம் வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாலியல் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பாக மட்டுமே அணுகுவது வாசிப்பு விமர்சனம் அல்ல.
நீங்கள் எதற்காக இந்தத் தளத்திற்கு வருகிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்களுடைய விருப்பத்தையே ஒட்டுமொத்த வாசகர்களின் வாசிப்பு நோக்கமாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.
மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் எழுதியிருப்பதைப் புரிந்துகொள்ளும் பொறுமையாவது இருக்கட்டும்!
- Shajith
