♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
என்னவென்றே தெரியவில்லை... சில வாசகர்களைப் பற்றி மட்டும் என்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கதை அப்டேட் கொடுக்க முடியாத நேரத்தில் மட்டும், “ஏன் இன்னும் அப்டேட் வரவில்லை?” என்று கேட்கிறார்கள். ஆனால், அப்டேட் கொடுக்கும்போது மட்டும் ஒரு லைக், ஒரு சின்ன கமெண்ட் கூடப் போடுவதில்லை.

நான் இப்போது போட்ட அப்டேட்டை வைத்துச் சொல்லவில்லை. கடந்த ஒரு மாதமாக நான் கொடுத்த அப்டேட்களை மனதில் வைத்துத்தான் இதைச் சொல்கிறேன்.

ஒரு கதையைத் தொடர்ந்து எழுதுவது என்பது வெறும் எழுத்துகளைக் கோர்ப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியையும் யோசித்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கி, அடுத்தடுத்த பகுதிகளை எழுதுவது என்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு பெரிய உழைப்பு என்பது எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும்.

அந்த உழைப்புக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் ஒரு சின்ன லைக், ஒரு வரி கமெண்ட்... இவைதான் அடுத்த பகுதியை எழுதுவதற்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

நீங்கள் போடும் கமெண்ட்தான் எங்களைத் தொடர்ந்து கதை எழுத வைக்கிறது என்பதை எப்போது உணரப்போகிறீர்களோ, அப்போதுதான் பல கதைகள் பாதியிலேயே நின்றுபோகாமல் இருக்கும்.

கதை நன்றாக இல்லை என்றால், “இந்தப் பகுதி எனக்குப் பிடிக்கவில்லை” என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதைக்கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களும் ஒரு எழுத்தாளருக்குத் தேவைதான். Raju Vijay நண்பர் இதைச் சரியாகச் சொல்வார்.

எல்லா வாசகர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட் போட வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கதையைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், அந்தக் கதையைத் தொடர்ந்து எழுதுவதற்கான சிறு ஊக்கத்தையும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் என் ஆதங்கம்.

இதுவரை நான் ஒரு விஷயத்தை மட்டும்தான் மனதில் வைத்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை கதையை நல்லபடியாக எழுதி முடித்துவிட வேண்டும்.

அதற்காகத்தான் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அதற்குப் பிறகு...

கதையைத் தொடர வைப்பதும், பாதியிலேயே நிறுத்த வைப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒரு எழுத்தாளரின் பேனா தொடர்ந்து ஓடுவதற்கு மை மட்டும் போதாது... அதைத் தொடர்ந்து எழுத வைக்க வாசகர்களின் ஆதரவும் தேவை! ❤️
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள். - by Geneliarasigan - 22-10-2026, 12:18 AM



Users browsing this thread: 5 Guest(s)