7 hours ago
06
மறுநாள் மாலையே, வீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் செய்யப்பட்டன. மருத்துவமனையின் அட்மின் டீம் மற்றும் ஹோம் ஹெல்த்கேர் ஊழியர்கள் இணைந்து, போர்ட்டபிள் வெண்டிலேட்டர், பேஷன்ட் மானிட்டர், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் மற்றும் ஐ.சி.யு படுக்கை என அனைத்தையும் கச்சிதமாகப் பொருத்தி முடித்தனர்.
சிறிது நேரத்தில், சிறப்பு ஆம்புலன்ஸ் மூலமாக வினயின் தந்தை விஜயன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு, அந்த ஹோம் ஐ.சி.யு அறையில் கவனமாக மாற்றப்பட்டார். மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சூழலை விட, சொந்த வீட்டின் உணர்வு அனைவரது மனதிற்கும் ஒரு சிறிய நிம்மதியைத் தந்தது.
அதற்கு அடுத்த நாள்...
விஜயனைக் கவனித்துக் கொள்வதற்காகப் புதிதாகத் திருமணமான நர்ஸ் ஒருவர் பகல் ஷிஃப்ட்டிற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
மதிய வேளையில், தந்தை தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், அந்த நர்ஸ் தன் கணவருடன் அலைபேசியில் ரகசியமாகவும் கொஞ்சலாகவும் பேசிக் கொண்டிருந்தார். புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கே உரித்தான அந்தச் சிலிர்ப்பான உரையாடல்களும் லேசான சிரிப்பொலிகளும் அந்த அறையின் அமைதியில் மெலிதாக ஒலித்தன.
திடீரென, கவனிப்புப் பணியில் ஈடுபட்ட அந்த நர்ஸ் பேரதிர்ச்சி அடைந்தார். சுயநினைவற்று மரணப் போராட்டத்தில் இருக்கும் விஜயனுக்கு, விறைப்பு (Erection) ஏற்பட்டிருந்தது. அதைவிட அதிர்ச்சி, நீண்ட நேரமாகியும் அது இயல்பு நிலைக்குத் திரும்பவே இல்லை.
பதறிப்போன நர்ஸ், உடனடியாக வெளியே ஓடிவந்து வினயிடம் விஷயத்தைக் கூறி டாக்டருக்கு ஃபோன் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
வினய் பதற்றத்துடன் உடனடியாக டாக்டர் செழியனைத் தொடர்புகொண்டு நிலைமையை விவரித்தான்.
டாக்டர் செழியன் மிக நிதானமாக, ஒரு மருத்துவ விளக்கமளித்தார். "வினய், இதைப் பார்த்துப் பயப்படவோ அல்லது தவறாக நினைக்கவோ தேவையில்லை. மனித மூளை தன் கட்டுப்பாட்டை இழந்து கோமா அல்லது சுயநினைவற்ற நிலையில் இருந்தாலும், தண்டுவடத்தின் அனிச்சைச் செயல் (Spinal Reflex) காரணமாகச் சுற்றியிருக்கும் சில ஒலிகளையோ உணர்வுகளையோ உடல் அறியாமலேயே கிரகித்து இப்படி நடக்க வாய்ப்பிருக்கு. இதை மருத்துவத்துல 'பிரியாபிசம்' (Priapism) அப்படின்னு சொல்வோம். கேன்சர் தாக்கம் மற்றும் இரத்த ஓட்டக் கோளாறு காரணமாக நரம்புகளில் இரத்தம் முடங்கிப்போய், அந்த விறைப்பு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் லாக் ஆயிடும். இது அவரோட இறுதி நேர நரம்பு மண்டலக் கோளாறின் அறிகுறிதான்" என்று விளக்கினார்.
ஃபோனை வைத்த வினய், டாக்டர் சொன்ன பிரியாபிசம் பற்றிய மருத்துவ விளக்கத்தை அப்படியே ஹாலில் நின்றிருந்த அத்தையிடம் கூறினான்.
அத்தையின் முகத்தில் ஒரு வினாடி விவரிக்க முடியாத ஷாக்குகள் தோன்றி மறைந்தன. அது அதிர்ச்சியா, கவலையா அல்லது ஒரு பெண்ணின் ஆழமான ஏக்கத்தின் பிரதிபலிப்பா என்று வினயால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அக்னி கல்லூரிக்கு சென்றிருக்க, இரட்டையர்கள் இருவரையும் தன் அண்ணன் இருக்கும் அறைக்குள் நுழைய விடாமல் தடுப்பதே பெரிய வேலையாக இருந்தது. தன் அண்ணனை தன்னுடைய இரட்டையர்கள் அந்த நிலையில் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. வினய்யும் ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த நிலையில் தன் அப்பாவை மீண்டும் ஹாஸ்பிட்டல் கூட்டிச் செல்லப் போவதாக தன் அத்தையிடம் சொன்னான் வினய்.
"நீ கொஞ்சம் வெளியவே இருப்பா வினய்..." என்று மெல்லிய குரலில் சொன்ன அத்தை, அந்த நர்ஸையும் வெளியே அனுப்பிவிட்டு, தமையன் விஜயன் இருக்கும் அந்த ஹோம் ஐ.சி.யு அறையின் கதவை உள்ளிருந்து தாழிட்டுக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து... அறையின் கதவு திறந்தது.
அத்தை அமைதியாக வெளியே வந்தாள். அவளது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வினய் உள்ளே சென்று பார்த்தபோது, தந்தையின் உடல் நிலை முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது! அந்த விறைப்பு அடங்கி இயல்பாக இருந்தது.
வினய் உறைந்துபோனான்! அவனால் நடப்பதை நம்பவே முடியவில்லை. மூளையே வெடித்துவிடும் போல் இருந்தது.
"கடவுளே... ஒரு சொந்தத் தங்கை... தன் கூடப் பிறந்த அண்ணனுக்கு எப்படி இப்படி ஒரு விஷயத்தைச் செய்ய முடியும்? கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன நடந்திருக்கும்?" என்று எண்ணியபோது அவனது உடம்பில் ரத்தம் உறைந்து போனது.
அத்தை மீது இதுவரை அவன் மனதில் இருந்த பிம்பம் நொடிப் பொழுதில் சிதைந்து, முற்றிலும் வேறு ஒரு கோணத்திற்கு மாறியது. ஒரு தாயாக, பாசமான அத்தையாகப் பார்த்த அதே பெண்ணை, இப்போது அவனது மனம் ஒரு பெண் என்ற பார்வையிலும், அவளது அடக்கப்பட்ட விகாரமான தேவைகளின் வெளிப்பாடாகவும் பார்க்கத் தொடங்கியது.
அத்தையிடம் இதுபற்றி நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஆனால், அவனால் எதுவுமே செய்ய இயலவில்லை. ஏனென்றால், இரட்டையர்கள் ஒரு கணமும் அவரை விட்டு விலகாமல், எப்போதும் அவனைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தனர்.
அதே சமயம், அத்தையாலும் தன் மருமகன் வினயின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவே இல்லை.
இருவருக்கும் இடையே ஒரு பயங்கரமான, விவரிக்க முடியாத மௌனச்சுவர் எழுந்து நின்றது.
அத்தையின் முகத்தில் தெரிந்த அந்தத் தவிப்பும், கூச்சமும், வினயின் மனதில் மேலும் பல கேள்விகளைப் புயலாகக் கிளப்பின..
மாலை நேரம்... அக்னி கல்லூரி மற்றும் பிற வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் ஹாலில் நுழைந்தபோதே ஒருவித விவரிக்க முடியாத கனத்த அமைதி அவளை வரவேற்பது போல இருந்தது. சாதாரணமாக இருக்கும் அந்தச் சூழலில் ஏதோ ஒரு அசம்பாவிதம் அல்லது பதற்றம் நிலவுவதை அவளது கூர்மையான கண்கள் உடனே கண்டுபிடித்தன.
அம்மாவின் முகத்திலும், வினயின் முகத்திலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாத ஒருவிதத் தயக்கமும் குற்றவுணர்ச்சியும் படர்ந்திருப்பதை அவள் கவனித்தாள்.
"என்ன விஷயம்? மாமாவுக்கு எதும் பிரச்சனையா என்று கேட்டாள் அக்னி.
ஆனால், இருவரும் "ஒன்னுமில்லையே..." என்று எதையோ மறைப்பது போல சமாளித்தனர்.
அக்னி விடுவதாக இல்லை. உடனே தன் தங்கைகள் இருவரையும் தனியாக அழைத்து விசாரித்தாற், "மதியம் என்ன நடந்துச்சு? உங்க அண்ணனுக்கும் அம்மாவுக்கும் நடுவுல என்ன பிரச்சனை?" என்று துருவித் துருவிப் பார்த்தாள். ஆனால், மதியம் ஹோம் ஐ.சி.யு அறைக்குள் நடந்த அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு கொஞ்சமும் அறியாத அந்த இரட்டையர்கள் விழித்தார்கள்; அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. அக்னிக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், இரவு நேரப் பணிக்குரிய (Night Shift) புதிய நர்ஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். பகலில் பணிபுரிந்த நர்ஸ் அவளிடம், அன்று மதியம் விஜயனுக்கு ஏற்பட்ட விபரீதமான உடல் நிலை மாற்றம் குறித்தும், பிரியாபிசம் (Priapism) பிரச்சினை குறித்தும் விளக்கிக் கூறினாள்.
"ஒருவேளை இந்த விறைப்பு தொடர்ச்சியா நாலு மணி நேரத்திற்கு மேல நீடிச்சா, உடனே ஹாஸ்பிட்டல் கொண்டு போக வேண்டியிருக்கும்... கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க" என்று அந்த பகல் ஷிப்ட் நர்ஸ் எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
அருகில் நின்றிருந்த அக்னியின் காதுகளில் இந்த வார்த்தைகள் தெளிவாக விழுந்தன!
அந்த ஒரு நொடியில், அக்னியின் மூளையில் மின்னல் வெட்டியது போல எல்லாப் புதிர்களும் துண்டு துண்டாக ஒன்றிணைந்தன. இப்போது அம்மாவும் வினய்யும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக் கூடத் தயங்கி நிற்பதற்கான காரணம் மாமாவின் விறைப்பு நிலை என்பதை அவள் உணர்ந்தாள்.
இரவு படுக்கையில் கவிழ்ந்தும், வினய்யின் மூளை ஓய்வெடுக்க மறுத்தது.
"எனக்குத் தாயாக, பாசமான அத்தையாக இருக்க வேண்டியவள், தன் அண்ணனின் அந்த இக்கட்டான நிலையைப் போக்கச் செய்த செயல்... அது வெறும் தற்காலிகமான கடமையா? இல்லை, அவளுக்குள்ளும் புதைந்து கிடந்த ஏதோ ஒரு மறைக்கப்பட்ட இச்சையின் வெளிப்பாடா?"
கேள்விகள் அலை அலையாக வந்து அவனது மனதை வாட்டின. எந்தக் பக்கமும் தீர்வு கிடைக்காமல், குழப்பமும் கலக்கமுமாக அந்த இரவைக் கடந்தான் வினய்...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)