16-10-2026, 04:49 PM
(This post was last modified: 16-10-2026, 04:54 PM by Ujjain. Edited 1 time in total. Edited 1 time in total.)
தமிழ் ஒரு நிமிடம் பேச்சற்று நின்றாள். பிறகு மெதுவாகச் சொன்னாள்: "நான் உங்களுக்கு முன்னாடி நிக்கவே தகுதி இல்லாதவ. நீங்க சந்தோஷமா இருக்கீங்கனு தெரிஞ்சதே எனக்குப் போதும்."
"எங்களோட சென்னைக்கு வா" என்றேன் நான். "ஆனா நிபந்தனை இருக்கு. முதல்ல நீ படிச்சதை வச்சு வேலை தேடு. சொந்தக் காலில் நில்லு. வீட்ல தனி அறை. நீ நடந்துகிட்ட விதத்துக்கு உன் அம்மாவோட மன்னிப்பை சம்பாதிக்க நேரம் ஆகும்."
தமிழ் என் முன் கை கூப்பினாள். "நன்றி மாமா."
தமிழ் தலையசைத்தாள். குழந்தை அவளைப் பார்த்து கை நீட்டிச் சிரித்தான். தமிழ் அவனைத் தூக்கி முத்தமிட்டு அழுதாள். சுபித்ரா ஒரு அடி பின்வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் கோபம் குறைந்து, தாய்மையின் வலி மட்டும் எஞ்சியிருந்தது.
அன்று இரவு ரிசார்ட் பால்கனியில் சுபித்ரா என் தோளில் சாய்ந்து மெல்லக் கேட்டாள்: "நான் செஞ்சது சரியா?"
"நீ ஒரு அம்மா சுபி. அதுவே சரி."
"ஆனா அவளை முழுசா மன்னிக்க எனக்குக் கொஞ்ச நாள் ஆகும்."
"ஆகட்டும். நான் உன்கூடவே இருப்பேன்."
அவள் என் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். நான் நீண்ட மூச்சு விட்டேன். இன்று காலைசுபித்ராவிடம் என் சொந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: *ஒருநாள் அவளே வருவா. அப்போ கதவு திறந்திருக்கணும்.*

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)