10-07-2019, 10:53 AM
”வா ராசு. . எப்ப வந்த. .?” எனக்கேட்டுவிட்டு…அவனோடு பேசினார்.
அப்பாவுக்கு காபி வைத்துக் கொடுத்தாள் பாக்யா. அதைக்குடித்தவாறே… அவரது மனக்குமுறல்களையெல்லாம் ராசுவிடம் கொட்டினார். அவரது தவறையும் ஒத்துக்கொண்டார்.
இறுதியாக….
”தனியா ஒரு ஆம்பளை…வீட்ல வயசு வந்த புள்ளைய வெச்சிட்டு என்ன செய்ய செய்யறது.ராசு. அதுக்காகவாவது உங்கக்கா வந்துருக்கனும்…” என்றார்.
”நீங்க போய் கூப்பிட்டிங்களா.?”
”நாலஞ்சு தடவ போய் கூப்பிட்டு பாத்துட்டேன். அவ வரவே மாட்டேனு சொல்லிட்டா.. போனதடவ சீமாத்துலகூட அடிச்சா… அதையும் வாங்கிட்டுத்தான் வந்தேன். என்ன செய்றது… ஏது செய்றதுனு ஒன்னும் புரியல எனக்கு…! ஆனா ஒன்னு ராசு.. உங்கக்கா வல்லேன்னா… குடும்பம் அவ்வளவுதான்… நாசமாவே போயிரும்..” என வருத்தப்பட்டார்.
தன் மனதிலிருந்ததையெல்லாம் கொட்டிவிட்டு. .. இருட்டியதும் வெளியே கிளம்பி விட்டார்
அவர் போனதும்…
”ரொம்பவே வருத்தப்படறார் போலருக்கு..” எனச் சிரித்தான் ராசு.
”இவங்க ரெண்டு பேரும். . மறுபடி ஒன்னு சேருவாங்களா ராசு. .?” எனக்கேட்டாள் பாக்யா.
”சேருவாங்க…” என்றான் ”உங்கம்மாளப் பாத்து பேசனும்.
first 5 lakhs viewed thread tamil