பூங்காற்று திரும்புமா....
#14
பெரியவள் தர்ஷினி நம்பருக்கு வீடியோ கால் போட்டேன். சின்னவள் வர்ஷினி தான் எடுத்தாள்.

"ஹாய் மா. எப்படி இருக்கே..... ஹேய்.... இரு இரு..... என்ன இது முடி வெட்டி இருக்கியா?, தர்ஷு இங்க பாரு டி... அம்மா என்ன வேலை பார்த்து வெச்சிருக்குன்னு"

ஐயோ.... மாட்டிக்கிட்டேன். 

தர்ஷினி தன் மகளுக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அப்படியே என்னை பார்த்தால் .... "என்ன சுதா மேடம்.... ஆள் வேற ரேஞ்சுக்கு போயிட்டீங்க போல". ஷார்ட்ஸ் போட்டிருந்தாள். மேலே ஒரு ஸ்லீவ்-லெஸ் டாப். டாப்பை தூக்கி அவள் பால் கொடுக்க, இன்னொரு முலை சரியாக மூடாமல் இருந்தது. (வர்ஷினியும் அதே டிரஸ் தான்.... என்ன இதுங்க ரெண்டும் ஒரு பிள்ளை பெத்ததுக்கே இப்படி குலைதள்ளி போனா மாதிரி மாரு பெருத்து கிடக்கு?! அதிலும் பெரியவளை விட சின்னவள் குடங்கள் பெருத்து தெரிந்தது. அது சரி, வீட்டு வேலை இல்லை. இப்படியே போனால் இருவரும் வெயிட் போட்டு விடுவார்களோ என்று பயமாக இருந்தது. 2 பிள்ளைகள் பெற்று இருவருக்கும் பால் கொடுத்தும் (கணவரையும் சேர்த்தால் மூவருக்கும்) என் முலைகள் அளவை மீறி இருந்ததில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டு வேலைகள் செய்து செய்து என் உடல் கச்சிதமாக இன்னமும் இருக்கிறது!)

"டாப்பை சரி பண்ணு தர்ஷு. பால் கொடுக்கும்போது மேலே துண்டோ ஷாலோ போட்டு மூடிக்கிட்டு குடுங்கன்னு ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லியிருக்கேன் இல்ல" என்ன இருந்தாலும் நான் அம்மா. அந்த அதட்டலோடு பேசினேன். 

வர்ஷினி தான் பதில் பேசினாள் "ஹலோ மேடம்.... இது உங்க வீடு இல்ல. எங்க வீடு. எங்களுக்கு எப்படி இருக்கணும்னு தெரியும். பேச்சை மாத்தாத..... ஹேர் ஸ்டெயில் மாறி இருக்கு. மூஞ்சுக்கு செம ப்ளீச்சிங் போல. வீட்டுல கூட இப்போல்லாம் லிப்ஸ்டிக் போடுற?"

எனக்கு சற்று எரிச்சலாக வந்தது. ரெண்டு பெண்களையும் ரொம்ப கட்டுப்பாடோடு வளர்த்தேன். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் கல்யாண பேச்சு தொடங்கிய சமயத்தில் கூட பெரியவளை அடித்து இருக்கிறேன். சின்னவள் அடிக்கடி வாங்குவாள். இப்போது எங்கிருந்து இருவருக்கும் இவ்வளவு தைரியம் என்று தோன்றியது. சரி, கல்யாணம் ஆயிடிச்சு. அதுவும் பெரிய இடத்தில்.... அவர்கள் இருவரும் என்னைப்போலவே குடும்பத்தலைவிகள். இருக்கட்டும்.

"நான் வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கேன் டி " பொங்கி வந்த என் கடுப்பை அடக்கிக்கொண்டு.

"இப்போ என்ன மணி அங்கே? சாயந்திரம் 4 இருக்குமா? இப்போ எங்கே கிளம்புறே? அப்பா வர்ற நேரமாச்சே?" தர்ஷினி குரல் கொடுத்தாள் 

ஸ்ஸ்ஸ்ஸ்.... இவளுங்க பேசுற தொனியே எரிச்சலா வருது 

"அப்பாக்கு தெரியும்டி. பெரியப்பா கூட ஒரு மீட்டிங்கு கிளம்புறேன். இன்னும் ட்ரெஸ் சேஞ் பண்ணலை."

"ஓ..." இருவரும் கோரஸாக.

"மேடத்தோட டிரஸ் என்னவோ" தர்ஷு குரலில் செம நக்கல்.

"ஏண்டி ரொம்ப நாள் கழிச்சி பேசுறோம். எப்படி இருக்கீங்க. குழந்தைகள் எப்படி இருக்காங்க. ரீத்து குட்டி பால் குடிக்கிறா. ரியா குட்டி எங்க? அதையெல்லாம் விட்டுட்டு...."

"ஓ... அப்படிங்களா மதர் மேடம். ரியா தூங்குறா. ரீத்துவும் பால் குடிச்ச உடனே அநேகமா தூங்கிடுவா. மூத்தவர கட்டிக்கிட்ட என் தங்கச்சி வர்ஷினியும், இளையவர கட்டிக்கிட்ட தர்ஷினியாகிய நானும் சௌக்கியமா இருக்கோம். எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த உத்தம மகா ராசாக்களும் சௌக்கியமா இருக்காங்க. போதுமா? அங்கே நீயும், எங்க அப்பாவும், உன் கொளுந்தனாரும் நல்லா இருக்கீங்களா?" 

ஏன் பெரியப்பான்னு சொல்ல மாட்டாளா. அது என்ன உன் கொழுந்தனார்? ரொம்பத்தான் துளிர் விட்டு போச்சு.

"நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்" சீக்கிரம் பேச்சை முடிக்கணும். இன்னும் டிரஸ் பண்ணிட்டு கிளம்பனும் வேற.

"அப்புறம் தொழிலதிபர் மேடம்.... ரொம்ப நாள் கழிச்சி பேச காரணம் நாங்க கிடையாது. இந்த பங்களாவிலே தான் கதியா கிடக்கோம். வெளிய போயே 2 வாரம் இருக்கும். இல்லடி தர்ஷு.... பொழுது விடிஞ்சி பொழுது போனா இந்த அரண்மனை மாதிரி வீடு. பேச்சுத் தொணைக்கு ஒரு இலங்கை வேலைக்காரி, ஒரு மலாய்  வேலைக்காரி. எங்க புள்ளைங்களை பார்த்துக்கிட்டு, ராத்திரி ஆம்பளைங்க வீடு வந்தா அவங்க சொல்றாப்ல நடந்துக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு எந்த கிளாசும் இல்ல. எந்த மீட்டிங்கும் இல்ல. எப்போ போன் பண்ணாலும் எடுத்து பேசுவோம்" வர்ஷினி குரல் உடைந்தது. தர்ஷினி தோளில் சாய்த்துக்கொண்டு விம்மினாள்.

எனக்கு சங்கடமாக போய் விட்டது. கண் கலங்கக்கூடாது. பெர்சனாலிட்டி டிரைனிங்கில் முக்கிய பாடம். 

குரலை திடப்படுத்திக் கொண்டேன். "இங்க பாருங்க பொண்ணுங்களா.... உங்களுக்கு தெரியும். வீடே கதின்னு கிடந்தவ தான் நானும். உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையனும், அதுல நீங்க நல்ல நடந்துக்கணும்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தவ தான் நான். இப்போ உங்களுக்கு பெரிய இடத்துல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அம்மாவும் அப்பாவும் உங்க பிரசவத்தப்போ வந்து பார்த்துக்கிட்டோமே. என் பொண்ணுங்க கண் அசைவுக்கு 2 வேலைக்காரி, ஒரு டிரைவர், ஒரு தோட்டக்காரன்னு நல்லபடியா வாழுறது எங்களுக்கு ரொம்ப சந்தோசம், பெருமை. உங்க புருஷங்களும் மோசமில்லை. உள்ளூர்ல மாப்பிள்ளை அமைஞ்சிருந்தாலும் கைக்கும் வாய்க்கும் தான் வாழனும். EMI, லோன்னு ஆயிரம் தலைவலி இருக்கும். உங்க புருஷன்களை பெத்த மாமியாரும் எப்பவோ இறந்துட்டாங்க. உங்க மாமனார் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவர் பாட்டுக்கு இருக்கார். நீங்க ரெண்டு பேர், உங்க புருஷன்மார், உங்க குழந்தைங்க.... அரண்மனை மாதிரி வீடு, 4 காரு, சொந்த பிசினெஸ், என்ன குறை உங்களுக்கு?"

இருவரும் அமைதியாக இருந்தனர். வாவ்..... பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் கிளாஸ் நல்ல பலன் தருது. அதான் அத்தான் அனுப்பி இருக்காரா. சூப்பர் அத்தான்.

"சரிம்மா... வேற என்ன விஷயம்." தர்ஷு குரலில் சுருதி இறங்கி இருந்தது.

"ஓகே கண்ணுங்களா.... டேக் கேர். நான் நாளைக்கு பேசுறேன். பை" என்றேன்.

"ஓகே மா... பை" தர்ஷு 

"பை மா" வர்ஸு.

அப்பாடா. 

அத்தான் சொன்னது போல சுடி போட்டுக் கொண்டேன். 

[Image: 15d8d7ee-b22a-44d3-a999-022572258302_l.jpg] 

நாங்கள் போவது திலிப் & ப்ரீத்தியை பார்க்கத்தான். ஒரு வாரமாகவே ப்ரீத்தி அத்தானிடம் ஒரு பிசினஸ் ப்ரபோசல் பற்றி பேசணும் என்று நச்சரித்தாள். 2 நாட்களுக்கு முன்னர் அவள் மெயில் அனுப்ப, அதை பற்றி அத்தானும் கௌதமும் பேசினார்கள். இன்று அது விஷயமாகத்தான் அவர்களை ஒரு காபி ஷாப்பில் சந்திக்க உள்ளோம். 

"எப்போ எந்த டிஸ்கஷன் நடந்தாலும் நோட்ஸ் எடுத்துக்கணும்" என்று அத்தான் முன்பே சொல்லியுள்ளார். கௌதமுடன் பிசினஸ் பற்றி அத்தான் பேசும்போது உடன் இருந்தாலும் நான் நோட்ஸ் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதுவும் ஐ-பேடில் (அத்தான் பயன்படுத்திய பழைய ஐ-பேட் தான்). 

என் ஹாண்ட் பேக், அதற்குள் ஐபேட், 2 வாரங்கள் முன்பு அத்தான் வாங்கித்தந்த ஐபோன் (இன்னும் இதை பற்றி என் மகள்கள் இடத்தில் சொல்லவில்லை!), நாங்கள் புதிதாக பதிவிட்டுள்ள கம்பெனி பெயரில் எனக்கென்று பிசினஸ் கார்டுகள்....  

கண்ணாடியில் என்னை பார்த்துக் கொண்டேன். அடடா.... சுதாவா இது. எனக்கே பெருமிதமாக இருந்தது. 

என் கணவர் சேகர் என்னை ஹவுஸ்வைஃப்பாக மட்டுமே வைத்திருந்தார். அவர் காம இச்சைகளுக்கு களியாட்டங்களுக்கும் ஒரு தாசியாக, வீட்டு வேலைகள் & சமையல் செய்யும் வேலைக்காரியாக, பெண்பிள்ளைகளுக்கு ஒரு ஹாஸ்டல் வார்டனாக....

அத்தான் கண்டிப்பானவர். இதுவரை அவர் திருத்தம் சொன்ன ஒன்றில் நான் மீண்டும் தவறு செய்ததில்லை. ஆனாலும் அவர் என்னை அந்தந்த விஷயங்களில் கண்காணிக்கிறார் என்பது தெரியும். 

கண்ணாடியில் மிடுக்காக தெரியும் இந்தப்பெண் எனக்கே புதிதாக இருக்கிறாள். இன்னமும் என் அம்மாவும் என் தங்கைகளும் பார்க்கவில்லை. அவர்கள் கமெண்ட்ஸ் எப்படி இருக்குமோ!

என் கணவரும் வந்துவிட்டார். அவரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவருக்கு ஸ்நாக்ஸ் & டீ ரெடியாக இருந்தது. 

போனில் பேசியபடியே அத்தான் மாடிப்படி இறங்கி வந்தார். நான் என் கணவரிடம் சொல்லிக்கொண்டு அத்தான் உடன் கிளம்பினேன். காரில் ஏறி, கேட்டை விட்டு வெளியே செல்லும் வரை போனில் இருந்தார். 

பின்பு -

"are you prepared for the meeting"

"yes, i am"

"you look dazling. i like your choice of lipstip. suits you well"

"thank you" மிடுக்காக சொன்னேன். இதே பழைய சுதாவாக இருந்தால் 'தேங்க்ஸ் அத்தான்' என்று வழிந்திருப்பேன்.

அத்தான் வண்டி ஓட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் என்னை பார்த்தார். 'பரவாயில்லை, பிக்கப் பண்ணிட்டே' என்பதை போல இருந்தது. 

I felt confident. நானே நானா.... யாரோதானா.... FMமில் ஒலித்த பாட்டு செம டைமிங்கோடு இருந்தது.   

"ம்.... சுதா, maybe next month கெளதம் இங்கே வரலாம்"

"அப்படியா அத்தான். ரொம்ப சந்தோசம். அவனுக்கு என்னல்லாம் பிடிக்கும்னு சொல்லுங்க..... பண்ணிடுறேன். எத்தனை நாள் தங்குவான்...." பொரிந்து தள்ளினேன்.

ஒரு நிமிஷம் என்ன லுக் விட்டார். 

"இவ்வளவு நேரம் professional லேடியா இருந்தே..... ஒரே நிமிஷத்துல பழைய சுதாவா மாறிட்டே" சின்ன அதட்டல் அவர் குரலில்.

எல்லாம் வேஷம் தானே. உள்ளே இருக்கும் சுதா அப்படியேதான் இருக்கிறாள். தாயில்லாத பிள்ளை வெளிநாட்டில் இருந்து வருகிறான். அவனுக்கு வாய்க்கு ருசியாக ஆக்கிப்போடத் தான் தோன்றியது. புரொபெஷனலாவது புடலங்காயாவது. 

"சாரி" என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு என் தலை முடியை ஒரு கையால் சரி செய்துக்கொண்டேன்.

அத்தான் புன்னகைத்தார்.
[+] 5 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
RE: பூங்காற்று திரும்புமா.... - by meenafan - 07-10-2026, 09:49 PM



Users browsing this thread: 1 Guest(s)