Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]`ராஜா ராணி'யின் கடைசி நாளில் கலங்கிய ஆல்யா... பரிசாகக் கிடைத்த ஆச்சர்யம்![/color]

[color=var(--title-color)]`ராஜா ராணி' தொடர் முடிவடைவதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.[/color]
[Image: vikatan%2F2019-05%2F8122dc5a-7161-4f50-b...2Ccompress][color=var(--meta-color)]ஆல்யா மனசா - சஞ்சீவ்[/color]
[color=var(--content-color)]சீரியல் ரசிகர்களால் ரொம்பவே விரும்பிப் பார்க்கப்பட்ட விஜய் டிவி-யின் பிரைம் டைம் தொடரான `ராஜா ராணி', அடுத்த சில தினங்களில் நிறைவடைகிறது. சில தினங்களுக்கு முன் கடைசி நாள் ஷூட்டிங் நடந்தபோது, சீரியலில் நடித்த அத்தனை பேரும் உணர்ச்சித் ததும்பலில் இருந்தனர். கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்தவற்றைப் பார்க்கும் முன், `ராஜா ராணி' கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாம்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fbbad0836-07b7-4aff-9...2Ccompress]
ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட்
[/color]
[color=var(--content-color)]'குளிர் 100 டிகிரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட' ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ - ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் இது. ஒரு பெரிய குடும்பத்துக்குள் வேலைக்காரியாக வந்து, அந்த வீட்டு மருமகளாகிற கதை. `செம்பா' என்கிற கேரக்டரில் அப்பாவிப் பெண்ணாக வந்தார், ஆல்யா. அவரைப் பார்ப்பதற்காகவே தொடரைப் பார்த்தவர்களுடன், சோஷியல் மீடியாவில் அவருக்கு இருக்கும் ரசிகர்களும் சேர்ந்துகொள்ள, சீரியல் செம ரீச் ஆனது. கூடவே சர்ச்சைகளும்.[/color]
[color=var(--content-color)]`ஆல்யா - சஞ்சீவ் இடையே காதல்' எனக் கிளம்பத் தொடங்கி, 'ஆல்யாவுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர் ஒருவரை சஞ்சீவ் அடித்துவிட்டார்' என்பது வரை சர்ச்சைகள் வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து `நாங்கள் இனி ரியல் ஜோடி' என அதிகாரபூர்வமாகவே அறிவித்தனர் இருவரும். தொடர்ந்து சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவிலேயே இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது முடிந்த சில நாள்களில் ஷூட்டிங்கிற்காக ஒட்டுமொத்த யூனிட்டும் சிங்கப்பூர் சென்றது. சமூக ஊடகங்களில் `கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா?!' எனக் கலாய்த்தார்கள்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-05%2F20349a84-f3b7-4865-9...2Ccompress]
ஆல்யா - சஞ்சீவ்
[/color]
[color=var(--content-color)]`திருமணத் தேதியை எப்போது அறிவிப்பார்கள்' என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
சரி, கடைசி நாள் ஷூட்டிங்கில் என்ன நடந்தது, ஆல்யாவிடமே பேசினோம்.

[color=var(--content-color)]"பொதுவா சீரியல்னாலே அழுகாச்சியா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கும். `ராஜா ராணி' மாதிரியான சீரியல்கள்தான் அந்தப் பெயரை உடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஹீரோயின் அப்பாவிதான். அவளைப் பார்த்தா உங்களுக்கு இரக்கம் வரும். ஆனா, எப்போவாவது 'சீரியல் அழுகாச்சியா இருக்கு'ன்னு நீங்க நினைச்சிருக்கீங்களா சொல்லுங்க, அப்படியொரு சலிப்பே வராம கதையை நகர்த்தினதுக்கு இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லணும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fae165a35-0048-4a78-9...2Ccompress]
இயக்குநர் பிரவீன் பென்னட்
[/color]
[color=var(--content-color)]அதேநேரம், கடைசி நாள் ஷூட்டிங் ரியாலாகவே அழுகாச்சியா இருந்தது. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எங்களால அழுகையைக் கட்டுப்படுத்த முடியல. வருடக் கணக்கா பழகிட்டுப் பிரிகிற துயரம் இருக்கே, அந்த நிமிடத்தை வார்த்தைகளால விவரிக்க முடியாது.[/color]
[/color]
Quote:என்னைப் பொறுத்தவரை கரியர்லேயும் சரி, பெர்சனல் வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனையா அமைந்த சீரியல் இது. என் வாழ்க்கைத் துணையா சஞ்சீவ் கிடைச்ச ஒரு மொமென்ட் போதாதா... இந்த சீரியல் என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு சொல்றதுக்கு?!"
[color][size][font][color=var(--white)]
ஆல்யா[/color]
[color=var(--content-color)]`கல்யாணத்துக்குக் கூப்பிட மறக்காதீங்க' என ஆர்ட்டிஸ்டுகள் ஒவ்வொருவரும் ஆல்யாவிடம் கேட்டுக்கொண்டு விடைபெற, அதன் பிறகே கவலையில் இருந்த ஆல்யாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது, அந்தக் கற்கண்டுச் செய்தி. அந்த ஆச்சர்யம் இதுதான்![/color]
[color=var(--content-color)]யெஸ்... `ராஜா ராணி' சீசன் 2 தொடங்க உள்ளது. `ராஜா ராணி' என்கிற அதே பெயரிலா அல்லது வேறு பெயரிலா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஆல்யா - சஞ்சீவ் ஜோடி மீண்டும் நடிக்க, அதே இயக்குநர், அதே தயாரிப்பு நிறுவனம் என மீண்டும் ஒரு சீரியல் அடுத்த சில மாதங்களிலேயே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்![/color]
[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 10-07-2019, 10:23 AM



Users browsing this thread: 11 Guest(s)