Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஹாங்காங்: பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை ஏன்?

[Image: _107806765_3fed5e32-f04a-4751-9931-0c5c6f75f279.jpg]படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES
பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே ராஜீய சர்ச்சையாக ஹாங்காங் இருந்து வருகிறது.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு அதனை காலனியாக வைத்திருந்த பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது.
"ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்" என்ற கொள்கையின் மூலம், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள மக்களை விட ஹாங்காங் மக்களுக்கு வேறுபட்ட உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர வேண்டும் என்று பிரிட்டன் கூறகிறது.
ஆனால், இதற்கு மறுமொழியாக, சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
என்ன நடக்கிறது?
[Image: _107806766_71d3cf27-572b-4bf7-8ab7-69db86883d1c.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குற்றவாளிகளை சீனாவிடமும், மக்கௌவிமும் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெருங்கூட்டமாக ஒன்றாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த மசோதா சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வரும் கேரி லெமால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவாகும். சீனாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மக்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இது எளிதாக்கிவிடும்.
இந்த மசோதா ஹாங்காங்கின் சுயாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது என்றும், சுயாதீனமான சட்ட அமைப்பை புறக்கணிக்கிறது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிடுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை சீனா பயன்படுத்தலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மக்கள் பெருந்திரளாக போராடியதை தொடர்ந்து, இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கைவிடப்படவில்லை.
போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-07-2019, 10:12 AM



Users browsing this thread: 76 Guest(s)