Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது

[Image: -.jpg]காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் குமாரசாமி ஒப்புதல்!
ஹைலைட்ஸ்
  • காவிரியில் இருந்து 9.19 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
  • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால்காவிரியில் இருந்து தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது.


கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார்
தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் தலைநகர் சென்னை கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. 

இந்நிலையில், குடிநீர் பிரச்சனையை சமாளிக்க காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. 

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறினார். 

மேலும் இதுதொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகுமாறு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவிரியில் இருந்து கூடிய விரைவில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-07-2019, 09:25 AM



Users browsing this thread: 99 Guest(s)