Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]உடனே சிறைக்குச் செல்லுங்கள்' - ராஜகோபால் வழக்கில் கறார் காட்டிய உச்ச நீதிமன்றம்![/color]

[color=var(--title-color)]சரவணபவன் ராஜகோபால் வழக்கில் அவர் சிறைக்குச் செல்ல, கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[/color]

















[color=var(--content-color)]ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், தண்டனை அறிவிக்கப்பட்டதையொட்டி, சிறை செல்வதற்கு ஏதுவாக, அவர் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F44a47cfe-c485-4ad3-8...2Ccompress]
saravana bhavan
[/color]

[color=var(--content-color)]ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில், ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்ய விரும்பினார் ராஜகோபால்.[/color]

[color=var(--content-color)]ஆனால், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி, காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜீவஜோதியைத் திருமணம் செய்வதற்கு சாந்தகுமார் தடையாக இருந்ததால், ஆட்களை விட்டு அவரைக் கொலை செய்தார் ராஜகோபால்.[/color]

[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F50ad3c33-56de-45e4-9...2Ccompress]
Jeeva jothi
[/color]

[color=var(--content-color)]இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 55 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்தது. தண்டனையைத் தொடர்ந்து சில காலம் சிறையில் இருந்தார் ராஜகோபால். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். எனினும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம், அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளது.

[/color]

[color=var(--content-color)]இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட தேதிவரை சரணடையாத ராஜகோபால், இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தில், தான் சரணடையும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்து மனுத் தாக்கல் செய்தார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F1d97c104-d941-448f-8...2Ccompress]
supreme court
[/color]
[color=var(--content-color)]இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ``இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ஒருமுறைகூட ஏன் உடல்நிலை சரி இல்லை என்பது பற்றிச் சொல்லவில்லை? குறிப்பாக, சரணடைவதற்கான தேதி முடிவடைந்துள்ள சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில், திடீரென உடல்நிலையை ஏன் காரணம் காட்டுகிறீர்கள்? முன்கூட்டியே இந்த மனுவை ஏன் செய்யவில்லை?" என்று சரமாரிக் கேள்விகளை எழுப்பியதுடன், ராஜகோபால் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, "உடனடியாக ராஜகோபால் சரணடைய வேண்டும். கால நீட்டிப்பு ஏதும் வழங்க முடியாது" என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-07%2Fbe3be3cb-0942-45a5-a...2Ccompress]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-07-2019, 09:12 AM



Users browsing this thread: 96 Guest(s)