26-09-2026, 12:55 PM
ராகவின் பிறந்தநாள் — கவிதாவின் வாழ்த்து வருமா?
வீட்டில் எல்லோரும் இருந்தாலும், அந்த வீட்டுக்குள் முன்பு இருந்த சிரிப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தது.
மலர்விழிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
மாறன் ராகவிடம் பேசாமல் இருந்தான்.
கவிதா ராகவிடம் முகம் கொடுத்து பேசுவதையே தவிர்த்தாள்.
வைதேகி மட்டும் எல்லாம் ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக இருந்தாள்.
ராகவுக்கு அந்த அமைதிதான் இன்னும் அதிகமான வேதனையாக இருந்தது.
ஒருநாள் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
, ராகவ் வைதேகியின் அருகில் சென்று நின்றான்.
ராகவ்: “அக்கா…”
வைதேகி: “என்ன?”
ராகவ்: “நீ என்னை பார்த்தாலே எதுவும் நடக்காத மாதிரி இருக்க.”
வைதேகி: “அப்படி என்ன நடந்துச்சு?”
ராகவ்: “அக்கா, உனக்கே தெரியும். என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட மறுபடியும் கேட்காதே.”
வைதேகி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
வைதேகி: “நடந்ததைப் பற்றி இனிமேல் பேசாதே.”
ராகவ்: “கவிதா என்னை வெறுக்கிற மாதிரி பார்க்கிறா.”
வைதேகி: “அவளுக்கு கோபம் இருக்கும். கொஞ்ச நாள்ல சரியாகிடும்.”
ராகவ்: “அவ என்னை அண்ணனா நினைச்சுதான் இத்தனை நாள் பேசிட்டு இருந்தா. இப்போ என் முகத்தையே பார்க்க மாட்டேங்கிறா.”
வைதேகி: “ராகவ், நீ எதுக்கு இவ்வளவு யோசிக்கிற? நம்ம விஷயம் அம்மா கிட்ட போகல. மாறன் கிட்டயும் போகக்கூடாது. அதுதான் முக்கியம். விட்டுடா.”
ராகவ்: “உனக்கு இவ்வளவு சுலபமா சொல்ல முடியும். ஆனா எனக்கு முடியல அக்கா.”
வைதேகி: “நீயே உன்னை வருத்திக்கிட்டு இருந்தா என்ன ஆகப்போகுது? போ. வேற வேலையைப் பாரு.”
ராகவ் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
அடுத்த நாள் காலை.
மலர்விழி சமையலறையில் இருந்தாள்.
மலர்விழி: “கவிதா, இங்க வா.”
கவிதா: “என்னம்மா?”
மலர்விழி: “ராகவ் ஏன் இப்பல்லாம் உன்கிட்ட பேசுறதே இல்ல?
கவிதா ஒரு நொடிக்கு தடுமாறினாள்.
கவிதா: “அவனுக்கு வேலை இருக்கும்.”
மலர்விழி: “வேலை இருந்தா வீட்டுல இருக்குறவங்க கிட்ட பேசக்கூடாதா?”
கவிதா: “அம்மா, நீ எதையும் கேட்காதே. எனக்கு அவன் மேல கோபம்.”
மலர்விழி: “எதுக்கு?”
கவிதா: “அது… எங்களுக்குள்ள சின்ன பிரச்சனை.”
மலர்விழி: “சின்ன பிரச்சனைன்னு சொல்ற. ஆனா உன் முகத்துல பெரிய கோபம் தெரியுதே.”
கவிதா: “நான் பார்த்துக்கறேன் அம்மா. நீ கவலைப்படாதே.
மலர்விழி: “சரி. ஆனா வீட்டுல யாரும் யார்கிட்டயும் பேசாம இருந்தா எனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.”
கவிதா: “நான் சரி பண்ணிக்கறேன்.”
அவள் அங்கிருந்து சென்றாள்.
அதே நேரத்தில் ராகவ் ஹாலில் இருந்து அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவன் மனதில் ஒரே எண்ணம்.
“கவிதா அம்மா கிட்ட சொல்லல.”
ஆனால் அந்த நிம்மதிக்குள்ளேயே இன்னொரு கேள்வி.
“அவ என்னை எப்போ மன்னிப்பா?”
நாட்கள் சென்றன.
ஒருநாள் மாலை கவிதா வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தாள்.
ராகவ் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.
அவளைப் பார்த்ததும் மெதுவாக அழைத்தான்.
ராகவ்: “கவிதா…”
கவிதா நின்றாள்.
கவிதா: “என்ன?”
ராகவ்: “கொஞ்சம் பேசணும்.”
கவிதா: “என்ன பேசணும்?”
ராகவ்: “நான் முன்னாடி உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்ல.”
கவிதா: “கேட்ட.”
ராகவ்: “நீ ஏத்துக்கல.”
கவிதா: “இப்பவும் ஏத்துக்கல.”
ராகவ்: “நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல.”
கவிதா: “நீ நினைக்காம செய்தாலும் கஷ்டம் எனக்குத்தானே?”
ராகவ்: “அதனால்தான் சொல்றேன். என்னை மன்னிச்சுடு.”
கவிதா: “ராகவ், நீ என்னை மன்னிக்கச் சொல்லாதே. நான் உன்னை மன்னிக்கிறேனா இல்லையா என்பது என்னோட விஷயம்.”
ராகவ்: “சரி. ஆனா என்னோட பேசாம மட்டும் இருக்காதே.”
கவிதா: “நான் உன்னோட பேசணும்னு நினைக்கிற அளவுக்கு இன்னும் எதுவும் மாறல.”
ராகவ்: “நான் உன்னோட பழைய மாதிரி இருக்கணும்னு கேட்கல. குறைந்தபட்சம் வீட்டுல இருக்குற ஒரு மனுஷனா என்னோட பேசு.”
கவிதா: “அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்.”
ராகவ்: “எவ்வளவு நேரம்?”
கவிதா: “எனக்குத் தெரியாது.”
ராகவ்: “சரி…”
கவிதா: “இனிமேல் இதைப் பற்றி என்னை தொந்தரவு பண்ணாதே. போ.”
ராகவ் மெதுவாக தலையசைத்தான்.
ராகவ்: “சரி. போறேன்.”
அவன் திரும்பி நடந்தான்.
கவிதா அவனைப் பார்த்துக்கொண்டே சில நொடிகள் நின்றாள்.
அவளுடைய கோபம் இன்னும் இருந்தது.
ஆனால் அவனுடைய முகத்தில் தெரிந்த வருத்தமும் அவளுக்குப் புரிந்தது.
அந்த வார்த்தைகளை அவளால் வெளியில் சொல்ல முடியவில்லை.
சில நாட்கள் கழித்து ராகவின் பிறந்தநாள் வந்தது.
காலை முதலே அவன் கைப்பேசி சத்தமாகிக் கொண்டே இருந்தது.
“Happy Birthday!”
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”
“Have a great year!”
என்று நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.
மலர்விழியும் காலையிலேயே அவனை அழைத்தாள்.
மலர்விழி: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவ்.”
ராகவ்: “தேங்க்ஸ் மா.”
மலர்விழி: “இன்னைக்கு கோயிலுக்குப் போயிட்டு வா.”
ராகவ்: “சரி மா.”
மலர்விழி: “முகம் ஏன் இப்படி இருக்கு? பிறந்தநாள்னா சந்தோஷமா இருக்கணும்.”
ராகவ் சிரிக்க முயன்றான்.
ராகவ்: “சந்தோஷம்தான் மா.”
ஆனால் அவன் மனதில் வேறு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
கவிதா வாழ்த்து சொல்வாளா?
காலை ஒன்பது மணி.
அவளிடமிருந்து எந்த மெசேஜும் இல்லை.
பத்து மணி.
இன்னும் இல்லை.
மதியம்.
இன்னும் இல்லை.
ராகவ் கைப்பேசியை எடுத்து அவளுடைய பெயரைப் பார்த்தான்.
அழைக்கலாமா என்று நினைத்தான்.
பிறகு வேண்டாம் என்று வைத்துவிட்டான்.
“அவளுக்கு என்னை வாழ்த்தணும்னு இருந்தா அவளே வாழ்த்துவா…”
என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
மாலை கவிதா வீட்டுக்குள் வந்தாள்
ராகவ் ஹாலில் இருந்தான்.
அவள் உள்ளே வந்ததும் ராகவ் அவளைப் பார்த்தான்.
கவிதாவும் அவனைப் பார்த்தாள்.
இருவருக்கும் இடையில் சில நொடிகள் அமைதி.
கவிதா எதுவும் சொல்லாமல் உள்ளே போனாள்.
ராகவின் முகம் சற்று வாடியது.
சிறிது நேரம் கழித்து கவிதா மீண்டும் வெளியே வந்தாள்.
அவள் கையில் ஒரு சிறிய பரிசுப்பெட்டி இருந்தது.
ராகவ் அவளைப் பார்த்தான்.
கவிதா அந்தப் பெட்டியை அவன் முன் வைத்தாள்.
ராகவ்: “இது என்ன?”
கவிதா: “திறந்து பாரு.”
ராகவ்: “எனக்கா?”
கவிதா: “இல்ல… பக்கத்து வீட்டு ஆளுக்காக வாங்கிட்டு வந்தேன்.”
ராகவ் அவளைப் பார்த்து லேசாக சிரித்தான்
.
ராகவ்: “அப்படியா?”
கவிதா: “ஆமா. உனக்கு பிறந்தநாள் இல்லையா இன்னைக்கு?”
ராகவ்: “ஆமா ”
கவிதா: “அதான்.”
ராகவ் பரிசை எடுத்துக்கொண்டான்.
சில நொடிகள் அவளைப் பார்த்தான்.
பிறகு மெதுவாக சொன்னான்.
ராகவ்: “தேங்க்ஸ் கவிதா.”
கவிதா: “சரி. ரொம்ப உணர்ச்சிவசப்படாதே.”
ராகவ்: “நான் எதுவும் சொல்லலையே.” கொஞ்சம் சந்தோசம் பட்டேன்
கவிதா: “உன் முகமே சொல்லுது.”
ராகவ் சிரித்தான்.
கவிதாவும் லேசாக சிரித்தாள்.
அந்த சிரிப்பு சில நாட்களாக அந்த வீட்டில் காணாமல் போன ஒரு சிறிய வெளிச்சம் போல இருந்தது.
ஆனால் கவிதா உடனே மீண்டும் முகத்தை மாற்றிக்கொண்டாள்.
கவிதா: “ஒரு விஷயம் மட்டும். நான் உன்னை வாழ்த்தினதுக்காக எல்லாம் பழைய மாதிரி ஆகிடுச்சுன்னு நினைக்காதே.”
ராகவ்: “நினைக்க மாட்டேன்.”
கவிதா: “நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்.”
ராகவ்: “தெரியும்.”
கவிதா: “சரி. போ.”
ராகவ்: “சரி, போறேன்.”
அவன் இரண்டு அடிகள் நடந்துவிட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
கவிதா: “என்ன?”
ராகவ்: “ஒண்ணுமில்ல.”
கவிதா: “அப்படின்னா போ.”
ராகவ் சிரித்துக்கொண்டே சென்றான்.
அவள் கொடுத்த அந்தச் சிறிய பரிசுப்பெட்டியை அவன் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்தான்.
அது ஒரு பரிசு மட்டுமல்ல.
முழுமையாக உடைந்துபோன உறவில், இன்னும் ஒரு சிறிய பேச்சுக்கான கதவு திறந்திருப்பதற்கான அடையாளம் போல அவனுக்குத் தோன்றியது.
ஆனால் அந்தக் கதவு மீண்டும் முழுவதுமாக திறக்குமா?
அல்லது கவிதாவின் மனதில் இருக்கும் கோபம் இன்னும் பல நாட்கள் தொடருமா?
என்பது அடுத்த நாள்தான் தெரியப் போகிறது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)