20-09-2026, 07:42 PM
(This post was last modified: 20-09-2026, 09:35 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Episode - 189
![[Image: Priyankaa.webp]](https://i.ibb.co/ZzWgcwSv/Priyankaa.webp)
சிற்பிகாவுக்கு அந்த நாளின் ஒவ்வொரு கணமும் ஒரு புதிய அதிர்ச்சியைத்தான் கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்தத் தீவுக்குள் தன்னைத் தவிர வேறு எந்த வெளி மனிதனையும் அனுமதிக்காத தன் மக்கள்... இப்போது ஒரு அந்நிய ஆடவனை எதிர்கொண்டு என்ன செய்வார்கள்?
அதைவிட—
சற்று முன்பு தான் அவள் பார்த்த, அந்த மாடர்ன் பெண்ணும் இவனும் ஒன்றாகத்தான் தீவுக்குள் நுழைந்தார்களா?
அல்லது...
இருவரும் தனித்தனியாக வந்தார்களா?
சிற்பிகாவின் மனதில் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்துகொண்டிருக்கும்போதே—
“ஆஆஆ...!”
அம்பு பாய்ந்த காட்டுவாசியின் அலறல் சத்தம் காட்டையே கிழித்தது.
அந்தக் குரல் கேட்ட அடுத்த நொடியே ரியான் மீண்டும் வில்லை வளைத்தான்.
அம்பு அடுத்த கணமே பாயப்போகிறது!
“ரியான்!”
சிற்பிகா மின்னல் வேகத்தில் அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
“வழியை விடு!”
ரியானின் குரலில் கோபமும் அவசரமும் கலந்திருந்தது.
“அவன் இப்படி கத்திக்கொண்டிருந்தால், இன்னும் சில நிமிடங்களில் அவனுடைய கூட்டமே இங்கே வந்துவிடும். அவர்கள் வந்தால் முதலில் ஆபத்தில் சிக்கப் போவது நீதான்!”
“நிறுத்துங்கள்!”
சிற்பிகா அவனை நேராகப் பார்த்தாள்.
“உங்களுக்குத்தான் இப்போது ஆபத்து! நீங்கள் உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும். அவன் காயப்பட்டிருக்கிறான். முதலில் அவனுக்கு சிகிச்சை செய்ய வேண்டும்.”
அவள் மெதுவாக அந்தக் காட்டுவாசியை நோக்கி நடந்தாள்.
ஆனால்...
அவள் இரண்டு அடிகள் முன்னேறியவுடனே அவன் முகம் மாறியது.
அவன் கண்களில் தெரிந்தது வலி அல்ல.
அது...
பயம்.
அதனுடன் கலந்திருந்தது வெறுப்பு.
சிற்பிகா வாழ்நாளில் யாருடைய கண்களிலும் அப்படியொரு பார்வையைப் பார்த்ததில்லை.
“பின்னால் போ!”
அவன் நடுங்கியபடி கத்தினான்.
“என்னைத் தொடாதே!”
சிற்பிகா அப்படியே நின்றுவிட்டாள்.
அவன் தன் பழங்குடி மொழியில் நடுங்கிய குரலில் தொடர்ந்தான்:
“நீயும்... இவனும்தான் இந்தத் தீவின் புனிதத்தை அவமதித்தவர்கள்!”
அவனது பார்வை ரியானை நோக்கித் திரும்பியது.
“உங்களுடைய வருகைக்குப் பிறகுதான் குலதெய்வக் கல் உடைந்தது!”
அவன் மூச்சுத் திணறியபடி சொன்ன அடுத்த வார்த்தைகள் சிற்பிகாவின் உள்ளத்தை உறைய வைத்தன.
“உன்னை உயிருடன் விடக்கூடாது என்று தலைவன் உத்தரவிட்டிருக்கிறான்!”
சிற்பிகாவின் முகத்தில் இருந்த நிறம் மெல்ல மறைந்தது.
“என்ன...?”
“இந்த இரவுக்குள்ளேயே உன்னை குலதெய்வத்தின் பீடத்தில் பலி கொடுக்க வேண்டும்!”
அந்த ஒரு வார்த்தை—
“பலி.”
சிற்பிகாவின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
![[Image: 486722682-17862306756368403-2496062129674864714-n.webp]](https://i.ibb.co/WvhbFMZj/486722682-17862306756368403-2496062129674864714-n.webp)
அதே நேரத்தில்...
சிற்பிகாவைத் தேடி தீவின் ஒவ்வொரு பகுதியிலும் சிதறி அலைந்துகொண்டிருந்த பழங்குடி மக்கள், திடீரென மாறிப்போன இயற்கையைப் பார்த்து உறைந்து நின்றனர்.
முதலில்...
காற்று.
சாதாரணமாக வீசிக்கொண்டிருந்த காற்று, அடுத்த சில நொடிகளில் அவர்களை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமாக மாறியது.
மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று மோதின.
பனைமரங்கள் வேரோடு ஆடின.
காட்டுக்குள் இருந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக அலறியபடி திசை தெரியாமல் பறந்தன.
அதற்குப் பிறகு—
வானம் இடித்தது!
அந்த இடி சாதாரண இடியல்ல.
மலைக்குள் புதைந்திருந்த ஏதோ ஒரு பேரரக்கன் விழித்தெழுந்து கர்ஜிப்பதைப் போல, அந்தச் சத்தம் தீவு முழுவதையும் அதிர வைத்தது.
பலர் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.
சிலர் பயத்தில் மண்ணில் விழுந்தனர்.
சிறுவர்கள் கதறி அழுதனர்.
முதியவர்கள் மட்டும் வானத்தைப் பார்த்தபடி நடுங்கினர்.
அவர்களின் முகங்களில் தெரிந்த பயம்...
அந்தப் பேரழிவை அவர்கள் முதல் முறையாகப் பார்க்கவில்லை என்பதைக் காட்டியது.
அவர்களது முன்னோர்கள் சொல்லிச் சென்றிருந்தார்கள்.
“ஒருநாள் இந்தத் தீவு மீண்டும் இப்படிக் கர்ஜிக்கும்...”
“அன்று காட்டை நம்பாதீர்கள்.”
“கடலை நம்பாதீர்கள்.”
“மலையை மட்டும் நம்புங்கள்.”
அந்தப் பழைய எச்சரிக்கை, தலைமுறை தலைமுறையாக அவர்களுடைய நினைவில் உயிரோடு இருந்தது.
ஆனால் அதன் காரணம் யாருக்கும் தெரியாது.
இன்று வரை.
அவர்களின் முன்னால் கடல் திடீரெனப் பின்வாங்கியது.
ஒரு கணம்...
முழுக் கடற்கரையும் அசாதாரணமான அமைதியில் உறைந்தது.
அதைப் பார்த்த ஒரு முதியவன் நடுங்கிய குரலில் கத்தினான்:
“ஓடுங்கள்!”
யாரும் அசையவில்லை.
“எல்லோரும் மலைக்குப் போங்கள்!”
அடுத்த நொடி—
தொலைவில் கடலுக்குள் ஒரு கரும்புள்ளி எழுந்தது.
அது பெரிதானது.
மேலும் பெரிதானது.
சில நொடிகளில் அது வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.
சுனாமி!
“ஓடுங்கள்!”
அந்த ஒரு அலறல் போதுமானதாக இருந்தது.
முழுக் கூட்டமும் ஒரே நேரத்தில் மலை உச்சியை நோக்கி ஓடத் தொடங்கியது.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டனர்.
முதியவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு ஓடினர்.
சிலர் பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடினர்.
ஏனெனில் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் இருந்தது.
சிற்பிகா எங்கே?
“அவள் இன்னும் காட்டில்தான் இருக்கிறாள்!”
“அவளை விட்டுவிட்டு எப்படி ஓடுவது?”
“இப்போது அவளைத் தேடினால் நாமும் சிக்கிக்கொள்வோம்!”
“ஆனால் தலைவனின் உத்தரவு—”
“உயிரோடு இருந்தால்தான் நாளை அவளைத் தேட முடியும்!”
அந்த வார்த்தை அனைவரையும் அமைதியாக்கியது.
அதே நேரத்தில்—
மலை உச்சியிலிருந்து இன்னொரு பேரொலி எழுந்தது.
க்ர்ர்ர்ர்ர்ர்...!
முழு மலைப்பகுதியே அதிர்ந்தது.
அந்தக் குகையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்கள் திடீரென நின்றனர்.
குகையின் வாயிலிருந்து...
கருமையான புகை வெளியேறுவது போலத் தோன்றியது.
ஒரு சிறுவன் பயத்தில் தன் தாயின் பின்னால் ஒளிந்துகொண்டான்.
“அம்மா... குகைக்குள்ளேயும் ஏதாவது இருக்கிறதா?”
அவள் பதில் சொல்லவில்லை.
ஏனெனில் அவளுக்கும் அதே சந்தேகம் வந்துவிட்டது.
தலைமுறைகளாக...
“இந்தக் குகைதான் நம்மைக் காப்பாற்றும்”
என்று நம்பி வந்தார்கள்.
ஆனால் இன்று...
அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அந்தக் குகையே அவர்களை உள்ளே அழைப்பது போலத் தோன்றியது.
முதிய தலைவன் வானத்தைப் பார்த்தான்.
மின்னல் ஒன்று வானத்தைப் பிளந்தது.
அந்த மின்னலின் வெளிச்சத்தில்...
தீவின் மறுபுறம் ஒரு கரிய உருவம் வானத்தைக் கிழித்துக்கொண்டு பாய்வதை அவன் ஒரு கணம் பார்த்தான்.
அவனது கண்கள் விரிந்தன.
“அது...”
அவனது உதடுகள் நடுங்கின.
“என்ன?”
அருகில் இருந்தவர்கள் கேட்டனர்.
அவன் பதில் சொல்லவில்லை.
அவனது முன்னோர்கள் தலைமுறைகளுக்கு முன்பு சொல்லியிருந்த இன்னொரு எச்சரிக்கை அவனது நினைவுக்கு வந்தது.
“அரண் உடையும் நாளில்...”
“வானம் சிவக்கும்.”
“கடல் கர்ஜிக்கும்.”
“காடு எரியும்.”
“அப்போது...”
அந்தப் பழைய வார்த்தையை நினைத்தவுடன் அவனது உடல் முழுவதும் நடுங்கியது.
“அப்போது...”
அவன் தன் குரலைக் கூட நம்ப முடியாமல் முணுமுணுத்தான்.
“அவன் திரும்பி வந்திருப்பான்...”
அருகில் நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“யார்?”
முதியவன் பதில் சொல்லவில்லை.
அவன் மட்டும் அந்த இருளை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அங்கே...
சில நொடிகளுக்கு முன்பு வரை கருமேகமாக இருந்த வானத்தின் நடுவே...
ஒரு விசித்திரமான செந்நிற ஒளி பரவிக்கொண்டிருந்தது.
அவன் மெதுவாகத் தன் மார்பில் கைவைத்தான்.
“காத்தவராயன்...”
அந்தப் பெயர் அவனது உதடுகளில் இருந்து வெளியேறியதும்—
அருகில் இருந்த வயதான பெண் ஒருத்தி திடீரென அலறினாள்.
“அந்தப் பெயரைச் சொல்லாதே!”
அனைவரும் அவளை நோக்கித் திரும்பினர்.
அவளது கண்களில் கண்ணீர்.
உதடுகளில் நடுக்கம்.
“அந்தப் பெயரைச் சொன்னாலே அவன் கேட்பான்...”
அவள் குரல் உடைந்தது.
“அவன் கேட்பான்...”
அதே நொடியில்—
தொலைவில் ஒரு மின்னல்.
அதற்குப் பின்னால் ஒரு பேரிடி.
முழுக் கூட்டமும் ஒரே நேரத்தில் நடுங்கியது.
பிறகு...
முதிய தலைவன் தன் குரலை உயர்த்தினான்.
“குகைக்குள்!”
“இப்போதே!”
அனைவரும் மீண்டும் ஓடினர்.
ஒவ்வொருவரும் குகைக்குள் நுழைந்தனர்.
கடைசியாக நுழைந்தவன் திரும்பிப் பார்த்தான்.
தீவு முழுவதும் புயலில் சிக்கியிருந்தது.
மரங்கள் சாய்ந்தன.
கடல் கொந்தளித்தது.
வானம் செந்நிறமாக எரிந்தது.
ஆனால் அந்தப் பேரழிவுக்கு நடுவே...
ஒரு விஷயம் மட்டும் அவனது கண்களில் தெளிவாகப் பட்டது.
தொலைவில்...
தடாகத்தின் அருகே...
சிற்பிகா நின்றுகொண்டிருந்தாள்.
அவள் தனியாக இல்லை.
அவளுக்கு எதிரே ரியான்.
அவர்களைச் சுற்றி விழுந்துகொண்டிருந்த மரங்கள்.
ஆனால் சிற்பிகா மட்டும்...
வானத்தை நோக்கியபடி அசையாமல் நின்றாள்.
அவளது உதடுகள் மெதுவாக அசைந்தன.
![[Image: images.jpg]](https://i.ibb.co/gFQy9SZK/images.jpg)
குகைக்குள் நின்ற அந்த மனிதனுக்கு அந்த வார்த்தைகள் கேட்கவில்லை.
ஆனால்...
அவள் யாருடைய பெயரைச் சொல்கிறாள் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.
“காத்தவராயா...”
அவனது முகத்தில் இருந்த ரத்தம் முழுவதும் வற்றிப்போனது.
ஏனெனில் அந்தப் பெயர்...
பலநூறு ஆண்டுகளாக இந்தத் தீவில் வெறும் ஒரு பெயராகவே இருந்தது.
இன்று...
அந்தப் பெயருக்கு மீண்டும் ஒரு உயிர் கிடைத்திருந்தது.
அவன் குகையின் இருளுக்குள் பின்னோக்கி நகர்ந்து இருட்டில் மறைந்தான்.
மறுபுறம்...
மரணத்திலிருந்து மீளப் போராடிக்கொண்டிருந்த இஷிதா.
இன்னொரு புறம்...
பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீவுக்குள் மீண்டும் காலடி வைத்திருந்த காத்தவராயன்.
அவர்களுக்குள் யாருக்கும் தெரியாத ஒரே உண்மை—
இந்த இரவு முடிவதற்குள் இந்தத் தீவில் யாரும் பழைய மனிதர்களாக இருக்கப்போவதில்லை.
அந்த நேரம்...
தீவின் புனித அரண் உடைந்திருந்தது.
நூற்றாண்டுகளாக வெளியில் தடுக்கப்பட்டிருந்த ஒரு சக்தி, அந்த எல்லையைத் தாண்டியது.
காத்தவராயன்.
அவனது ஆவி கருமேகத்தைப் போன்ற உருவமாக மின்னல் வேகத்தில் தீவுக்குள் புகுந்தது.
அவன் நுழைந்த கணமே—
கடல் கொந்தளித்தது.
சுனாமி அலைகள் கரையை நோக்கி சீறின.
பல தலைமுறைகளாக வேரூன்றி நின்ற பெருமரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன.
காட்டின் கொடிய மிருகங்கள்கூட தங்கள் இயல்பை மறந்து உயிரைக் காப்பாற்ற ஓடின.
பூமி நடுங்கியது.
மலை அதிர்ந்தது.
அந்தத் தீவே தன் மீது வந்த பேராபத்தை உணர்ந்தது போலத் தோன்றியது.
ஆனால் காத்தவராயனின் இலக்கு வேறு.
அவன் யாரையும் தேடவில்லை.
சிற்பிகாவையும் இல்லை.
ரியானையும் இல்லை.
அவனுடைய ஒரே இலக்கு—
இஷிதா.
![[Image: Kayadu-Lohar-Save-cheskune-vaalu-share-c...eskune.jpg]](https://i.ibb.co/1YyqByxT/Kayadu-Lohar-Save-cheskune-vaalu-share-cheskune-vaalu-and-download-cheskune.jpg)
“இன்னும் ஒரு நொடி தாமதமானாலும் அவள் உயிர் போய்விடும்...”
அவன் உணர்ந்தான்.
ஒரு கருப்பு மின்னலைப் போல அவன் குடிசையை நோக்கிப் பாய்ந்தான்.
பூமியில் இருக்கும் எந்தச் சக்தியும் அஞ்சி நடுங்கும் அந்த காலனே... எமதர்மனே... இஷிதாவின் உயிரைப் பறிப்பதற்காக அவள் அருகில் வந்து நின்றிருப்பதை காத்தவராயன் உணர்ந்திருந்தான்.
அவனுக்கு நன்றாகத் தெரியும்...
இன்னும் சில நொடிகள்.
அதற்குள் தனஞ்செயன் வாயுவும் அடங்கிவிட்டால்...
இஷிதாவின் உயிர் அவன் கைகளிலிருந்து நிரந்தரமாகப் பறிபோகும்.
அந்த ஒரு எண்ணமே காத்தவராயனின் அசுர ஆன்மாவுக்குள் அடங்கியிருந்த கோபத்தை எரிமலையாக வெடிக்கச் செய்தது.
அடுத்த கணம்—
“இஷிதா!”
என்ற கர்ஜனையுடன், ஒரு கருப்பு மின்னலைப் போல காத்தவராயன் அந்தக் குடிசையை நோக்கிப் பாய்ந்தான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)