♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(15-09-2026, 09:50 PM)Geneliarasigan Wrote: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி. ❤️

உண்மையைச் சொல்வதென்றால், இந்தக் கதையை நான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். இந்தக் கதைக்காக என்னால் முடிந்த அளவுக்கு நேரத்தையும் உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளராக நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்போ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இதைச் சொல்லிக்கொள்வதற்காகவோ, யாரையும் குறை சொல்வதற்காகவோ நான் சொல்லவில்லை. நேற்று வரை நானும் தொடர்ந்து எழுதலாம், ஒருநாள் இந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கையை விட, “போதும்… இனி என் எழுத்தை நிறுத்திவிடலாம்” என்ற முடிவுக்குத்தான் வந்துவிட்டேன்.

ஒருவேளை இது அவசரமான முடிவாக இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் என் மனநிலை இதுதான். இனி இந்தத் தளத்தில் ஒரு எழுத்தாளனாக இல்லாமல், ஒரு வாசகனாக மட்டும் இருப்பதே சரி என்று தோன்றுகிறது.

இருந்தாலும், நீங்கள் போன்ற வாசகர்கள் தொடர்ந்து எழுதச் சொல்லி அன்பாக கருத்து தெரிவிப்பது எனக்கு நிச்சயம் மறக்க முடியாத ஒன்று. அதற்காக உண்மையிலேயே நன்றி. ❤️

வாசகர்களை உண்மையிலேயே எந்த மாதிரியான கதை கவரும், எது அவங்களை கதைக்குள்ள இழுத்துக்கிட்டு போகும் என்பதையே சரியா புரிஞ்சுக்காம எழுதிட்டு இருந்திருக்கேன்.

அதனாலதான் என்னோட கதையைப் படிச்ச வாசகர்களையும் ஒருவிதத்துல நோகடிச்சிருக்கேன்னு இப்போ தோணுது.

ஒரு கதை பிடிச்சிருந்தா, குறைந்தபட்சம் ஒரு சின்ன கமெண்டாவது போடுவாங்க. ஆனால் நான் “இனிமேல் எழுதுவதை நிறுத்துறேன்”ன்னு சொன்ன பிறகும், இதுவரைக்கும் ஒரேயொருத்தர் மட்டும்தான் “கதையைத் தொடருங்க”ன்னு கேட்டிருக்கார்.

அதைப் பார்த்ததும் ஒரு விஷயம் எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு…

என்னோட எழுத்து, நான் நினைச்ச அளவுக்கு யாருடைய மனசையும் தொடவே இல்லை.

இந்த உண்மையை ஏத்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். கசக்கத்தான் செய்யுது. ஆனா எவ்வளவு கசப்பா இருந்தாலும், நிஜத்தை நாம ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்.

நான் நல்லா எழுதுறேன்னு நானே நினைச்சுக்கிட்டு இருந்திருக்கலாம். கதைக்காக 6–7 மணி நேரம் உட்கார்ந்து உழைச்சிருக்கலாம். ஆனா அந்த உழைப்பு வாசகனுக்கு எந்த அளவுக்கு போய்ச் சேர்ந்திருக்கு என்பதுதான் முக்கியம்.

அதுதான் இப்போ எனக்கு புரியுது.

அதனாலதான், உண்மையிலேயே நான் எழுதுவதை நிறுத்திக்கறதே Xossipy தளத்துக்கும், வாசகர்களுக்கும் நல்லதோன்னு கூட இப்போ தோணுது.

ஆனா இதை யார்மேலும் கோபப்பட்டு சொல்லல நண்பா. யாரையும் குறை சொல்லல.

என் எழுத்தைப் பற்றிய உண்மையை, கொஞ்சம் தாமதமா புரிஞ்சுக்கிட்ட ஒரு எழுத்தாளனோட மனநிலைதான் இது.

கசக்குது… ஆனா இதுதான் நிஜம்னு தோணுது.

200 பக்கங்களைத் தாண்ட வேண்டும், குறைந்தது 200 updates கொடுக்க வேண்டும் என்று எத்தனையோ கனவுகளோடும், திட்டங்களோடும் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் மனதில் வைத்திருந்தேன். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் ஒரே நாளில் யாரோ கைகளால் சுக்கு நூறாக உடைக்கப்பட்டதைப் போல சிதறிப் போய்விட்டன. மூன்று வருடங்களாக மனதில் சுமந்து வந்த ஒரு கனவை, இப்படி பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

oru sila emergency issues la site pakam varala bro..today tha story full ah padichen very nice writing

unga update ku wait panravaga comments poduvom nambi irunthingana paarunga inee comments varum

donot upset unwantedly bro

till now 9likes regular readers update pakla pola wait and watch bro
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Raju@Vijay - 17-09-2026, 01:30 PM



Users browsing this thread: 156 Guest(s)