14-09-2026, 07:28 AM
(This post was last modified: 14-09-2026, 07:40 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-09-2026, 03:41 AM)Mindfucker Wrote: Yow... Wnnaya ipdi sollitu pora....
Unkal viruppamthan.
But story continue panna nalla irukkum
மன்னிக்க வேண்டும் நண்பரே… கதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் உண்மையில் என்னுடைய ஆசை. ❤️
ஆனால், என் எழுத்துக்கள் வாசகர்களைக் கவரவில்லை என்பதையும், நான் நினைத்த அளவுக்கு நல்ல எழுத்தாளனாக இல்லை என்பதையும் உணர்ந்தபோது, மிகுந்த வலியுடன் தான் இந்த முடிவை எடுத்தேன்.
இது விருப்பத்தால் எடுத்த முடிவு அல்ல… வலியால் எடுத்த முடிவு.
கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் நண்பரே… நேற்று நான் போட்ட பதிவுக்கு, இன்று வரை நீங்கள் மட்டும் தான் கருத்து பதிவு செய்திருக்கிறீர்கள். இதிலிருந்தே என் எழுத்துக்கள் வாசகர்களை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் உண்மை.
நான் அடிக்கடி சொல்வேன்—என்னுடைய திருப்திக்காகவும், என்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ளவும் தொடர்ந்து எழுதுவேன் என்று. ஆனால், என்னுடைய அந்தத் திருப்தி மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்பதையும் நேற்று தான் உணர்ந்துகொண்டேன்.
அதுவும் இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம்.
அதனால், கொஞ்சம் வலியாக இருந்தாலும்… வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)