நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 59

 நான் ஒரு கொலைகாரி என்று சுவாதி சொல்ல அஞ்சலி அதிர்ச்சி ஆனாள் .என்னடி சொல்ற யாரடி கொன்ன என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அஞ்சலி .அக்கா நான் ஒரு ராசி இல்லாதாவ சின்ன பிள்ளைல இருந்து நான் யார் மேலயாச்சும் பாசம் வச்சு நேசிச்சேனா அவங்க எல்லாம் என்னைய விட்டு பிரிஞ்சுருறாங்க

சின்ன வயுசல என் அப்பா அம்மா ரெண்டு பேரையும் பிடிக்கும் .அவங்க என்னைய விட்டு பிரிஞ்சுட்டாங்க அப்புறம் என் பாட்டி கூட போயி இருந்தேன் அவங்க என்னைய விட்டு மட்டும் இல்ல இந்த உலகத்த விட்டே போயிட்டாங்க
என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஒ இத தான் கொலை பண்ணேன்னு சொல்றியா உங்க பாட்டிக்கு வயசு ஆகிடுச்சு அதுனால போயி சேந்துட்டாங்க அது என்னமோ உன் ராசியல இறந்ததா சொல்ற நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா நான் நிஜமாவே ஒரு கொலை பண்ணி இருக்கேன் என்றாள் .யாரடி கொலை பண்ண உங்க பாட்டியாவ என்றாள் அஞ்சலி . இல்ல இன்னும் சொல்ல போனா நான் ஒரு கொலை இல்ல ரெண்டு கொலை பண்ணி இருக்கேன் ரெண்டு உயிரை கொன்னு இருக்கேன் என்று சொல்லி கொண்டு அழுதாள் ,கதறி கதறி அழுதாள் .அஞ்சலி அவளை சமாதான படுத்தி என் கண்ணுல அழுகாம விசயத்த சொல்லு
அப்ப தான் அதுல இருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கான்னு பாக்க முடியும் என்றாள் அஞ்சலி .அதுல இருந்து என்னைக்கும் தப்பிக்க முடியாது என்று மெல்ல சொன்னாள் .யே முதல நடந்தத சொல்லுமா யார்தான் கொல பண்ண என்று அஞ்சலி கேட்க
ஸ்டெல்லா என்றாள் சுவாதி .
அது யாருடி என்று அஞ்சலி கேட்டாள் .என் பிரண்டு என்றாள் சுவாதி .ஒ நாபகம் வந்துருச்சு எனக்கு முன்னாடி உன் பெஸ்ட் பிரண்ட் உன் காலேஜ் பிரண்ட் என்று அஞ்சலி சொல்ல இல்லக்கா அவன் என் ஸ்கூல் பிரண்டு என்றாள் சுவாதி .
சரி என்னதான் ஆச்சு என்றாள் அஞ்சலி .அவளும் நானும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ப்ளஸ் ஒன் படிக்கும் போது அவ சுரேஷ்ன்னு ஒரு பையன்ன லவ் பண்ணா ரெண்டு பெரும் நெருங்கி பழகுநதுல ஸ்டெல்லா கர்ப்ப்மாகிட்டா அத என் கிட்ட மட்டும் தான் சொன்னா முதல எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல சுரேஷ் கிட்ட கேட்டதுக்கு கருவ கலைச்சுடுவோம் இல்லாட்டி நம்ம அப்பா அம்மா நம்மள கொன்னுடுவாங்கன்னு சொன்னான் ,
எனக்கும் கருவ கலைக்கிறது தான் சரியா தோனுச்சு .நான் ஸ்டெல்லா கிட்ட அப்படியே பண்ணிடுவோம்னு சொல்ல அவ முடியாது ஒரு உயிர கொல்றது பாவம் நான் எங்கயாச்சும் போயி பிச்சை எடுத்தாச்சும் என் குழந்தைய வளத்துக்கிறேன் அப்படின்னு சொல்லி அழுது கிட்டே போயிட்டா அப்புறம் நான் மட்டும் அவ கிட்ட தனியா போயி இதலாம் வேணாம் நம்ம இன்னும் மேஜர் கூட ஆகல மைனர் தான்
நம்மளால நம்ம பேரண்ட்ஸ சமாளிச்சாலும் உனக்கு குழந்தைய பெத்துக்கிற அளவுக்கு சக்தி இருக்குமான்னு தெரியல அதுனால வேணாம்டி சொன்ன கேளுடி என்றேன் .
ஆனா அவ நீ என்ன சொன்னாலும் சரி நான் என் குழந்தைய கொல்ல மாட்டேன் ஏண்டி உனக்கு இந்த மாதிரி நிலைமை வந்து இருந்தா என்ன பண்ணுவன்னு கேட்டதுக்கு நான் சொன்னேன் நான்லாம் தயங்காம உடனே அபார்சன் பண்ணிடுவேன் அப்படின்னு சொன்னேன் .
சொல்ல எல்லாம் நல்லாத்தான் இருக்கும் அனுபவிச்சு பாத்தா தான் அந்த உணர்வு தெரியும் அப்படின்னு சொன்னா .
இங்க பாரு ஸ்டெல்லா நான் அப்பா அம்மா இருந்தும் இல்லாம இருக்கிற ஒரு அனாத நாய் ஆனா நீ அப்படி இல்ல உனக்குன்னு ஒரு நல்ல குடும்பம் இருக்கு .
உனக்குன்னு பாசமா பாத்துகிற ஒரு அப்பா இருக்காங்க ஒரு அம்மா இருக்காங்க அப்புறம் உன் குட்டி தம்பி உன் செல்ல தங்கச்சி அப்படின்னு இத்தன பேரு இருக்காங்க
நாளைக்கே நீ இப்படி மாசமா இருக்கிறது வெளியே தெரிஞ்சா உங்க அப்பா அம்மா நிம்மதியா இருக்க முடியுமா வெளியா தான் போக முடியுமா எல்லாம் எவளவு கேவலாமா பேசுவாங்க இவளவு ஏன் உன் சின்ன தம்பி தங்கச்சிகள கூட ஸ்கூல்ல அசிங்க படும்ங்க இதலாம் தேவையா அதனால அவங்களுக்காகவச்சும் ஆபார்சன் பண்ணிடு அப்படின்னு அவள சொல்லி சமாதானபடுத்துனேன் .
அவளும் அழுது கிட்டே சரின்னு சொன்னா அப்புறம் நாங்க பல ஆஸ்பத்திரிக்கு போயி ஒரு வழியா ஒரு ஆஸ்பத்திரில அவளுக்கு அபார்சன் பண்ணோம் .
ஆனா அவளுக்கு ஆபார்சன் பண்ணப்ப ரத்த போக்கு நிறய போயி ரத்தம் நிறைய வெளியேறி வெளியேறி என்று குனிந்து சுவாதி அழுது கத்தி கொண்டே அவ அதுனால இறந்துட்டா
என்று சொல்லி அழுதாள் .அவ எவளவோ வேணாம்னு சொன்னா நான் தான் கேக்கல நான் தான் அவளையும் கொன்னேன் அவ வயித்துல வளர குழந்தையும் கொன்னேன் .அவ என்னையே பிரண்டா மட்டும் நினைக்காம கூட பிறந்த சிஸ்டர் மாதிரி நினைச்சு பழகுனா அப்படி பட்டவள நானும் கொன்னுட்டேன் என் ராசியும் கொன்னுடுச்சு
அதுல இருந்து நான் யார் கூடயும் அவள் பழகுறதும் இல்ல பாசம் வைக்கிறதும் இல்ல .உங்களுக்கே பல நாள் என் கூட பழகுராதால உங்களுக்கு ஏதும் ஆகிரோம்ன்னு பயந்து இருக்கேன்
என்று அலுது கொண்டே இருந்தவள் தீடிரென்று அழுகையை நிறுத்தி விட்டு அஞ்சலியை பார்த்து அக்கா பேசாம என் கூட சண்ட போட்டு பிரிஞ்சுடங்க அக்கா என்றாள் சுவாதி .லூசாடி நீ ஏன் இப்படி எல்லாம் பேசுனா ஓங்கி கன்னத்துல அறைஞ்சுடுவேன் என்றாள் அஞ்சலி ,
அப்படிதான் என்னைய அடிங்க அக்கா அடிங்க என்று சொல்லி கொண்டே அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள் .அவளை தடுத்து நிறுத்தி அவளை கட்டி பிடித்து அமைதியா இரு அழுகாத என் செல்லம் இல்ல ஒன்னும் இல்ல என்று அவளை சமாதனபடுத்தி விட்டு அக்கா உன்னைய விட்டு எப்பயும் எங்கயும் போக மாட்டேன் .
சண்ட போட்டும் பிரிய மாட்டேன் இந்த உலகத்த விட்டும் போக மாட்டேன் .அது ஏதோ உன் பிரண்டுக்கு நடந்தது விபத்து
இல்ல கொலை நான் தான் பண்ணேன் என்று சுவாதி அவள் மார்பில் சாய்ந்ந்து கொண்டு மெல்ல சொல்ல பேசதாடி அப்புறம் அடிச்சுடுவேன் என்று அஞ்சலி சொல்ல அடிங்க என்றாள் .
சரி விடு அத மறந்துட்டு விக்கி கிட்ட உன் காதல சொல்லி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க ராசி எல்லாம் மூட நம்பிக்கை .எல்லாம் வெஸ்ட் அதலாம் நம்பாத என்றாள் அஞ்சலி
அக்கா எனக்கு ஒரு உதவி பண்ணுவிங்களா என கேட்டாள் சுவாதி .சொல்லுடி என்றாள் அஞ்சலி .எதுனாலும் என்று சுவாதி கேட்க என்னால முடிஞ்சத பண்றேன் என்றாள் அஞ்சலி உங்களால முடியும் என்றாள் சுவாதி அப்ப சொல்லு என்றாள் அஞ்சலி .நீங்க என் மேல முதல சத்தியம் பண்ணுங்க என்றாள் சுவாதி எதுக்குடி சத்தியம் எல்லாம் என்றாள் அஞ்சலி .
பண்ணுங்க என்றாள் சுவாதி .சரி சத்தியம் பண்றேன் என்றாள் .பின் சுவாதி அஞ்சலி கையை எடுத்து சுவாதி தன் தலையில் வைத்து நான் உங்க கிட்ட விக்கிய பிடிச்சு இருக்குன்னு சொன்னதையும் அவன விரும்பேன்னு சொன்னதையும் எக்காரணத்த கொண்டும் அவனுக்கோ இல்ல வேற யார் கிட்டயும் சொல்ல கூடாது இது என் மேலயும் என் பிள்ள மேலயும் சத்தியம் என்றாள் சுவாதி .
அடி பாவி என்னைய ஏண்டி இப்படி ஒரு சத்தியம் பண்ண வச்ச என்று அஞ்சலி அதிர்ச்சியோடு கேட்க நான் நேசிக்கிற விரும்புற விக்கி என்னைய விட்டு பிரிஞ்சு இருந்தாலும் உயிரோட சந்தொசமாவச்சும் இருக்கணும் அதுக்கு தான் என்றாள் .
அட போடி என்று அஞ்சலி சலித்து கொண்டாள் ,நிஜமாத்தான் அக்கா பாருங்க இந்த டேவிட் என்னைய விட்டு பிரிஞ்சான் நிம்மதியா ஒரு பொண்ணோட குடும்பம் நடத்திகிட்டு இருக்கான் .அந்த மாதிரி விக்கியும் நிம்மதியா இருக்கட்டும் என்றாள் சுவாதி ,
அட போடி உன்னையே எவன் பிரிஞ்சாலும் ஏன்டா பிரிஞ்சொம்னு தான் வருத்தப்டுவாங்கே ஏன்னா நீ அழகானவ நல்லவ உன் கேரெக்டர் நல்ல கேரெக்டர் என்று அஞ்சலி சொல்ல
யார் சொன்னது நான் நல்லவன்னு என் கேறேக்டரும் நல்ல கேரெக்டர் இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி நீ நல்லவதான் என்று அஞ்சலி சொன்னாள் .இல்ல நான் கெட்டவ என்றாள் சுவாதி .ஒ புரிஞ்சு போச்சு மறுபடியும் நீ அந்த கொலை மேட்டருக்கே வர யே அத விடுடி உன் பிரண்ட நீ கொல்லல அது ஒரு விபத்து அத மறந்துடு என்றாள் அஞ்சலி .
இல்லக்கா என் கேரெக்டர் சரி இல்லாத கேரெக்டர் ஏண்டி சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று அஞ்சலி கடுப்போடு கேட்க
ஓகே ஓகே நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன் என்று சொல்லி சிரித்து கொண்டே அவள் தோளில் சாய்ந்தாள் .அக்கா உங்க கிட்ட இன்னொன்னு சொல்லட்டுமா என்று சுவாதி கேட்க தயவு செஞ்சு சஸ்பென்ஸ் இல்லாம சொல்லு என்றாள் அஞ்சலி.
அக்கா எனக்கு விக்கிய முத முத பாத்தப்பயே பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .எப்ப நீ டேவிட் லவ் பண்ணும் போதே சைடுல அவன லுக் விட்டாயா அவன் மேல எதுவும் கிரஸ் அந்த மாதிரி பிடிச்சு போச்சா என்று அஞ்சலி கிண்டல் அடிக்க
இல்லக்கா நான் டேவிட்ட பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்து இருக்கேன் .இன்னும் சொல்ல போனா உங்கள எல்லாத்தையும் பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்தேன் . நான் மும்பை வந்ததும் விக்கிய எதார்தாமா பாத்தேன் அப்பவே எனக்கு அவன பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .
அப்படி எங்கடி பாத்தா அவன பப்லியா இல்ல பார்டிலையா என்றாள் அஞ்சலி ,இல்ல ரோட்டுல
நான் மும்பை வந்ததும் ரயில்வே ஸ்டேசன்க்கு வெளியே இருக்க ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு அடி பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்துச்சு எல்லாம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருக்கோம்னு சொல்லி வேடிக்கை பாத்து கிட்டு இருந்தாங்க
அப்ப எங்கயோ இருந்து கார்ல வந்த விக்கி எல்லாரையும் இப்படி ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வேடிக்கை பாக்குரின்களே நீங்களா மனுசங்க்லான்னு ஹிந்தில திட்டிட்டு அந்த குழந்தையே அவனே தூக்கி அவனோட கார்ல வச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனான் .
அப்பவே அவன எனக்கு பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .ஏண்டி நல்லா பாத்தியா அது உன் ஆள் தானா என்று அஞ்சலி கேட்க அன்னைக்கு அந்த இடத்துல இருந்த யாருக்கும் அவன் முகம் மறக்காது என்றாள் சுவாதி .
நான் கூட உன் ஆளு வில்லன்னு நினைச்சேன் பரவல உன் ஆளு ஹீரோ தாண்டி என்றாள் அஞ்சலி .என் ஆளு என்னைக்குமே ஹீரோ தான் அக்கா என்று சிரித்து கொண்டே சுவாதி சொன்னாள் .
ம்ம் இந்த விசயத்த ஆச்சும் சஸ்பென்ஸ் வைக்காம முடிச்சியே என்றாள் அஞ்சலி .சுவாதி அதை கேட்டு சிரித்தாள் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 09-07-2019, 06:40 PM



Users browsing this thread: 51 Guest(s)