Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#23
பின்னால் 48 MP, முன்னால் 25 MP கேமரா
[Image: pouweff_01061.JPG]
6.4 இன்ச் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது ஹானர் வியூ 20. இப்பொழுது வெளியாகும் ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களின் AMOLED வகை டிஸ்ப்ளேவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சாதாரண LCD டிஸ்ப்ளே இருப்பது நிச்சயம் குறைதான். மேலும் இந்தப் போனின் டிஸ்ப்ளேவில் நாட்ச் கிடையாது. அதே நேரத்தில் டிஸ்ப்ளேவின் மேற்புறம் இடது மூலையில் முன்புற கேமரா மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பன்ச் ஹோல் கேமரா டிசைன் என்கிறது ஹானர். இந்த வடிவமைப்பில் வெளியாகும் முதல் ஹானர் ஸ்மார்ட்போன் இது. சாம்சங் நிறுவனம் இதேபோல டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்ட Galaxy A8s என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்ததாக இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதில் உள்ள கேமராக்கள்தான். பின்புறமாக இருப்பது சோனியின் IMX 586 சென்சார் கேமரா. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இதுதான் உலகின் அதிக மெகாபிக்சல் திறன் கொண்ட கேமரா சென்சார் ஆகும். மேலும் TOF என்ற சென்சாரும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புகைப்படத்தை 3D முறையில் படம்பிடிப்பதற்கு உதவும். முன்புறமாக 25 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:28 PM



Users browsing this thread: 2 Guest(s)