காவியாவின் அடுத்த பயணம்(completed)
தருண் உள்ளே சென்ற பிறகு நான் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் சென்றேன். கல்பனா விஷ் செய்ய நானும் விஷ் செய்து அன்றைய வேலைகளை ஒழுங்கு படுத்தினேன். பதினோரு மணி அளவில் தருண் அழைக்க நான் அவர் அறைக்குள் சென்றேன். என்னை அமர சொல்லி காவியா இன்னைக்கு மூன்று மணிக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு நீயும் கலந்துக்கனும் என்று சொல்லி என் கையில் ஒரு போல்டரை குடுத்தார் நானும் சரி என்று சொல்லி என் இடத்திற்கு வந்தேன். எனக்கு ஒரு சிறு குழப்பம் நான் வேலை பார்த்த முந்தைய இடத்தில் இப்படி கிளைன்ட் மீட் பற்றியெல்லாம் பொதுவாக மேல் மட்ட அதிகாரிகளே தான் விவாதிப்பார்கள் ஆனால் இங்கே நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே என்னை இப்படி கலந்துக்க சொல்லுவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த நிமிடம் நான் என்னையே அறியாமல் செய்த தவறு என் இடத்திற்கு சென்றதும் கல்பனாவை அழைத்து அந்த மீட்டிங் பற்றி சொன்னது அப்போவும் அவள் காட்டிய ஆர்வத்தை பார்த்து கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்திருக்கணும் ஆனால் என் மகிழ்ச்சியில் அந்த விஷயத்தையெல்லாம் கவனிக்க தவறவிட்டேன். கல்பனா ஆர்வத்துடன் போல்டரை திறந்து படித்து அவள் வைத்திருந்த படில் சில குறிப்புகளை எடுத்து கொள்ள நான் எனக்கு குறிப்பு எடுக்க தான் அப்படி செய்கிறாள் என்று எடுத்துக்கொண்டேன்.


ஏற்கனவே என் அலுவலகத்தில் பார்த்திருக்கேன். தருண் என்னை எல்லோருக்கும் அறிமுக படுத்த நான் எல்லோருக்கும் கை குடுத்தேன் அவர்கள் எல்லோரும் தங்களை அறிமுக படுத்திக்கொள்ள தருண் மீட்டிங்கை ஆரம்பித்தார். முதலில் எங்கள் நிறுவனத்தை பற்றி ஒரு சிறு குறிப்பு குடுத்து பேச அடுத்து என் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் நம் நிறுவன உற்பர்த்திகளை பற்றி விளக்குமாறு கேட்டு கொள்ள அவளும் அதை விவரமாக விளக்கினார். ஆனால் நான் கவனித்த ஒன்று எங்கள் விருந்தினர்கள் நடுவே எந்த கேள்விகளும் கேட்கவில்லை. அடுத்து தருண் அடுத்த பெண்ணை நிறுவனத்தின் மனித வளம் எத்தனை இடங்களில் எங்கள் கிளைகள் இருக்கின்றன என்ற விஷயங்களை எடுத்து சொல்ல அடுத்து என் வாய்ப்பு என்று காத்திருந்தேன்.


ஆனால் தருண் என்னை அழைக்காமல் அவர் அடுத்து அன்றைய மீட்டிங்கின் பொருளை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். எனக்கு கொஞ்சம் வருத்தம் என்னை பங்குக்கொள்ள விடாமல் எதற்கு என்னை மீடிங்கில் கலந்து கொள்ள அழைக்கணும் என்று. தருண் பேசி முடித்ததும் பிரெண்ட்ஸ் லெட்ஸ் ஹவ் சம் டி என்று சொன்னதும் அறை கதவை திறந்து கொண்டு இரு பெண்கள் டி மற்றும் ஸ்நாக்ஸ் எடுத்து வந்து மேஜை மீது வைத்து விட்டு சென்றனர்.


மீண்டும் மீட்டிங் ஆரம்பிக்க விருந்தினர்கள் அவர்களுடைய எதிர்பார்புகளை எடுத்து சொல்ல தருண் குறித்து கொண்டார் மற்ற இரு பெண்களும் அதை செய்வதை பார்த்து நானும் குறிப்பு எடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் பேசி முடிக்க தருண் பிரெண்ட்ஸ் உங்கள் தேவைகள் என்னவென்று அருமையாக எடுத்து சொன்னீர்கள் என்னுடைய சந்தோஷமெல்லாம் நீங்கள் விரும்பும் அனைத்தையுமே எங்கள் நிறுவனம் எளிதாக டெலிவர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது என் சக நண்பர்களும் அதையே தான் சொல்லுவார்கள் என்று நம்புகிறேன் என்று சொல்லி எங்கள் மூவரையும் பார்க்க நாங்களும் தலை அசைத்து ஆமோதித்தோம் தருண் கொஞ்சம் நிறுத்தி பிரெண்ட்ஸ் என்னடா தேவையில்லாமல் எதற்கு காவியாவை இந்த மீடிங்கில் கலந்துக்க செய்து அவர்கள் பங்களிப்பே இல்லையே என்று உங்கள் மனதில் சந்தேகம் இருந்தால் மன்னிக்கவும் ஆங்கிலத்தில் சொல்லுவார்களே ஆல்வேஸ் தி பெஸ்ட் பார் தி எண்டு என்று அது போல காவியா தான் இனி இந்த ப்ராஜக்டின் ஒருங்கினைபாளராக செயல் பட போறார் என்று சொன்னதும் எனக்கு என் தலையில் கூடை கூடையாக ரோஜாக்களை கூட்டியது போன்று இருந்தது. நான் எழுந்து நின்று நன்றி தருண் என்று சொல்லி இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப சிறந்த ஒரு அங்கீகாரம் நிச்சயம் என் முழு திறனையும் வெளிபடுத்துவேன் என்ற உறுதியை தருணுக்கு அளித்து நம் புதிய நண்பர்களுக்கு அவர்கள் தேவைகளை அவர்கள் விரும்பும் வகையில் எங்கள் நிறுவனம் அளிக்கும் அதற்கு என் முயற்சி முழுமையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று சொல்லி முடிக்க என் அருகே இருந்த மற்ற இரு பெண்கள் என்னை வாழ்த்த வந்திருந்த ஆண்கள் எனக்கு கை குடுத்து வரவேற்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 09-07-2019, 11:07 AM



Users browsing this thread: 2 Guest(s)