Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--titleColor)]தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ![/color]
[color=var(--titleColor)]டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியாரால் இயக்கப்படும் முதல் ரயிலாக அமையவுள்ளது.[/color]



டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியாரால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ இடையே ஓடும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 2016 இல் அறிவிக்கப்பட்டது. டெல்லி- லக்னோ மார்க்கத்தில் நாள் ஒன்றுக்கு 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டிலேயே வெகு பிசியான மார்க்கம் இது.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ரயில்வே தனது இரண்டு ரயில்களை தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கான செயலை முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற மற்றுமொரு பாதையை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஆலோசித்து வருகிறது, அதுவும் 500 கி.மீ தூரத்திற்குள் இருக்கும்.
இந்த ரயில் தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் ஏல நடைமுறைக்கு பின்னர் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
"இந்த இரண்டு ரயில்களும் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், அடுத்த 100 நாட்களுக்குள் அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றை இயக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். குறைந்த நெரிசல் உள்ள பாதைகளை கண்டறிந்து முக்கியமான சுற்றுலா இடங்களை இணைப்பதே இதன் யோசனையாக இருந்தது. இரண்டாவது பாதை விரைவில் அடையாளம் காணப்படும், "ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

இந்த முடிவு, நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிற்சங்கங்களிலிருந்து எதிர்ப்பை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விவகாரத்தில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
[Image: kalaignarseithigal%2F2019-07%2F3b68fc46-...2Ccompress]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 09-07-2019, 09:10 AM



Users browsing this thread: 71 Guest(s)