02-01-2019, 10:30 AM
ஹாலிவுட் டாப் 10: வசூலில் கலக்கிய படங்கள்
2018, பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு சிறப்பாகவே அமைந்தது. எதிர்பார்ப்பை உருவாக்கிய கையளவு படங்கள் மண்ணைக் கவ்வினாலும் பல படங்கள் வசூல் சாதனை படைத்தன.
முக்கியமாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்த வருடம் அதிக மவுசு. டாப் 10-ல் 6 படங்கள் சூப்பர் ஹீரோ களம் கொண்டவை. இந்த ஆறில் ஒன்று அனிமேஷன் படம். மேலும் மூன்று படங்கள் பிரபல franchise-ன் பட வரிசைகள். ஒன்று மட்டுமே தனிப்படம். ஹாலிவுட்டின் மொத்த வசூலும் 2017-ஐ விட இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது.
இதோ சர்வதேச அளவில் சிறப்பாக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் பட்டியல்.
10 - FANTASTIC BEASTS: THE CRIMES OF GRINDELWALD
ஹாரிபாட்டரின் மேஜிக் உலகில் நடக்கும் கதை. முதல் பாகத்தின் வெற்றி என இந்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாக்வே இருந்தது. கூடுதலாக, க்ரிண்டல்வால்ட் கதாபாத்திரத்தில் ஜானி டெப்பை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால் படம் ஹாரிபாட்டர் படிக்காத பெரும்பான்மை ரசிகர்களை நிறைய தகவல்கள் சொல்லி திக்குமுக்காட வைத்தது. எதிர்பார்த்ததை விட வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி சுமாரான படமாகவே அமைந்தது. எனினும் சர்வதேச அளவில் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்து சிறிய அளவு லாபமாக அமைந்தது.
9 - ANT-MAN & THE WASP
மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கென ஒரு திரைக்கதை வடிவம் உள்ளது. அதிலிருந்து பிசகாது சொல்லி அடித்த இன்னொரு படம். அவெஞ்சர்ஸ் இன்ஃபினி வார் படத்துக்குப் பிறகு வெளியான படம் என்பதால் கடைசியில் எண்ட் கிரெடிட்ஸ் முடிந்து வரும் காட்சி என்னவாக இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. சர்வதேச அளவில் 622.7 மில்லியன் டாலர்களை வசூலித்தது. விமர்சனங்களும் சாதகமாகவே இருந்தன. சீனாவில் மார்வல் படங்களில் குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்தது.
8 - BOHEMIAN RHAPSODY
குயின் இசைக்குழுவின் கதையைச் சொல்லும் படம். விமர்சனங்கள் சுமாராகவே இருந்தாலும் சர்வதேச அளவில் குயின் இசையின் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆரத்தழுவிக் கொண்டனர். வரலாற்றில் நடந்த சில விஷயங்களை மாற்றிச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் ரசிகர்களுக்கு அது பெரிய குறையாகத் தெரியவில்லை. 643.6 மில்லியன் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது.
7 - DEADPOOL 2
2016-ல் வந்த முதல் பாகத்தின் தொடர்ச்சி. கெட்டவார்த்தை பேசி, வன்முறையக் கையாளும், அவ்வப்போது கேமராவைப் பார்த்து ரசிகர்களிடம் பேசும் சூப்பர் ஹீரோவின் கதை. முந்தைய பாகத்தின் வசூலை முந்தவில்லை என்றாலும் 735.6 மில்லியன் டாலர்கள் வசூலை ஃபாக்ஸ் நிறுவனம் எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும். படத்தின் இறுதியில் வந்த டைம் டிராவல் திருப்பத்தைப் பற்றி இன்றளவும் ரசிகர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.