08-07-2019, 09:30 PM
பாகம் 22.
எனக்கே இப்படி இருக்கையில் அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் குழந்தை விஷயத்தில், அவளை ஏமாற்றியது எந்தளவு அவளைப் பாதித்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!
ஒரு மணி நேரத்தில் அவள் வெளியே வந்ததிலேயே புரிந்தது, அவள் முழு வீடியோக்களையும் பார்க்கவில்லை என்று! என்னாலேயே பார்க்க முடியவில்லை. ஆனாலும், பழிவாங்க, விவரம் வேண்டுமென, ஆடியோவையும், முக்கியக் காட்சிகளையும் மட்டும் கேட்டிருந்தேன், பார்த்திருந்தேன்.
இந்த முறை சற்று அழுத்தமாகவே கூப்பிட்டேன்! நிமிர்ந்து என்னைப் பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தன! கலங்கிய கண்களுடன் கேட்டாள்.
தன்னோட சுகத்துக்காக என்ன வேணா செய்யலாமாண்ணா?
ஆம்! இனி அவர்களுக்கு விடிவு காலம்தான்!
ஒட்டு மொத்த வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது!
மற்றக் கதைகளில் வருவது போல், அந்த வீடியோவைப் பார்க்கும் போது எனக்கோ, மைதிலிக்கோ, காம போதை ஏறவில்லை! அந்தக் காட்சிகளைப் பார்த்து நாங்கள் ரசிக்கவில்லை.
மாறாக, உள்ளம், உச்சகட்ட கோபத்திலும், அவமானத்திலும் வெறி கொண்டிருந்தது! இன்னும் சொல்லப் போனால் என்னால், முழுமையாக எல்லா வீடியோவையும் பார்க்கக் கூட முடியவில்லை.
ஒரு மணி நேரத்தில் அவள் வெளியே வந்ததிலேயே புரிந்தது, அவள் முழு வீடியோக்களையும் பார்க்கவில்லை என்று! என்னாலேயே பார்க்க முடியவில்லை. ஆனாலும், பழிவாங்க, விவரம் வேண்டுமென, ஆடியோவையும், முக்கியக் காட்சிகளையும் மட்டும் கேட்டிருந்தேன், பார்த்திருந்தேன்.
நாங்கள் அவர்களுக்குள் கள்ள உறவு இருக்கும் என்று நினைத்தோமேயன்றி, இப்படி மாறி இருப்பர் என்று எதிர்பார்த்திருக்கவில்லை!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், எங்கள் மனதில் கண்டிப்பாக அவர்களைப் பழி வங்க வேண்டுமா என்று ஏதேனும் தயக்கம் இருந்திருந்தால், இந்த வீடியோக்கள், அதனை தகர்த்தெறிந்திருந்தது!
மெல்ல அழைத்தேன்… மைதிலி! மைதிலி!
ம்.. திடுக்கிட்டது போல் என்னைப் பார்த்த மைதிலி மலங்க மலங்க விழித்தாள்! அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை!
அவளை, அப்படியே விட்டு விட முடியாதே!
ஒரு டம்ளரில் தண்ணீரைக் கொண்டுச் சென்று, அவளை உலுக்கி, ஓரளவு சுய நிலைக்கு கொண்டு வந்தேன். அவள் கையில் டம்ளரை கொடுத்து, குடி என்றேன்.
வாங்கியவள் அப்படியே அமர்ந்திருக்க, இந்த முறை அழுத்தமாக, ’குடி மைதிலி’ என்றேன். என் கண்டிப்பில் தண்ணீரை குடித்தவள், டம்ளரை வைத்து விட்டு, தலை குனிந்து அமர்ந்திருந்தாள்!
மைதிலி!
தன்னோட சுகத்துக்காக என்ன வேணா செய்யலாமாண்ணா?
என்ன பதில் சொல்வது இந்தக் கேள்விக்கு!
என்னதான் கிராமத்துல வளர்ந்த பொண்ணுன்னாலும், என்னாலியும் மாடர்ன்னா யோசிக்க முடியும்ண்ணா! அவரு என்னை பட்டிக்காடுன்னு சொல்றது கூட, நான் என் மனசுக்கு புடிச்சவரை மாமா னு கூப்பிடனும்னு என் ஆசையைச் சொன்னதை வெச்சுதான்! அதுக்காக ஒரேடியா முட்டாள்னு நினைச்சிடுறதா? இவிங்க அம்மா, என்னை எத்தனை தடவை மலடியை, ஏமாத்தி கட்டி வெச்சிட்டாங்கன்னு சொன்னாங்க தெரியுமா?
மைதிலி…. வேறு என்ன சமாதனம் சொல்வது என்று தெரியாமல் நானும், திகைத்திருந்தேன்! ஆனாலு, அவள் மனக்குமுறல்கள் வெளிவருவது நல்லது என்றே சும்மா இருந்தேன்.
ஒருத்தருக்கு உண்மையா இருக்கிறது, அவ்ளோ பெரிய தப்பாண்ணா…… அவ்ளோ கஷ்டமா?
இப்படியே சில நேரம் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தவளை என்னால் பார்க்க முடியவில்லை!
இப்ப அழுவுறதை நிறுத்தப் போறியா இல்லையா? திடீரென்ற ஒலித்த சத்தமான என் குரலில், அவள் பயந்து என்னைப் பார்த்தாள்!
இன்னமும் எதுக்கு அந்த கேடு கெட்டவனுக்காக அழுதுட்டு இருக்க? இப்பிடியே அழுது புலம்பி, அவிங்க புத்திசாலிங்க, நாம முட்டாளுங்கன்னு ப்ரூவ் பண்ணப் போறியா? இல்லை, தகுதியில்லாதவங்களுக்காக இனியும் உன் வாழ்க்கையை வீணடிக்கப் போரதில்லைன்னு நிமிந்து நிக்கப் போறியா? சொல்லு!
என் கோபமான பேச்சில் அவளது அழுகை நின்றிருந்தாலும், மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்!
மெல்ல அவளருகில் சென்றவன், கூப்பிட்டேன். மைதிலி!
நிமிர்ந்து என்னைப் பார்த்தவள், கண்கள் கலங்கச் சொன்னாள்.
மனசு கேக்க மாட்டேங்குதுப்பா! வலிக்குது!
அதற்கு மேல் என்னாலேயே தாங்க முடியவில்லை! இழுத்து அவளை அணைத்துக் கொண்டேன்! அவளும் என் மார்பில் சாய்ந்து தேம்பினாள்!
கொட்டிடு மைதிலி! உன் மனசுல இருக்கிறதையெல்லாம் இன்னிக்கே கொட்டிடு! நாளைல இருந்து, உன் கண்ல இருந்து கண்ணீரே வரக் கூடாது!
அவள் இன்னும் இறுக்கிக் கொண்டாள். எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியாது, கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழுகை குறைந்தது. ஆனாலும் விசும்பிக் கொண்டே இருந்தாள்!
அப்படியே அவளை பெட்ரூமிற்கு அழைத்துச் சென்று, என் மேல் சாய்த்துக் கொண்டு, படுக்கையில் சாய்ந்தேன்!
எனது ஒரு கரம் அவளைத் தழுவியிருந்தது! இன்னொன்றோ, அவள் தலையினை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது!
அவள் முகத்தை என் மார்பினுள் புதைத்துக் கொண்டு இன்னமும் விசும்பிக் கொண்டிருந்தாள்! எனது கைகள், அவளது கண்ணீரை துடைத்து விட்டு, இரு கைகளாலும் அவளைத் தழுவி, மீண்டும் தலையை வருடிக் கொண்டுத்தவாறே, மெல்லிய குரலில் அவளிடம் பேசினேன்!
போதும் மைதிலி! தேவைக்கு அதிகமாவே அழுதிட்ட! இதுக்கு மேலயும் உன்னை வருத்திக்காத. உனக்கு எப்பியும் சப்போர்ட்டா நான் இருப்பேன். இனியும் உன்னை அழுக நான் விட மாட்டேன்!
அவ்வளவுதான். அதன் பின் எங்களிடம் பேச்சு எதுவும் இல்லை. அவளுடைய விசும்பல்கள் நின்றிருந்தாலும், இன்னமும் என் கைகள் எனது வருடலை நிறுத்தவில்லை.
அறை முழுக்க மவுனமும், எங்கள் அன்பும் நிறைந்திருந்தது!
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று தெரியாது… ஆனால் எங்களை அறியாமல் அணைத்தபடியே நன்கு தூங்கியிருந்தோம்!
கண் விழித்த பொழுது பொழுது விடிந்திருந்தது!