10-07-2026, 09:10 PM
(This post was last modified: 10-07-2026, 09:12 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 21
இது என் மகள்.. என்.... அக்கா மகள் தியா.. அக்கா மகள் என்பதை மிக சன்னமாகச்சொன்னாள் மேகலா..
கிருஷ்சுக்கு திடீரென மேகலா, ஒரு குழந்தையுடன் வந்தது அதிர்ச்சியாக இருந்தாலும், ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
மீரா, மேகலை, மகளோட வந்திருக்காங்க..
அது ஒரு காதல் ஜோடிக்கான மதிய உணவாக மாற்ற நினைத்திருந்த மீராவிற்கு இந்த குழந்தையின் வரவு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அவள் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டாமல் இருக்க சிரமப்பட வேண்டியிருந்தது..
"வாங்க மேகலை, வாங்க குட்டி.." இருவரையும் அழைத்தாள்.
மீரா, தன் கையிலிருந்த பூச்செடி நாற்றுகளைத் தந்தாள்..
"எதுக்கு இந்த ஃபார்மாலிட்டியெல்லாம்.."
"கிருஷ் உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கார்.. அவருக்கு வேலையில ரொம்ப சப்போர்ட்டா இருப்பிங்க.. வேலையைத் தாண்டியும் ஆலோசனை எல்லாம் சொல்லுவீங்கன்னு.."
"உங்க பேரென்ன"..
"தியா" சிறுமி இன்னும் புதிய இடத்தில் ஒட்டாமல் மேகலையுடன் நெருங்கி அமர்ந்திருந்தாள்..
"இப்ப ஜூஸ் கொண்டு வர்றேன்.. கிருஷ் நீங்க உள்ள வாங்க.."
கிச்சனில் "என்ன கிருஷ், மேகலை குழந்தையோட வர்றது உன் பிளான் தானா?" மீராவின் குரலில் கோபம்..
"மீரா, நிஜமா இது என் ஐடியா இல்லை. அவளா கூட்டிட்டு வந்திருக்கா. அது அவ அக்கா குழந்தையாம். அவ குழந்தை போல வளர்த்தறான்னு நினைக்கிறேன்.. குழந்தை இருக்கறதே எனக்குத் தெரியாது."
மீராவின் திட்டப்படி நடைபெறுவது அசாத்தியமாக தோன்றியது. கிருஷ்சுக்கு நிம்மதியாக இருந்தது.
--0--0--0--0--0--0--0--0--0
ஆனால் மீரா சளைக்கவில்லை. வரவேற்பறைக்கு வந்து மேகலையையும் குழந்தையையும் ஜூஸ் கொடுத்து உபசரித்தாள். குழந்தையிடம் உனக்கு என்ன கார்ட்டூன் பிடிக்கும். என்ன கலர் பிடிக்கும் என சிறு கேள்விகள் மூலம் மிக வேகமாக நெருக்கமானாள் மீரா.
"வாடா தங்கம், நாம மொட்டை மாடிக்குப் போய் இந்தச் செடியை நடலாம்" என்று குழந்தையைக் கொஞ்சியபடி கையைப் பிடித்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள்.
கிருஷ், மேகலா, இன்னும் சாலட் செய்யலை.. கொஞ்சம் அதை கவனிக்கறிங்களா? இருவருக்கும் ஒரே வேலை தந்து, தனியாக விட்டுச் சென்றாள்.
--0--0--0--0--0--0--0--0--0
சமையலறையின் குறுகிய இடைவெளியில் கிருஷும் மேகலையும் கொஞ்சம் அருகில் நிற்க வேண்டியிருந்தது. மேகலை வெங்காயத்தை அறுக்க ஆரம்பித்தாள்.. கிருஷ், வெள்ளரிக்கு தோல் சீவினான். மாடியிலிருந்து குழந்தையின் மழலைச் சிரிப்பும், மீராவின் கொஞ்சலும் கீழே கேட்டுக் கொண்டிருந்தன.
அவ ரொம்ப நாள் அப்புறம் இப்படி வேறு ஆட்களோடு பழகிச் சிரிக்கிறா கிருஷ். என் அக்கா போனது, என்னோட ஏமாற்றங்கள் இதனால நாங்க ஒரு கூட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிட்டோம்.
இதனால் தான் இத்தனை நாட்கள் யாருடனும் பழகாமல், ரிலேசன்ஷிப் தவிர்க்கிறாளா மேகலை.. மனதுக்குள் கேள்விகள் எழுந்தது..
ஐ ஆம் சாரி மேகலை, இதுல நான் வேற நடுவில குழப்பிட்டேன்..
இட்ஸ் ஓகே சார்..உங்க வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகுதுல்ல..
ம்ம்.. ஆம்.. உன்னைப் பத்தி சொல்லியிருக்கேன்.. நீ கொஞ்சம் சப்போர்ட்டிவா இருந்ததா சொல்லியிருக்கேன்.. அதான் மீரா உன்னை இன்னிக்கு லஞ்ச்சுக்கு கூப்பிடச் சொன்னாள்.. கேரட்டை தோல் சீவ ஆரம்பித்தான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)