06-07-2026, 08:14 AM
நீண்ட நேரம் என் அமைதியைக் குலைக்க விரும்பாதவளாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது என்னுடைய தோளை ஆதரவாய்த் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள். அப்போதுதான் என் அம்மா அங்கே இருக்கிறாள் என்பதை உணர்ந்தபடி, நான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்து என் அம்மாவைப் பார்த்தேன்.
"என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி dull-ஆவே இருக்க? எதுவும் பிரச்சினையா? உன்னோட hospital-ல எதுவும் பிரச்சினையா, இல்ல உன்னோட குடும்பத்துல எதுவும் பிரச்சினையா?" என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபடி இருந்தாள்.
நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. என் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அவளும் என்னிடமிருந்து எந்தப் பதிலும் எதிர்பார்க்கவில்லை; கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அமைதியானாள். சிறிது நேரம் என் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்பு அவளிடம் கேட்டேன், "அம்மா, உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?"
நான் இதுவரை என் அம்மாவிடம் இதுபோல் கேட்டதே கிடையாது. முதன்முதலாக நான் இப்படி கேட்பதைக் கேட்டு என் அம்மாவே அதிர்ச்சியடைந்தாள். இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், சிரித்தபடியே என்னுடைய தலையை இழுத்துத் தன் மடியில் என்னைப் படுக்க வைத்தாள்.
"இங்க பாரு தமிழ், நீ என்ன பிரச்சினைல இருக்கிறன்னு எனக்குத் தெரியாது, நீயா சொன்னாதான் எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் உனக்கு பொதுவா ஒரு அறிவுரை சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. எந்தப் பிரச்சினைக்குமே ஆரம்பம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்கும். அதனால நீ உன்னோட மனசைப் போட்டுக் குழப்பிக் காத சரியா?" என்று என் தலைமுடியைக் கோதியபடி கூறினாள்.
எனக்கும் அம்மாவின் அந்த அரவணைப்புத் தேவையாயிருந்தது. அமைதியாய்க் கண்களை மூடியபடி என் அம்மாவின் தலைகோதலை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிறு அமைதி என் மனதுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. என்னிடம் அனுமதி கேட்காமலேயே இரண்டு காவலர்களை என் மனைவியினுடைய அலுவலகத்தில் என் நண்பன் நிறுத்தியிருக்கிறான் என்று முதலில் எனக்கு வந்த கோபம் இப்போது இல்லை. எப்படி இருந்தாலும் என் மனைவிக்கு அலுவலகத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிற உண்மை இப்போதுதான் எனக்குப் புரிந்தது.
என் அம்மாவின் மடியில் நான் இளைப்பாறிக் கொண்டிருந்த அதே நேரம், தன் காவல் நிலையத்தில் தனது அறையில் உட்கார்ந்திருந்த சக்திவேலின் முகம் இப்போது கோபத்தில் இறுகியிருந்தது. நீண்ட நேரம் சுவரையே வெறித்துப் பார்த்தபடி இருந்த சக்திவேல், இப்போது தனது மொபைலில் என்னுடைய மனைவியின் நம்பரைத் தேடிப்பிடித்து call செய்தான்.
முதன்முறையாக அழைத்தபோது, என் மனைவி சக்திவேலின் call-ஐக் கட் செய்தாள். ஆனால், மீண்டும் முயற்சி செய்தான் சக்திவேல். இப்போது போனை attend செய்தவள் வேணாவெறுப்பாக, "ம் சொல்லுங்க அண்ணா, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறமா பேசவா?" என்றாள்.
"பரவாயில்லமா, சரி நான் உன்கிட்ட பேசுற எல்லாத்தையுமே நீ உன்னோட வீட்டுக்கார்ட்ட சொல்றியா?" என்றான்.
என்ன ஏதென்று தெரியாமல், திடீரென வெளிப்படையாகவே சக்திவேல் தன்னிடம் இப்படிக் கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவள் சிறிது அதற்குத் தடுமாறினாள். பின்பு, "ஆமாண்ணா, இதுல என்ன இருக்கு? என்ன இருந்தாலும் என் வீட்டுக்கார்ட்ட நான் சொல்றேன். ஏன், அதுல எதுவும் தப்பா? அப்படிச் சொல்லக்கூடாதா?" என்றாள்.
"ச்சச்ச, நான் அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் கேட்கலம்மா. நமக்குள்ள நம்ம பேசிக்கிற எல்லாத்தையுமே உன் புருஷன்ட்ட நீ சொல்லிருவியான்னுதான் நான் கேட்டேன்," என்றான்.
தான் வேலையில் busy-யாக இருக்கிறேன் என்று சொன்னதை அவன் சற்றும் பொருட்படுத்தவே பொருட்படுத்தாமல், தன்னிடம் மேலும் பேச்சு வளர்த்துக் கொண்டிருப்பது எனது மனைவிக்கு வெறுப்பைத் தூண்டியது.
"சாரிங்கண்ணா, வேற எதுவும் விஷயம் இருக்கா? இல்லாட்டி நான் அப்புறமா பேசவா? இப்ப நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்," என்றுவிட்டு, மீண்டும் சக்திவேலின் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தாள்.
Sற்று நேரம் என் அம்மாவின் மடியிலேயே படுத்துக் கொண்டிருந்திருந்துவிட்டுச் சட்டென எழுந்து உட்கார்ந்தேன். நான் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என் அம்மா.
"சரிம்மா, என் friend ஒருத்தன் வந்து காவல் அதிகாரியா இருக்கிறான்ல... அவனைத் தெரியுமா உனக்கு, ஞாபகம் இருக்கா?" என்றேன்.
சிறிது நேரம் யோசித்தவள், "ஆமாண்டா, அந்த நடுமரம் மாதிரி வளர்ந்திருப்பானே, அவன் பேர் என்ன... ஏதோ வேலுன்னு முடியுமே, சக்திவேல் தானே? ஆமா, இப்ப எதுக்கு திடீர்னு அவனைப் பத்திக் கேக்குற?" என்றாள்.
"ஆமாம்மா, அவனேதான். அவனைப் பத்தி நீ என்ன நினைக்கிற?" என்றேன்.
திடீரென்று சம்பந்தமே இல்லாமல் சக்திவேலைப் பற்றி நான் கேட்பதால் சிறிது நேரம் யோசித்தவள், பிறகு, "அவனுக்கு என்னடா குறைச்சல்? அவன் நல்ல பிள்ளைதானே! ஏன், உன்கிட்ட எதுவும் वம்பு பண்றானா?" என்றாள்.
"சச்ச, அப்படி எல்லாம் இல்லைம்மா. அவன் என்கிட்ட எல்லாம் வம்பு பண்ணல; சும்மா பொதுவாத் கேக்குறேன்," என்றேன்.
என்னைப் பார்த்துச் சிரித்தவள், பின்பு மீண்டும் ஒரு வார்த்தை கூறினாள். "நீ கோபமாவோ பதற்றமாவோ இருந்தேன்னா, உன்னைச் சுத்தி இருக்கிற எல்லாருமே உனக்குக் கெட்டவங்களாத்தான் தெரிவாங்க. அதே நேரம் நீ நின்னு நிதானமா யோசிச்சேன்னா, சுத்தி இருக்கிறவங்கள்ல யாரு நல்லவங்க, கெட்டவங்கன்னு உனக்கு நல்லாவே புரியும். அதனால எந்தச் சூழ்நிலையா இருந்தாலும் சரி, நீ பதற்றப்படாத," என்றாள்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)