Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
Bigg Boss 3 'க.பா.'வை வெளியேற்றச் சொன்னால் 'பா. பா.'வை வெளியேற்றிய பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்த பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டுவிட்டாராம்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சாக்ஷி அல்லது கவின் அல்லது அவர்கள் இருவரையும் சேர்த்தே வெளியே அனுப்பி வைக்குமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் பாத்திமா பாபுவை தான் வெளியேற்றியுள்ளார் பிக் பாஸ்.


[Image: fathimababu-1562492009.jpg]






பாத்திமா பாபு
பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு ஏற்கனவே வெளியேறி தன் சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் போட்டியாளராக பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்தவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார். கவின்(கடலை பார்ட்டி(க. பா.) அல்லது சாக்ஷி வெளியேற்றப்பட்டிருந்தால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் வெளியேறினால் காதல் கதை பாதியில் முடிந்துவிடும் என்பதால் பிக் பாஸ் தற்போதைக்கு அவர்களை வெளியேற்ற மாட்டார். மேலும் வனிதா விஜயகுமார் இருந்தால் தான் தினமும் சண்டையும், சச்சரவும் ஏற்பட்டு பிக் பாஸ் வீடு பரபரக்கும் என்பதால் அவரும் கடைசி வரை இருப்பார்.
[Image: meera-1562492026.jpg]
 
பாசம்
பாத்திமா பாபுவை பிக் பாஸ் போட்டியாளர்கள் அம்மா என்று பாசமாக அழைத்தனர். பார்வையாளர்களுக்கும் பாத்திமா பாபு நடந்து கொண்ட விதம் பிடித்திருந்தது. மீரா மிதுனை பார்த்து அவர் பெண் கடவுள் போன்று என்று பாத்திமா பாபு தெரிவித்தது மட்டும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிகமாக கடுப்பானது வனிதா விஜயகுமார் தான்.
[Image: bigboss67-1562492039.jpg]
 
டாஸ்க்
பாத்திமா பாபுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தும் அவரை வெளியேற்றியுள்ளனர். வயதில் மூத்தவர் அவரால் டாஸ்குகளை ஓடியாடி செய்ய முடியாது என்பதால் முதல் ஆளாக வெளியேற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அடுத்து மோகன் வைத்யா அல்லது சித்தப்பு சரவணன் தான் வெளியேற்றப்படுவார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 08-07-2019, 09:14 AM



Users browsing this thread: 104 Guest(s)