25-06-2026, 06:02 AM
வணக்கம் நண்பரே. என்னுடைய டெலிகிராம் பக்கத்தில் உங்களைப் போல பல ரசிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், என் சொந்த வாழ்க்கையிலும் என் நண்பர்கள் சிலர் இதே போன்ற சூழ்நிலையில் சிக்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் வெறும் விளையாட்டுத்தனமாகவும், ஒரு சின்ன தற்காலிக சந்தோஷமாகவும் நினைத்துத் தொடங்கிய இந்த ஒரு ஈர்ப்பு, பின்னாளில் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், குடும்பத்தையும், கௌரவத்தையும் அடியோடு அழித்து, இன்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்பதை நான் கண்சூடாகக் கண்டிருக்கிறேன்.
அந்த அனுபவங்களின் அடிப்படையிலும், உங்கள் மீதுள்ள அக்கறையிலும் இந்த அறிவுரையை வழங்குகிறேன்.
வாழ்க்கையில் சில உறவுகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரைதான் அழகு, மரியாதை, பாதுகாப்பு எல்லாமே. திருமணத்திற்கு முன்பு மச்சினிச்சியாக இருந்தவர், இன்று உங்கள் தம்பியின் மனைவி இந்த ஒரு மாற்றம், ஒட்டுமொத்த உறவின் எல்லையையும் அடியோடு மாற்றிவிட்டது என்பதை நீங்கள் முதலில் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் காட்டும் நெருக்கம், உங்கள் வர்ணனைகளை ரசித்தது எல்லாமே ஒரு 'அப்பாவித்தனமான மச்சினிச்சி' என்ற முறையில், தன் அக்காவின் கணவர் என்ற அசாத்திய நம்பிக்கையில்தான். அதை ஒருபோதும் தவறான சம்மதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இப்போது அவர் உங்கள் தம்பியின் மனைவி. திருமணம் முடிந்த பிறகும் அவர் உங்களிடம் "ஏன் மாமா வர்ணிக்க மாட்டேங்குறீங்க?" என்று கேட்பது, பழையபடி தன் மாமா தன்னிடம் சகஜமாகப் பேசவில்லையே என்ற ஏக்கத்தில் தானே தவிர, உங்களுடன் தவறான உறவை எதிர்பார்க்கவில்லை. அவரே இப்போது நீங்கள் நெருங்கினால் சிரித்துக்கொண்டே விலகிப் போகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதிலிருந்தே தெரியவில்லையா? அவர் தன் எல்லையை உணர்ந்துவிட்டார். இனி நீங்கள் தான் உங்கள் எல்லையை வகுக்க வேண்டும்.
உங்கள் தம்பி உங்களை நம்பி, அந்தப் பெண்ணை மணந்திருக்கிறார். நீங்கள் காட்டும் இந்த அதீத ஈர்ப்பும், ரசனையும் ஏதோ ஒரு கணத்தில் வெளிப்பட்டால்... அது உங்கள் தம்பியின் வாழ்க்கை, உங்கள் மனைவியின் நிம்மதி, உங்கள் குடும்பத்தின் கௌரவம் என அனைத்தையுமே சுக்குநூறாக உடைத்துவிடும்.
கொடியில் இருக்கும் உடைகளைப் பார்த்து கற்பனை செய்வது, அவர்களின் தனிப்பட்ட ரகசியங்களை ஒட்டுக் கேட்பது, பொறாமைப்படுவது எல்லாமே ஒருவித 'மனநோய்' போன்ற சிந்தனைக்கு உங்களை இட்டுச்செல்லும். இது உங்கள் தம்பியை நீங்கள் ஏமாற்றுவதற்குச் சமம்.
உங்கள் மனைவியோடு அதிக நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் மனைவியிடம் இருக்கும் அழகையும் அன்பையும் ரசிக்கத் தொடங்குங்கள். உங்கள் கவனம் மாறினால், இந்தத் தவிப்பு குறையும்.
தம்பி மனைவியோடு தனியாகப் பேசுவது, சைகை காட்டுவது, கிள்ளுவது போன்ற செயல்களை இன்றோடு, இந்த நொடியோடு முற்றிலுமாக நிறுத்துங்கள். அவர் பேச வந்தால், "இனிமே நீ என் தம்பி பொண்டாட்டிம்மா... " என்று நாசூக்காக, சொல்லி விலகுங்கள்.
"அவள் என் தம்பியின் சொத்து, என் தம்பியின் வாழ்க்கை" என்ற எண்ணத்தை உங்கள் மனதில் ஆழப் பதிய வையுங்கள். உடலின் ஈர்ப்பு தற்காலிகமானது, ஆனால் உறவுகளின் துரோகம் தரும் வடு ஆயுள் முழுதும் அழியாதது.
நாம் படிக்கிற காமக் கதையையும், நிஜ வாழ்க்கையையும் எப்போதுமே ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது நண்பரே. பெரும்பாலானோர் கதையில் வருவது போலவே நிஜ வாழ்க்கையும் சீராக, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்று தப்புக் கணக்குக் போடுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. கதை வேறு, நிஜம் வேறு! மனதில் இருக்கும் வக்கிரத்தை, ஆசைகளை முடிந்தால் கதையோடு முடித்துவிடுங்கள். அதை ஒருபோதும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் கொண்டு செல்ல வேண்டாம். அது பேராபத்தில் கொண்டு போய் முடித்துவிடும்.
ஆசை உருவாவது மனித இயல்புதான். ஆனால், எது தர்மம், எது உறவுமுறை என்று பகுத்தறிந்து, ஆசையைக் கட்டுப்படுத்துவதில்தான் மனிதனின் ஒழுக்கமும் கண்ணியமும் அடங்கியிருக்கிறது. குற்றவுணர்ச்சி இருக்கும் போதே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் தம்பிக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஒரு நல்ல அண்ணனாக, மாமனாக வாழப் பழகுங்கள். அதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அழகு.
இதையெல்லாம் மீறியும் உங்களால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இன்றைய நவீன மருத்துவ உலகில் நல்ல மனநல மருத்துவர்கள் (Psychiatrists) இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஊரில் பார்க்கத் தயக்கமாக இருந்தால், வெளியூரில் இருக்கும் ஏதோ ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து மனம் விட்டுப் பேசுங்கள்.
கண்டிப்பாக இதற்காகச் சில மருத்துவ ஆலோசனைகளும், மாத்திரைகளும் கூட இருக்கின்றன. அவை நம்முள் இருக்கும் இப்படிப்பட்ட வக்கிர ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும். இது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அந்த மருத்துவரிடம் உங்கள் உறவுமுறையை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை என்றால், "என் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணின் மீது கட்டுக்கடங்காத ஈர்ப்பு ஏற்படுகிறது" என்று பொதுவாகச் சொல்லுங்கள், அவர்களே புரிந்து கொள்வார்கள். என் நண்பர்கள் சிலரிடம், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதை நான் கண்டிருக்கிறேன்.
இன்றைய அறிவியல் உலகில், இப்படி ஒரு வக்கிர ஆசை நமக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டாம். இங்கே இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஏதோ ஒரு மூலையில் வக்கிரங்கள் இருக்கத்தான் செய்கின்றன; என்னைச் சேர்த்துத்தான் சொல்கிறேன்! அது நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்போது அது நம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறதோ, அப்போதே நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வழிகளைத் தேட வேண்டும்.
இப்போதும் ஒன்றும் கைமீறிப் போகவில்லை நண்பா... நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள், நன்றி!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)