01-06-2026, 07:06 AM
(This post was last modified: 01-06-2026, 07:07 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-05-2026, 12:02 AM)Saipallaviveriyan4u Wrote: ஆனால் வரவேற்பு இல்லையே.....எழுதுவதற்கு ஆர்வம் இல்லாமல் போனது.... மீண்டும் ஒரு வருடம் இடைவெளி எடுக்கலாம் என்று நினைக்கிறேன்...
ஹாய் நண்பா,
கதை எழுதுவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் எழுதுங்க..வரவேற்பு எதிர்பார்த்து எழுத வேண்டாம். என்னோட கதைக்கும் வாசகர்கள் குறைவு தான். ஆனா தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் சில பேர் இருக்காங்க. அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை..மேலும் என்னோட தனிமையை போக்க இது ஒரு சிறந்த வடிகாலாக இருக்கு.
இப்போ முன்னே மாதிரி வாசகர்கள் வருவது இல்லை. ஏனெனில் இப்போ இருக்கும் genz தலைமுறை கிட்ட வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இப்போ net திறந்தாலே வீடியோக்கள் கொட்டி கிடக்கு.இன்னும் சொல்ல போனால் நினைத்தால் அனுபவிக்கவும் நேரடியாக இப்போ வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. இப்போ digital யுகம் வந்து விட்டது அதனால் இதை அவர்கள் விரும்பவில்லை.
புத்தகம் வாசிக்கும் பொழுது அந்த கற்பனை விரிவடையும்.நாம் அந்த உலகத்துக்கு செல்வோம்.
அது ஒரு இனிய அனுபவம். அதை உணர்ந்தவர்கள் கண்டிப்பா உங்க, என்னோட கதையை விரும்புவார்கள்.
நீங்க ஒரு வருடம் gap விட்டு வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.
மும்பை, கொல்கொத்தா நகரங்களில் சிகப்பு விளக்கு பகுதி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் பாலியியல் குற்றங்கள் குறைவதற்காக தான். அது போல இந்த site மற்றும் எழுத்தாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ இச்சை உள்ளவர்களுக்கு ஒரு வடிகாலாக இருக்காங்க.
உங்க தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேரம் இருந்தா மட்டும் எழுதுங்க. Likes,comments எதிர்பார்த்து எழுதாதீங்க. ஏமாற்றம் தான் மிஞ்சும்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)