நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 58

ஒரு நாள் முன்பு விக்கி டேவிட் ஆக்கிசிடன்ட் ஆன பின்பு அவன் அங்கே ஆஸ்பத்திரியில் இருந்ததால் அவன் சுவாதியிடம் அஞ்சலியை வர சொல்லி விக்கி இருந்து கொள்ள சொன்னதால் சுவாதியும் அஞ்சலி அக்காவை போன் பண்ணி வர சொன்னாள் ,அஞ்சலியும் வந்தாள் ஹலோ மதர் எப்படி இருக்கீங்க உள்ள உங்க குட்டி மக்கி எப்படி இருக்கான் என்றாள் அஞ்சலி .

வாங்க அக்கா அது என்ன புதுசா மதர் நான் என்ன கல்யாணம் முடிக்காம கன்னியாஸ்திரியவா போயிட்டேன் என்றாள் ,அது இல்லடி நீதான் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிட்டாலே அந்த மதர் சொன்னேன் என்றாள் அஞ்சலி .அப்புறம் அது என்ன குட்டி மக்கி என கேட்டாள் .அதான் உன் வயித்துல வளருதே அதான் குட்டி மக்கி என்றாள் .அக்கா first of all அவங்க அப்பா பேரு மக்கீ இல்ல விக்கி விக்னேஷ் இத நான் உங்க கிட்ட பல தடவ சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .
ஒ சாரி டியர் ம்ம் பரவல அவன பிடிக்கிலன்னு சொல்லிட்டு எல்லா பொண்ணுக மாதிரியும் பேசுற ஒரு குடும்ப பொண்ண மாறிட்ட கிட்டத்தட்ட என்றாள் அஞ்சலி .நீங்க சொல்றது ஒன்னும் புரியல என்றாள் சுவாதி .புரியலையா அதாவது நார்மலா கல்யாணம் ஆன பொண்ணுக கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பேர சொல்ல கூச்சபட்டுகிட்டு அவரு இவருன்னு சொல்வாங்க .அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யார் ஆச்சு புருஷன பத்தி கேட்டா குழந்தையோட பேர சொல்லி அவ அப்பா
for example என்னைய எடுத்துக்கோ நானும் உங்க அண்ணன starting ல அவங்க அப்படின்னு சொன்னேன் .அப்புறம் முதல் குழந்தை ராம் பிறந்ததுக்கு அப்புறமா அவர எங்கன்னு யாருச்சு கேட்டா ராம் அப்பா கடைக்கு போயிருக்காரு ராம் அப்பா குளிக்கிறாரு அப்படிதான் சொல்வேன் நீயும் அதே மாதிரி சொல்ல ஆரம்பிச்சு நார்மல் பொண்ண மாறிட்டியே என்றாள் அஞ்சலி .ஏதோ சொல்றிங்க போங்க எனக்கு இன்னும் புரியல என்றாள் .
சரி என்ன இவன் அப்பா எங்க போனாரு என்று சுவாதி வயிற்ரை செல்லமாக தொட்டு கொண்டே கேட்டாள் .ம்ம் ஏதோ ஒரு மீட்டிங்காம் டெல்லி வரைக்கும் போயிருக்கான் நாளைக்கு தான் வருவானாம் என்றாள் ,ம்ம் என்ன உன்னையே எப்படி வச்சு இருக்கான் என்றாள் அஞ்சலி .ம்ம் அவன் என்ன என் புருசனா நல்லா வச்சு இருக்கிறதுக்கு அவன் ஒரு ரூம்ல இருக்கான் நான் ஒரு ரூம்ல இருக்கேன் .நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ரூம் மேத்ஸ் அண்ட் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளவு தான் என்றாள் .
ஒ அப்படியா என்று அவள் கண்களை ஊடுருவது போல் ஒரு மாதிரியாக அஞ்சலி கேட்க சுவாதி ஆமாக்கா அதுக்கு ஏன் இப்படி பாக்குறிங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்ல உன் கண்ணுல ஏதோ ஒரு மாறுதல் அதாவது சந்தோசம் பயம் ரெண்டும் கலந்த மாதிரி இருக்கு அதான் அப்படி பாக்குறேன் என்றாள் அஞ்சலி .ஒ அதுவா ஒரு வேல நான் கர்ப்பமா இருக்கிறதால அப்படி தெரியும் போல என்றாள் .
ம்ம் நிஜமாதானா என்று மீண்டும் அஞ்சலி ஒரு மாதிரியாக கேட்க அதற்கும் மேல் அந்த விசாரணை பார்வை பொறுக்க முடியாமல் ஓகே alright என்னால இதுக்கும் மேலயும் உண்மைய மறைக்க முடியல .யார்கிட்டயாச்சும் இதுக்கும் மேல சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு என்றாள் சுவாதி .சரி சொல்லு என்றாள் அஞ்சலி .எனக்கு விக்கி மேல என்று சொல்ல முடியாமல் அஞ்சலியை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தாள் .
இவ ஒருத்தி எதையாச்சும் சொல்றதுக்கு முன்னாடி சீரியல் கதாநாயகி மாதிரி அழுக ஆரம்பிச்சுடுவா என்று சொல்லி அஞ்சலி அவளை தட்டி எழுப்பி சொல்லுடி உனக்கு அவன் மேல என்ன என்றாள் .ஏதோ சொல்ல முடியாத பீலிங் வர வர அவன ஏதோ பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு அவனும் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்லவானா மாறிகிட்டு வரான் என்றாள் .இது எப்ப இருந்து அவன பிடிக்க ஆரம்பிசுச்சு மேடத்துக்கு என்றாள் அஞ்சலி .
தெரியல அன்னைக்கு எனக்கு மாங்கா வாங்க மார்க்கெட் புல்லா அலைஞ்சப்ப அப்புறம் அன்னைக்கே மழை பெஞ்சப்ப எனக்காக ஓடி வந்து என்னைய கூப்பிட வந்தது அப்புறம் ஒரு நாள் முழுக்க கார்ல அவன் கூட இருந்தது .இதலாம் என்னைய அவன் பக்கம் இழுத்துருச்சு அக்கா .அண்ட் உங்களுக்கு தெரியுமா இப்பலாம என் பையனுக்கும் அவன பிடிச்சு போச்சு போலக்கா நான் விக்கிய பாக்குறப்ப எல்லாம் அப்படியே உள்ள பயங்கரமா ஏதோ ரொம்ப சந்தோசமா துள்ளி குதிக்கிற மாதிரி உதைக்கிறான் .இருக்காதடி அவங்க அப்பன பாக்கும் போது அவனுக்கு உள்ள சந்தோசம் வர தான் செய்யும் என்றாள் அஞ்சலி
அண்ட் எனக்கும் இப்பலாம் அவன பாக்கும் போதெலாம் என் இதயம் ரொம்ப பட படன்னு அடிக்குது ஆரம்பத்துல அவன் கூட ரூம்ல இருக்கும் போது ஏண்டா இவன் கூட எல்லாம் இருக்கோம்னு தோணும் .சில நேரங்கள அவன் என்னைய ரொம்ப திட்டும் போது அப்படியே எதாச்சும் கடல குதிச்சு செத்துர்லாம்னு தோணும் .ஆனா என் குழந்தைக்காக பொறுத்து கிட்டேன் .ஆனா இப்பலாம் அவன் என்னையே திட்டவே மாட்டிங்குறான் என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு
ஏன் அக்கா உங்களுக்கு எப்பாயச்சும் உங்க வீட்டுகாரார் உங்கள திட்டாம இருந்தா எப்படி இருக்கும் என சுவாதி கேட்டாள் .ஒ அந்த பீலிங்க கேட்குறியா அவங்க நம்மள கொஞ்சாம இருந்தா கூட ஒன்னும் தெரியாது ஆனா ஒரு நாள் நம்மள திட்டாம அமைதியா இருந்தா அந்த நாளே ஏதோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கும் என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி ஆமாக்கா அதே தான் அக்கா அவன் இப்ப எல்லாம் என்னையே திட்டவே மாட்டிங்குறான் அது ஒரு மாதிரி இருக்கு
அட்லிஸ்ட் கோபம் ஆச்சும் படுவான் இப்ப அதுவும் பட மாட்டிங்குறான் எப்ப அவன் என்னைய திட்டுவான்னு ஏக்கமா இருக்கு என்றாள் சுவாதி .அப்புறம் என்ன பண்றான் என்று அவள் சொல்வதை ரசித்து கொண்டே கேட்டாள் அஞ்சலி .தெரியல திட்டவே மாட்டிங்குறான் ரொம்ப பிரண்ட்லியா பேசுறான் அண்ட் சில நேரத்துல என்னைய பாத்தா உடனே பேச மாட்டின்கிறான் அப்படியே கொஞ்ச நேரம் கம்முனு இருக்கான் என் முகத்தையே பாத்து கிட்டு இருக்கான் .எனக்கும் அவன பாத்தா என்னைய அறியாம என் வாய் சிரிக்குது சந்தோசத்துல ,
அதாவது உன்னையே பாத்து அவன் ஜொள்ளு வடிக்கிரான்னு அவன பாத்து நீ வழியிற சரி சொல்லு என்றாள் அஞ்சலி .அப்படியா அக்கா அவன் என்னைய பாத்து நிஜமாவே வழியிரனா என்றாள் மெல்ல ஒரு புன்னகையோடு சுவாதி கேட்க .அட ஆமாடி மேல சொல்லு என்றாள் அஞ்சலி .சொல்றதுக்கு என்ன இருக்கு இனி I think I am Love With VIKI என்று சொல்லி விட்டு அப்படியே ஒரு சின்ன வருத்ததோடு தலையை குனிந்தாள் .அது நல்ல விசயம் தாண்டி அத ஏன் வருத்ததோடு சொல்ற என்று கேட்டாள் அஞ்சலி .
அது வந்து நான் அவன முழுக்கவே லவ் பண்ணிருவநேனோ பயமா இருக்கு என்றாள் சுவாதி .ஏண்டி அதுல என்ன பயம் என்று அஞ்சலி கேட்க அது வந்து வந்து என்று சொல்ல முடியாமல் அஞ்சலியின் தோளில் சாய்ந்து அழுதாள் .ஏண்டி அழுகுர விக்கி பொம்பள பொறுக்கியா இருக்கிரதாலையா என கேட்டாள் ,இல்ல அக்கா அது ஒரு மேட்டரே இல்ல சொல்லபோனா விக்கி இப்ப ரொம்ப திருந்திட்டான் .எனக்கு தெரிஞ்சு அவன் இப்பகுள்ள எந்த பொன்னுகிட்டயும் போன மாதிரி தெரியல அப்படியே போயி இருந்தாலும் அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல .
அப்புறம் என்னதான்டி உன் கவலை என்றாள் அஞ்சலி .அதாவது விக்கிய நான் இழக்க விரும்பல அக்கா என்று சொல்லி மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள் .அப்புறம் என்னடி அவனுக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு உனக்கும் அவன பிடிச்சு இருக்கு அல்ரெடி ரெண்டு பேர் குழந்தையும் வளருது அப்புறம் என்ன குழந்தையோட சந்தோசமா கல்யாணம் பண்ணிகொங்க எந்த குழந்தைக்கும் கிடைக்காத பாக்கியம் அவங்க அப்பா அம்மா கல்யாண போட்டோல கூட இருக்க போற பாக்கியம் உன் குழந்தைக்கு கிடைக்க போகுது என்னடா மவனே பெரியம்மா சொல்றது சரிதானே என்று வயற்றை தொட்டு அஞ்சலி கேட்க
சுவாதி அதை கேட்டு மெல்ல சிரித்தாள் .சிரித்தும் அழுதும் கொண்டே சொன்னாள் கேட்க நினைச்சு பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இதலாம் நடக்குனுமே என்றாள் சுவாதி .முதல கண்ண தொடடடி முண்ட கண்ணி என்று அவள் கண்ணீரை அஞ்சலி துடைத்து விட்டு கேட்டாள் ஏன் நடக்காது உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு நானே நீ விரும்புறத அவன் கிட்ட சொல்றேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா வேணாம் என்றாள் ,ஏண்டி வேணாம் என கேட்டாள் சுவாதி .இல்ல இது சரிபட்டு வராது என்றாள் சுவாதி .எதுக்குடி சரியா வராது என்றாள் அஞ்சலி .இல்லக்கா வேணாம் என்று மறுபடியும் சுவாதி சொல்ல அஞ்சலி கடுப்பாகி இப்ப என்ன தாண்டி சொல்ல வர என்றாள் அஞ்சலி .
ஏன்னா நான் ஒரு ராசி இல்லாதாவ என்று கத்தினாள் சுவாதி .அதை கேட்டு அஞ்சலி சிரித்தாள் அடீ போடி நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறேன்னு பயந்தா போயும் போயும் ராசிய போயி ஒரு காரணமா சொல்ற என்னைய கூடதான் இப்ப வரைக்கும் என் மாமியார் ராசி இல்லாதாவ விளங்காதவ அப்படின்னு சொல்றாங்க நான்லாம் அத இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்ருவேன் .போயும் போய் ராசிக்கு போயி பயப்புடிரியே நீ எல்லாம் என்ன மார்டன் காலத்து பொண்ணு என்று அஞ்சலி கிண்டல் அடித்து சிரிக்க
அக்கா நான் ஒரு கொலைகாரி என்றாள் சுவாதி .சிரித்து கொண்டு இருந்த அஞ்சலி சிரிப்பை நிப்பாட்டி விட்டு என்னது என்றாள் ,சுவாதி மெல்ல சொன்னாள் நான் ஒரு கொலைகாரி ….. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 07-07-2019, 09:58 AM



Users browsing this thread: 50 Guest(s)