Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும்
வாராக் கடன் சிக்கலினால் வங்கிகள் புதிதாகக் கடன் தரமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றன. வங்கிகள் இன்னும் அதிக அளவில் கடன் தருவதற்குப் புதிய முதலீடு தேவை என்பதால், ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இதன்மூலம் புதிய கடன்கள் தரப்பட்டு, பல புதிய தொழில்கள் தொடங்கப்படலாம். பொதுத் துறை வங்கிகள் பலப்படுத்தப்படும் என அறிவித்திருக்கும் மத்திய நிதி அமைச்சர், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முதலீட்டினைத் திரட்டுவதற்கான பல வழிகளையும் செய்துதந்திருக்கிறார். இதற்கான சட்டம் நிதி மசோதாவில் கொண்டுவரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் அபாயமாக விளங்கும் வாராக் கடன் பிரச்னை இதன்மூலம் தீர்ந்து, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
விவசாயத்துக்கு உதவும் ஜீரோ பட்ஜெட்
விவசாயத் துறை வளர்ச்சிக்கும் பல திட்டங் களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். மதிப்புக் கூட்டல் தொழிலில் தனியார் நிறுவனங் கள் ஈடுபட ஊக்குவிக்கப்படும்; 10,000 புதிய விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, விவசாய விளைபொருள்களின் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜீரோ பட்ஜெட் மூலம் விவசாய விளைபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என விவசாய வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர்.
[/color]
[color=var(--content-color)]நாரி து நாராயணி
பெண்களின் முன்னேற்றத்துக்கும் இந்த பட்ஜெட்மூலம் பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் நிதி அமைச்சர். ஜன்தன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.5,000 ஓவர் டிராஃப்ட் கடன் தரப்படும்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி மானியம் எல்லா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் இனி தரப்படும்; முத்ரா திட்டத்தின்கீழ் தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.
தீர்க்கதரிசனத்துடன்கூடிய பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் இத்தனை திட்டங்களாலும், உடனடியாக வேலைவாய்ப்பு உருவாகி பொருளாதார வளர்ச்சி பெருகிவிடாது என்றாலும், நீண்ட காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சியினைப் பெருக்க இந்தத் திட்டங்கள் நிச்சயம் உதவவே செய்யும். அந்த வகையில் தீர்க்கதரிசனத்துடன் போடப்பட்ட பட்ஜெட் இது என்றே சொல்லலாம்.
தவிர, கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. நாடாளுமன்றத் தேர்தலை முன்நிறுத்தி அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், பல முக்கியமான திட்டங்களை அப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் முந்தைய பா.ஜ.க அரசுக்கு இருந்தது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஜெயிக்காமல், வேறு கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதால், பரபரப்பான பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்த ஆண்டு எப்படிப்பட்ட பட்ஜெட்டினை அவர் தாக்கல் செய்கிறார் என்று!
[/color]

[color=var(--content-color)]சூட்கேஸுக்கு டாடா![/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F18b6c7a1-8755-4266-b...2Ccompress][/color]
[color=var(--content-color)]பொதுவாக, நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது கையில் பிரவுன் சூட்கேஸுடன்தான் வருவார்கள். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழர் உடையான வேட்டி, சட்டையுடன் நாடாளு மன்றத்துக்கு வருவார் என்றாலும், அவரும் சூட்கேஸுடன் வந்துதான் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்வார்.
இந்த மரபினை முதலில் உடைத்து, வழக்கமான சூட்கேஸைக் கொண்டு வராமல், சிவப்புப் பையினைக் கொண்டு வந்திருந்தார் நிர்மலா சீதாராமன். சிவப்புப் பையைக் கொண்டுவந்ததற்கான காரணத்தை நிதி அமைச்சர் சொல்லவில்லை என்றாலும், நமது பட்ஜெட்டினை நம்முடைய கலாசாரத்துக்கேற்றபடி மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவர் இதைச் செய்திருப்பார் என்று நம்பலாம்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-07-2019, 09:36 AM



Users browsing this thread: 97 Guest(s)