Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]பட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்?[/color]

[color=var(--title-color)]பட்ஜெட்[/color]
[Image: vikatan%2F2019-07%2Fd5b682c0-9e93-4bba-a...2Ccompress][color=var(--meta-color)]நிர்மலா சீதாராமன்[/color]
[color=var(--content-color)]மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும்; பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்த பல பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும்; வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fc3d620ae-5e95-4cd4-8...2Ccompress][/color]
[color=var(--content-color)]ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரக் கூடியதாக இருப்பதாக மக்களிடம் ஒரு கருத்து உருவாகியிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள்கூட இந்த பட்ஜெட் குறித்து அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் உள்ளபடியே ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிற வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்...
நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு வருவதற்கான இலக்குகள் இந்த பட்ஜெட்டில் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளன. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (சுமார் 350 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கு. இந்த ஆண்டே நம்முடைய பொருளாதாரம் மூன்று டிரில்லியன் (சுமார் 210 லட்சம் கோடி ரூபாய்) இலக்கினை எட்டத் தேவையான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் சொல்லி யிருக்கிறார் நிதி அமைச்சர்.
[/color]
[color=var(--content-color)]வளர்ச்சிக்கு உதவும் உள்கட்டமைப்பு...
நிலம் வழியாகவும், நீர் வழியாகவும், ஆகாயம் வழியாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார், நிதி அமைச்சர். ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த 12 ஆண்டுகளுக்குள் ரூ.50 லட்சம் கோடி தேவை. ரயில்வே துறையின் வளர்ச்சிக்கான நிதியை பப்ளிக் - பிரைவேட் - பார்ட்னர்ஷிப்மூலம் திரட்ட முடிவு செய்திருப்பதுமூலம், தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பாக அமையும்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fa89584bc-a798-43c4-a...2Ccompress][/color]
[color=var(--content-color)]அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கான சாலைகளின் தரத்தினை உயர்த்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. உள்நாட்டு நதிகள்மூலம் சரக்கு போக்குவரத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்தை அதிகப்படுத்துகிற மாதிரி பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். இந்தத் திட்டங்கள் மூலம் போக்குவரத்து வசதி பெருகி, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள்
வேலைவாய்ப்பின்மை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சமயத்தில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சில வகையான பொருள்களுக்கு கலால் வரி விதிப்பதன்மூலம், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பி.வி.சி பொருள்கள், டைல்ஸ், ஆட்டோ உதிரிப்பாகங்கள், மார்பிள்கள், ஆப்டிக்கல் பைபர் கேபிள், சி.சி.டி.வி கேமரா போன்ற வற்றுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் சில எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க விவசாயம் சார்ந்த துறையில் 75,000 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள். புதிய பொருள்களை உருவாக்க உதவும் 80 பிசினஸ் இன்குபேட்டர்களும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களும் தொடங்கப்படும். அரசின் இந்தத் திட்டங்களால் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உருவாகும்
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-07-2019, 09:35 AM



Users browsing this thread: 4 Guest(s)