06-07-2019, 05:22 PM
“ காலன் கொண்டு சென்ற நீ
“ மீண்டும் கருவாகி உருவானால்...
“ என்னுள் தான் அந்த உற்சவமும்....
“ உனது ஆனந்த ஊர்வலமும்...
“ நடைபெற வேண்டும்
“ உனக்கு நான் உயிர் தரவும்,
“ எனக்கு நீ உறவாகவும்!
“ இந்த வரம் மட்டும் போதும் தாயே!
“ வாழ்ந்து விடுவேன் உலகில்!!!
“ மீண்டும் கருவாகி உருவானால்...
“ என்னுள் தான் அந்த உற்சவமும்....
“ உனது ஆனந்த ஊர்வலமும்...
“ நடைபெற வேண்டும்
“ உனக்கு நான் உயிர் தரவும்,
“ எனக்கு நீ உறவாகவும்!
“ இந்த வரம் மட்டும் போதும் தாயே!
“ வாழ்ந்து விடுவேன் உலகில்!!!
எழுதிய கவிதையை சாட்டில் போட்டாள்.....
"அருமை சிமி,, ரொம்ப ரொம்ப அருமை..... ஆனால் இதன் அர்த்தம்? உன் தாயை நீ வயிற்றில் சுமக்கனும் என்பது தானே... உனக்குள் உன் அம்மா கருவாகி உருவாவது உற்சவம் தான்..."
உடனே அர்த்தம் கண்டு கொண்டானே? "ம்ம்"
"வெகு விரைவில் அந்த ஆனந்த உற்சவம் நடைபெற வாழ்த்துகிறேன் சிமி" நிறைய சிரிக்கும் பொம்மைகள்....
மான்சியால் பதில் சொல்ல முடியவில்லை... அவள் நிர்ணயித்திருக்கும் கன்னி வாழ்வில் அம்மா வந்து கருவாவது எப்படி? இன்று ஏன் இப்படியொரு கவிதை வந்ததென்றே அவளுக்குப் புரியவில்லை... அதுவும் சத்யன் கேட்டதும் எழுதியது இதயத்தை இம்சித்தது...
"நான் கிளம்பறேன் சத்யன்"
"ம் கிளம்பு சிமி.... உன் கவிதை கொடுத்த தாக்கத்தில் கனவுகளோடு தூங்கப் போகிறேன்" துள்ளி குதிக்கும் பொம்மை ஒன்று...
"ம் பை" என்பதோடு ஆப்லைன் வந்தாள்.... நெஞ்சில் இருப்பதுதான் நினைப்பில் வந்ததோ? நினைப்பில் தங்கியது தான் கவிதையாக விழுந்ததோ?
அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பேருந்தில் ஏறி அப்பாவைக் கான பயனமானாள் மான்சி.....
ரயில்வே ஸ்டேஷன் சென்று பத்ரியின் அலுவலகம் சென்றபோது மகளுக்காக காத்திருந்தார் பத்ரி... மகளைக் கண்டதும் முகம் மலர வந்து கையைப் பற்றிக் கொண்டு "நீ வருவேன்னு இன்னும் சாப்பிடலைடா.... வா கேன்டீன் போய் சாப்பிடலாம்" என்று மகளுடன் நடந்தார்...
"நானும் உங்க கூட சாப்பிடனும்னு கொண்டு வந்த சாப்பாடை ஆயாக்கிட்ட குடுத்துட்டேன்பா..." புன்னகைப் பூவாய் பேசிய மகளை எண்ணி பூரித்தவாறு கேன்டீனுக்குள் நுழைந்தார்...
உணவு ஆர்டர் செய்து ஏதேதோ கதைகள் பேசியபடி இருவரும் சாப்பிட்டனர்.... வெளியே வந்தவரை கைப்பிடித்து ஒகுக்குப் புறமாக கிடந்த பெஞ்சுக்கு அழைத்துச் சென்றாள் மகள்.....
அமர்ந்ததுமே "என்னம்மா பேசனும்?" என்று பத்ரி ஆரம்பிக்க..... "ம் ம் பேசனும்ப்பா... முக்கியமான விஷயம் பேசனும்... அதுக்கு முன்னாடி உங்க மகளை நீங்க நம்புறீங்க தானே?" என்று மான்சி கேட்கவும்..
சட்டென்று பதறியவராக "என்னம்மா இப்படி சொல்ற? உன்னை நம்பாம இந்த உலகத்துல வேற யாரை நம்புவேண்டா கண்ணா?" உணர்வசப்பட்டு பேசியவரின் கண்ணீர் சிதறியது...
"அப்படின்னா நான் எடுக்கும் முடிவுகளுக்கும் நடக்கப் போகும் சம்பவத்துக்கும் நீங்க சம்மதிக்கனும்"
"நீ என்ன விஷயம்னு சொல்லும்மா" அவசரப்படுத்தினார் பத்ரி...
"அப்பா,, ரயில் விபத்தில் நாம சந்திச்ச அருணகிரி பேமிலிக்கு சித்தி கால் பண்ணி பேசியிருக்காங்க.... அவங்களோட மகன் சத்யன்ற சின்னுவுக்கு நம் ரீத்துவை கல்யாணம் செய்து தர்றதா சொல்லிருக்காங்க... அவங்களும் எங்களுக்குத் தேவை பத்ரி குடும்பத்து சம்மந்தம் தான்னு சொல்லி சத்யன் ரீத்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லியாச்சு... மாப்பிள்ளை கலிபோர்ணியாவில் படிச்சிக்கிட்டு இருக்காராம்.. படிப்பு முடிஞ்சி அடுத்த வருஷம் வந்ததும் மேரேஜ் வைக்கனும்னு பேசிருக்காங்கப்பா" என்று மான்சி சொல்லவும்....
"ஓ......... இப்ப நான் என்ன செய்யனும்" என்று விரக்தியாகக் கேட்டார் பத்ரி.....
"அப்பா,, ப்ளீஸ்ப்பா மூணாவது மனுஷன் மாதிரி பேசாதீங்க... ரீத்து உங்க மகள்,, உங்க ரத்தம்ப்பா.... அவளோட எதிர்காலத்தில் உங்களுக்கும் முழு அக்கறை இருக்கனும்... இந்த கல்யாணம் சம்மந்தமா நீங்க தான் எல்லாம் பேசனும்" சற்று கோபமாகவே பேசினாள் மான்சி..
"நீ சொல்றது சரிதான்,, ரீத்து என் மகள் தான்.... அவளோட எதிர்காலத்தில் எனக்கும் அக்கறையிருக்கனும் தான்.... ஆனா அவளுக்கு மூத்தவள் நீ இருக்கியேம்மா? உன்மேல அக்கறைப் பட யாருமில்லையே?" பத்ரியின் கண்ணீர் வார்த்தைகள் மான்சியை கலங்க வைத்தது...
ஏன் இல்லை? எனக்காக அழ... என் சந்தோஷமே தனது வாழ்க்கைனு நினைக்க ஒருத்தன் இருக்கானே..... சத்யன்... ஒரு வயசுலயே எனக்கு புருஷனா என் அம்மாவால் பதிவு செய்யப்பட்ட என் சத்யன் எனக்காக அழுவானே......
எண்ணங்கள் கொடுத்த இறுக்கத்தில் கண்கள் குளமாக "என்னை விடுங்கப்பா... இப்போ ரீத்துவோட லைப் தான் முக்கியம்.... சித்திக்கு இந்த சம்மந்தத்தை முடிச்சே ஆகனும்னு இருக்காங்க.... அவங்களுக்காக நாம நிறைய கடன் பட்டிருக்கோம்ப்பா" என்ற மான்சி பார்வையை வேறு புறம் திருப்பி சன்னமான குரலில் "புருஷனோட அன்பில்லாம ஒரு பெண் வாழ்றது எவ்வளவு கொடுமை தெரியுமாப்பா? அந்த கொடுமையை இருபது வருஷமா அனுபவிக்கிறாங்க சித்தி.... அவங்களுக்கு சந்தோஷம் ரீத்துவோட கல்யாண வாழ்க்கை தான்... நாம அதையாவது சரியா பண்ணலாமே அப்பா?" மான்சியின் வார்த்தைகள்ல் வழக்கம் போல அமைதி தான்.... ஆனால் அந்த வார்த்தைகளின் வீரியம் பத்ரியை குமுற வைத்தது....
சற்றுநேரம் அங்கே வார்த்தையாடல்கள் இல்லை.... அமைதியின் ஆதிக்கம் அதிகமாக... அதை கிழித்து "புரியுது சிமிம்மா.... நான் செய்றேன்ம்மா... நீ சொல்ற எதையுமே நான் செய்றேன்ம்மா.... அதுக்கு முன்னாடி நீ எனக்கொரு வாக்கு குடுக்கனும்" என்று தனது கையை நீட்டினார்...
திகைப்பில் விழிகள் விரிய "என்ன வாக்குப்பா?" என்று கேட்டாள் மகள்...
"ரீத்துவுக்கு இதே இடத்தில் கல்யாணம் செய்துடலாம்.... அதுக்குப் பிறகு நீயும் ஒரு நல்லவனைப் பார்த்துக் கல்யாணம் செய்துக்கனும் சிமிம்மா.... எனக்காக தனிச்சு வாழ்றேன்னு சொல்லக்கூடாதும்மா" என்று கேட்டதும்...
மான்சிக்கு அதிர்ச்சி தான்... அந்த அதிர்ச்சியையும் மீறி ஒரு ஆறுதல்,, ரீத்துவின் திருமணத்திற்குப் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்னது ஆறுதல்.... அதைப் பிறகு சமாளிக்கலாம் முதலில் ரீத்து கல்யாணம் என்ற யோசனையுடன் "சரிப்பா நிச்சயம் நீங்க சொல்ற மாதிரி செய்றேன்" என்றாள்...
பத்ரியின் முகத்தில் சந்தோஷம் முகாமிட மகளின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்....
தகப்பனின் சந்தோஷம் கண்ணீரைக் கொடுக்க... அதை சிரமப்பட்டு மறைத்தபடி "எல்லாம் சரிப்பா.... ஆனா சித்தி சொன்னப் பொய் கடைசி வரை மெயிண்டெய்ன் ஆகனும்... இல்லேன்னா மொத்த குடும்பத்துக்கும் அவமானம் தான்" என்று மான்சி கூற....
"சரிம்மா,, ரீத்துவோட கல்யாணம் முடிஞ்சப் பிறகு அவங்களுக்கு உண்மை தெரிஞ்சிட்டா மட்டும் அவமானம் வராதா?" கூர்மையாக கேட்டார் பத்ரி...
"அதை பிறகு பார்க்கலாம்ப்பா... அப்போ சமாளிக்கிறதுக்கு ஒரு வழி தோணாம போய்டாது.... இப்போ எனக்குத் தேலை சித்தியோட நிம்மதி,, அதுக்கு ரீத்துவோட கல்யாணம்... அவ்வளவுதான்" என்று எழுந்து கொண்டவள் "மறந்தும் நான் கன்னிப்பெண்னு அவங்களுக்குத் தெரியக் கூடாதுப்பா" என்று எச்சரிக்கை செய்தாள்....
செயலற்ற சம்மதத்தோடு தலையசைத்தபடி பத்ரியும் எழுந்து கொண்டார்.... இருவரும் அமைதியாக நடந்து வந்து அவரவர் பாதைகளில் பிரிந்தனர்
"வீட்டுக்காம்மா போற" என்று மகளை கேட்டார் பத்ரி "ஆமாப்பா" என்று கூறிவிட்டு கிளம்பினாள்....
வீட்டுக்குச் சென்றவளை கேள்வியாக நோக்கினாள் கலா..... சிரிப்பும் சந்தோஷமுமாக சித்தியை நெருங்கியவள் "அப்பாக்கிட்ட பேசியாச்சு சித்தி... அவருக்கு முழு சம்மதம்... நீங்க அவங்க கூட பேசி ஒரு நல்லநாள் பாருங்க.. அப்பாவை வச்சு எல்லாத்தையும் பேசிடலாம்" என்று கூறியவளை சிறு புன்னகையுடன் பார்த்தாள் கலா...
"மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்கார்ல... அதனால நிதானமாவே பேசலாம்னு சொல்லிருக்காங்க" என்று கலா சொல்லவும் "அதுவும் சரி தான் சித்தி... நிச்சயம் செய்து ரொம்ப நாள் காத்திருக்கக் கூடாதில்லையா?... கல்யாணத்துக்கு மூணு மாசம் இருக்கும் போது நிச்சயம் செய்தா ஓகே தான்" என்றாள் மான்சி
பேச்சற்ற தலையசைப்புடன் தனது அறைக்குள் போய்விட்டாள் கலா....
சித்தியின் முகத்தில் சிரிப்பைக் காண தன் வாழ்க்கையையே பணயம் வைத்திருப்பது புரிந்தாலும் சித்தி சிரிக்க வேண்டுமே?
“ அப்பாவுக்கு மனைவியென..
“ வந்தவள் தான் உன் தாய் என்று,
“ ஊர் சொல்ல கேட்டேன்!
“ உரிமையோடு உன்னை அழைத்த
“ அந்த நாட்கள் மட்டுமே.........
“ இன்றும் பசுமையாய் இருக்கிறது!
“ மீண்டும் உன்னை அம்மாவென்று..
“அழைக்கும் நாள் வருமா?
“ வந்தவள் தான் உன் தாய் என்று,
“ ஊர் சொல்ல கேட்டேன்!
“ உரிமையோடு உன்னை அழைத்த
“ அந்த நாட்கள் மட்டுமே.........
“ இன்றும் பசுமையாய் இருக்கிறது!
“ மீண்டும் உன்னை அம்மாவென்று..
“அழைக்கும் நாள் வருமா?
first 5 lakhs viewed thread tamil