மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 8

"ஹாஹாஹாஹா... சிமி என்னைப் போல ஜாலியானவன் யாருமில்லைனு கூட சொல்லலாம்.... ஆனா நீ வராத அந்த நிமிஷத்துலருந்து நான்?"

"ப்ளீஸ் சத்யன்... ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மீ,, இதுபோன்ற நிலை நல்ல நட்புக்கு நல்லதில்லை சத்யன்"

"ம் நட்பு? நட்பாவே இருந்திருக்கலாமேனு தான் எனக்கும் தோணுது,, ஆனால்........?."

மான்சியின் முதுகுத்தண்டு சில்லிடும் உணர்வு.... இப்போது நட்பாக இல்லையென்றால் வேறு? அதை அவனிடம் கேட்கும் துணிவு அவளுக்கில்லை.... அவனாக கூறும் நாளன்று? "நான் கிளம்பனும் சத்யன்......"

"ம் கிளம்பு சிமி.... ஜாக்கிரதையா போ சிமி"

"ம் பை சத்யன்"

"சிமி,, வீட்டுல முடிஞ்ச வரை பணிஞ்சு போய்டு.... அவங்க காயப்படுத்தும் முன் நீ கவனமா இருந்துடு.... உடலை வருத்திகாதம்மா"

நெஞ்சுக்குள்ளிருந்து ஏதோவென்று எழும்பி வந்து தொண்டையை அடைக்க விழிகளில் நீர் தழும்பியது... சில நாட்களுக்கு முன்பு அவ்வளவு வீரமாக பேசியவன்.... இன்று ஏன் இப்படியொரு அமைதி.... என் பாதுகாப்பை யோசிக்கிறானா?

"கிளம்பிட்டயா சிமி?"

"இல்ல இருக்கேன்"

"இன்னைக்கு நடந்த சாட்டை ப்ரீ டைம்ல யோசிச்சுப் பாரு சிமி,, அதன்பின் உனக்கு என்னப் புரியுதுன்னு சொல்லுவியா?"

தனியாக வேற யோசிக்கனுமா? கைப் புண்ணைப் பார்க்க எதற்கு கண்ணாடி? அதான் கண்ணெதிரே தன் காதலை கடைவிரித்து விட்டானே...

"ம்ம் பார்க்கிறேன்... பை சத்யன்.. தூங்க ட்ரை பண்ணுங்க"

"ம் பை சிமி"

அடிப்படும் போதெல்லாம் வராத கண்ணீர்... இப்போது அடிக்கடி வருகிறதே? உணர்வுகளை கட்டுக்குள் வைக்கும் எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்தும் வித்தை தெரியாமல் போனதே?




“ அன்பு அம்மா,,

“ உன்னைப் போலவே ஓர் உறவு கேட்டேன்...

“ உன்னையேக் கொண்டு ஒருவனை

“ உறவாக கொடுத்து விட்டாயே!!

“ ஏற்றுக்கொள்ள முடியா என்னவனை..

“ என் மன்னவனாக நியமித்தது நீயா அம்மா?

கவிதையை எழுதி தனது பிளாக்கில் பதிவு செய்ய நினைத்தவள்... பட்டென்று அழித்தாள்... சத்யன் இதைப் படித்தால் அப்புறம்? தனது புத்தி மழுங்கிப் போனதை எண்ணி நொந்தபடி எழுந்து வீட்டுக்குக் கிளம்பினாள்....

வீட்டுக்குள் நுழைந்தவளை கலாவின் இறுகிய முகம் தான் வரவேற்றது..... தோட்டத்துக்குப் போய் முகம் கழுவிவிட்டு வந்தவள் சித்தியின் காலருகே மண்டியிட்டாள் "நான் நீங்க வளர்த்த பொண்ணு சித்தி.... ஒரு நாளும் உங்களையும் என் தங்கையையும் வஞ்சிக்க மாட்டேன்... நம்புங்க" என்றாள் அமைதியான குரலில்...

கலா எதுவுமே பேசவில்லை.... அமைதியாக அமர்ந்திருந்தாள்.... மான்சிக்கு ஏனோ அவளைக் கண்டு பரிதாபமாக இருந்தது....

ஒன்றுமறியா உறவு தான் சத்யனுடன்... அதற்குள் எவ்வளவு கண்ணீர் எத்தனை துன்பம்? ஆனால் சித்திக்கும் அப்பாவுக்குமான உறவு? கலாவின் துயரம் இமயமாய் உயர்ந்து தெரிந்தது....

"நைட் டின்னர்க்கு என்ன செய்ய சித்தி?"

"எதையாவது செய் போ" கையை உதறிக்கொண்டு எழுந்து வெளியேப் போனாள் கலா

அமைதியாக எழுந்து சென்று இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்...... வழக்கம் போல தாமதமாக வந்த ரீத்து இன்று ஏனோ மான்சியைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்...

தங்கையின் முத்தத்தை வாங்கிக் கொண்டு தலை சாய்த்து சிரித்த மான்சி "என்னடா இது அதிசயமா இருக்கு? ஒன்னாம் தேதிக்கு இன்னும் பத்து நாள் இருக்கே? அதுக்குள்ள முத்தம்லாம் கிடைக்குதே" என்று கூறவும்...

"ஓய்,, ஏதோ அக்கா மேல அன்புல முத்தம் குடுத்தா.... நீ ஒண்ணாம் தேதினு சொல்றயா? ஓகே ஓகே இனி ஒண்ணாம் தேதி மட்டும் முத்தம் தர்றேன்" என்று கோபமாய் சிலிப்பிய தங்கையை அணைத்துக் கொண்டு "சும்மா சொன்னேன் ரீத்தும்மா,, நீ எப்ப வேணாலும் உம்மா குடுக்கலாம்...." என்றாள் மான்சி....

கையோடு தங்கையை அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து விட்டு வந்து அவளது படுக்கை விரிப்பை சரிசெய்தாள்....

அறைக்குள் நுழைந்த ரீத்துவைப் பார்த்து "கண்ணம்மா,, எனக்காக ஒரு விஷயம் மட்டும் நீ செய்தா போதும்டா" என்று கெஞ்சுதலாக ஆரம்பித்தாள் மான்சி...

புருவங்களை உயர்த்தி "என்ன செய்யனும் சொல்லு" என்றாள் தங்கை...

தங்கையின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து அவளருகே அமர்ந்த மான்சி "ரீத்தும்மா,, அம்மா சம்மந்தம் பேசியிருக்கும் இடம் ரொம்ப நல்லவங்க பெரிய இடமும் கூட.... அது உனக்கே தெரியும்"

"ஆமா,, அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கு ஒன்னுமில்லைம்மா.... அவங்க குடும்ப கௌரவத்துக்கு ஏத்த மாதிரி நீயும் இருக்கனும்டா.... ஈவினிங் டைம்ல இது போல லேட்டா வர்றது... பாய் பிரண்ட்ஸ் கூட வெளியிடங்கள்ல சுத்துறது... இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கடாம்மா... அப்பதான் நாளைக்கி உன்னைப் பத்தி அவங்க ஒரு வார்த்தை கூட பேசமுடியாது...." மான்சி ஒரு தாயாக மாறி தங்கைக்குப் புத்தி சொன்னாலும் தன்னுடைய சத்யனின் குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருந்தது....

மான்சியை கூர்ந்து பார்த்த ரீத்து "நீ சொல்றது புரியுது சிமி... ஆனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சி வரப்போறவனுக்காக நான் இப்பருந்தே விரதம் இருக்கனுமா? அது என்னால முடியாது சிமி..... அவன் வர்ற வரைக்கும் லைப்பை என்ஜாய் பண்ண விடு சிமி..." தீர்மானமாக சொல்லிவிட்டு கட்டிலில் கால் நீட்டி படுத்துவிட்டாள்.....

மான்சிக்குப் புரிந்தது.... ஆனால் அது அந்த குடும்பத்துக்குப் போகவேண்டிய பெண்ணுக்கு அழகா,, அதுவும் சத்யனுக்கு மனைவியாக வேண்டியவளின் உன்னதம்? பெருமூச்சை அடக்கிவிட்டபடி எழுந்து வெளியே வந்தாள்.....

சித்தி எப்போதும் போல் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட.. தகப்பனும் மகளும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.... பிறகு தோட்டத்தில் சற்றுநேரம் உலாவினார்கள்.... கூடத்தில் தகப்பனுக்குப் படுக்கை விரித்தவள் அவரின் கால்களைப் பிடித்து விட்டபடி "அப்பா நாளை மதியம் நான் லீவு போட்டிருக்கேன்.... உங்க ஆபிஸ்க்கு வருவேன்... கொஞ்சம் பேசனும் அப்பா" என்ற மகளை உற்று நோக்கியவர்.... "என்னடாம்மா?" என்று கேட்க..

"நாளை சொல்றேன்ப்பா... இப்ப தூங்குங்க" என்று அவரின் பாதங்களை அழுத்திவிட்டு உறங்க வைத்தாள்....

கூடத்திலிருந்த தாயின் படத்தை நோக்கி கைகூப்பி விட்டு தனது படுக்கயில் படுத்தவளை தூக்கம் துறத்தி விளையாடியது....

எப்போதும் போல் காலை அலுவலகம் சென்றாள்... அத்தனை வேலைகளையும் கவனித்தாள்... மதியம் விடுமுறை என்பதால் கவணிக்க வேண்டிய அலுவல்கள் ஏராளமாக இருந்தன.....

சத்யன் காத்திருப்பானே என்ற எண்ணம் மனசை செல்பிடத்த மரப்பலகையாய் அரிக்க ஆரம்பித்தது... நேரம் ஆக ஆக செய்யும் வேலைகளில் தவறுகள் வந்தன.... அவனுடன் ஒரு வார்த்தையாவது பேசினால் தான் மனம் அமைதியடையும் என்ற நிலையில்... மதியம் ஒரு மணியளவில் மெயிலை ஓபன் செய்தாள்...

சத்யனிடமிருந்து ஒரே ஒரு மெயில் மட்டும்... திறந்து வாசித்தாள்....

"தூங்கமாட்டேன்... நீ வரும் வரை விழித்தேயிருப்பேன்.. வந்ததும் கூப்பிடு வருவேன்"

இந்த இரண்டு வரிகளில் தான் எத்தனை காதல்? இளகிய நெஞ்சத்தை இரும்பாக்கிக் கொண்டு சாட்டை ஓபன் செய்து "ஹாய் சத்யன்" என்று அனுப்பினாள்...

அடுத்த நொடியே வந்தான் "வந்துட்டயா சிமி?"

"ம்ம்,, ஸாரி ஆபிஸ்ல ஒர்க் அதிகம்... அதான் லேட்"

"பரவால்ல சிமி,, ஞாபகம் வந்து கூப்பிட்டதுக்கு தாங்க்ஸ்"

"இன்னும் கொஞ்ச நாள் இப்படித்தான் போகும் போலருக்கு சத்யன்... சொல்ல வேண்டியதை மெயிலா அனுப்பிட்டு எனக்காக காத்திருக்காம நீங்க தூங்குங்க..."

"உன்கூட பேசாமல் தூக்கம் வராதே? அதான இப்போ பெரிய பிரச்சனையே?" அசட்டுத்தனமாய் சிரிக்கும் பொம்மையொன்று கூடவே....

"நீங்க மாறனும் சத்யன்,, நடப்பை புரிஞ்சுக்கனும்"

"ம்ம், அது பார்க்கலாம்... நான் இப்போ ஒண்ணு கேட்டா மறுக்காம தரனும்..."

என்ன கேட்கப் போகிறான்? உதறலோடு "என்னன்னு சொல்லுங்க மறுபதும் மறுக்காததும் பிறகு தான்"

"ம்,, எனக்கு உன்னை கான்டாக்ட் செய்ய ஏதாவது ஒரு நம்பர் வேணும் சிமி.... நீ வராத நாட்களில் முள்மேல அமர்ந்தது போல தவிக்கிறதை விட.... ஒரு போன்கால் மூலமா என்னாச்சுனு தெரிஞ்சுகிட்டு நிம்மதியா இருக்கலாமே சிமி? அதுக்கு தான் கேட்டேன்"

அவனது மெசேஜை படித்தவள் அதிர்ந்து போனாள்... நமக்குள் எதுவுமே இருக்கக் கூடாது என்று எண்ணும் போது கான்டாக்ட் நம்பரா?.

"ப்ளீஸ் சிமி,, நான் தவறா பயன்படுத்த மாட்டேன்.... நீ வராத நாட்களில் ஒரு தகவலுக்காக மட்டும் தான் சிமி" சோகமான ஸ்மைலி ஒன்று கூடவே வந்தது.

"இல்ல சத்யன்... இப்படி நம்பர் கொடுப்பது எனக்க சரியாக வராது... மன்னிச்சிடுங்க... என்னைப் பற்றிய எந்த தகவலும் உங்களுக்கு தர இயலாது"

"ப்ளீஸ் சிமி"

"சத்தியமா முடியாது... என் குடும்ப நிலவரத்துக்கு இதுபோல் சாட் செய்வதே பெரும் குற்றமாகப் போய்விடும் இதுல கான்டாக்ட் நம்பரா? ம்ஹூம் நிச்சயம் முடியாது"

"என்னை நம்பலையா சிமி?"

"இதுல நம்பிக்கைக்கு இடமேயில்லை சத்யன்... நான் ஒரு பெண்... எனது வாழ்க்கை நிலைமை அப்படி... நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்"

சத்யனிடத்திலிருந்து பதில் இல்லை....

"ஓகே சத்யன் நான் வெளியே கிளம்பனும் மதியம் லீவு... இதோடு நாளை காலை தான்... ஈவினிங் தேடாதீங்க வரமாட்டேன்"

"ஓ...... மதியம் லீவா? ஏதாவது விசேஷமா சிமி?"

"ம் விசேஷம் தான்... ஆனால் யாரிடமும் பகிர முடியாத விசேஷம்..."

"யாரிடமுமா... அல்லது என்கிட்ட மட்டுமா? ஹாஹாஹாஹா எனக்கும் புரிஞ்சுக்க கூடிய அறிவு இருக்கு சிமி.... ஓகே அப்போ ஈவினிங் கவிதை கிடையாதா? அப்படின்னா இப்பவே ஒரு கவிதை சொல்லிட்டுப் போயிடு" சல்யூட் வைக்கும் பொம்மையோடு பணிவாகக் கேட்டான்...

"ம்ம் ப்ளீஸ் வெயிட்"

"காத்திருக்கிறேன் கவிக்குயிலே" சிரிக்கும் பொம்மையொன்று கூடவே...
சில நிமிட அமைதிக்குப் பின்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 06-07-2019, 05:22 PM



Users browsing this thread: 7 Guest(s)