01-01-2019, 05:18 PM
ஒன்பிளஸ்
மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்டிற்கு ஷியோமி என்றால் ஃப்ளாக்ஷிப்பிற்கு ஒன்பிளஸ்தான் ராஜா. சந்தையில் அதற்கென தனிப்பட்ட ரசிகர்களைக் கைவசம் வைத்திருக்கிறது. வருடத்திற்கு இரண்டே இரண்டு ஸ்மார்ட்போன்கள் என்பதுதான் ஒன்பிளஸின் பிளான். அதே போல இந்த வருடம் வெளியான ஒன்பிளஸ் 6, 6T இரண்டுமே இந்த வருடத்தின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்றன. அடுத்த வருடம் 5G நிச்சயம் என முதலில் அறிவித்தது ஒன்பிளஸ்தான். எனவே இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடமும் ஒன்பிளஸ் சந்தையைக் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.
நோக்கியா
மீண்டும் சந்தைக்கு திரும்பி இரண்டு வருடங்களை நிறைவு செய்யப்போகிறது நோக்கியா. ஆனால் அதற்குள்ளாகவே அதன் மீது இருந்த எதிர்பார்ப்பை எல்லாம் வீணடித்து விட்டது என்றே கூறலாம். இது வரை நோக்கியாவின் பேர் சொல்லக்கூடிய வகையில் ஒரு ஸ்மார்ட்போன்கள் கூட வெளியாகவில்லை. அதே நேரத்தில் 5G-யை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறது எனவே அடுத்த வருடமாவது நோக்கியா அதன் பேரைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலாம்.
மற்ற நிறுவனங்கள்
மேலே இருக்கும் மொபைல் நிறுவனங்கள் தவிர்த்து சோனி, எல்ஜி போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் அவ்வப்போது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருந்தன என்றாலும் கூட அவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில் ஒப்போ, விவோ போன்ற சீன நிறுவனங்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் இடத்தைப் பிடித்திருந்தன.