01-01-2019, 05:17 PM
ஆப்பிளுக்கு அடுத்து உலக அளவில் கவனம் பெறும் மொபைல் நிறுவனமாக சாம்சங் இருக்கிறது. கேலக்ஸி S9 சீரிஸ் மற்றும் நோட் 9 என இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் வெளியிட்டது. இந்த இரண்டுமே வழக்கம்போல விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற மொபைல் நிறுவனங்கள் அனைத்துமே டிஸ்ப்ளேவில் நாட்ச்சைக் கொடுத்து விட அந்த வடிவமைப்பில் இன்னும் ஒரு ஸ்மார்ட்போனைக் கூட வெளியிடவில்லை சாம்சங். ஐபோன் x-க்குப் பின்னரே பல நிறுவனங்கள் அதைப் பின்பற்றியதால் தானும் அதைச் செய்ய வேண்டாம் என நினைக்கிறது சாம்சங். ஆனால் அதற்குப் பதிலாக வேறு சில திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. போல்டபிள் டிஸ்ப்ளே, புதிய வடிவத்தில் இன்பிஃனிட்டி டிஸ்ப்ளே என புதிய வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறது. வழக்கம் போலவே இந்த வருடமும் மொபைல் சந்தையை எடுத்துக் கொண்டால் உலக அளவில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது சாம்சங்.
ஷியோமி
ஷியோமி
தொடங்கி சில ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் சாம்சங், ஆப்பிள் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கிறது ஷியோமி. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைக் கைவசம் வைத்திருக்கிறது. இது வரை ஷியோமி வைத்த குறி எதுவும் தவறியதே இல்லை. அதிலும் POCO F1 என்றால் உலகத்துக்கே தெரியும். இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இதை 'எங்கள் ஊருக்குச் சீக்கிரம் கொண்டு வாங்க' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள். பட்ஜெட் செக்மென்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஷியோமி இந்த வருடமும் அதை கடைப்பிடிக்கத் தவறவில்லை.