01-01-2019, 05:16 PM
செப்டம்பர் மாதத்தில் ஐபோன் XS, XS மேக்ஸ், மற்றும் XR என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள். கடந்த வருடம் வெளியான ஐபோன் X-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவே இவை இருந்தன. புதிய வசதிகள் எதுவும் இதில் கொடுக்கப்படவில்லை. விலை அதிகம் என்பதால் XS மேக்ஸ் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு ஐபோன் விற்பனை இந்தியாவில் சரிவைச் சந்தித்தது என அறிக்கை வெளியானது. இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே கிட்டத்தட்ட இதே நிலைமைதான். அடுத்த வருடமும் ஐபோனில் 5G-க்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஆப்பிள் அடுத்த வருடமும் நாட்ச்-சையும் பேஸ்-அன்லாக்கையும் வைத்து ஓட்ட வேண்டியிருக்கும். இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டு ஆப்பிள் எப்படி வாடிக்கையாளர்களைச் சமாளிக்கப்போகிறது என்பதைப் பார்க்க மற்ற நிறுவனங்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றன.