05-07-2019, 09:34 AM
நீ பாட்டுக்கு திடீர்னு அழுதுட்டு ஓடிட்ட.. வீட்ல எல்லாரும் என்னைப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க தெரியுமா.. 'மீரா எதுக்கு அதுக்குள்ள கெளம்பிட்டா.. என்ன ஆச்சு அவளுக்கு.. அவ மூஞ்சியே சரி இல்லயே.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா.. என்ன பண்ணின அவளை..??' அப்டி இப்டின்னு.. ஆளாளுக்கு பாடாபடுத்திட்டாங்க..!! 'அவளுக்கு ஒரு கால் வந்தது.. அர்ஜன்ட் வொர்க்னு சொல்லிட்டு கெளம்பிட்டா..' அப்டின்னு நான் சொன்னதை யாருமே நம்புற மாதிரி இல்ல..!! திரும்ப திரும்ப 'நீ என்ன பண்ணின அவளை.. நீ என்ன பண்ணின அவளை..'ன்னு.. கேள்வி மேல கேள்வி..!!"
"சொல்ல வேண்டியதுதான..?? 'அவளை தனியா ரூமுக்கு தள்ளிட்டு போய் கிஸ் அடிச்சேன்.. அதுல மெரண்டு போய் ஓடிட்டா..'ன்னு..??" மீராவின் குரலில் ஒரு குறும்பு.
"என்ன.. நக்கலா..?? இங்கபாரு.. நேத்து கிஸ் பண்ணினது உனக்கு பிடிக்கலன்னு மட்டும் பொய் சொல்லாத.. அதை நான் நம்ப மாட்டேன்..!! நீ எவ்வளவு ஆசையா என்கூட கோவாப்ரேட் பண்ணினேன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின.. தேவையில்லாம எதுக்கு அழுத..?? அப்புறம்.. அது என்னது.. ஆங்ங்.. 'நீ கிஸ் பண்ணினது தப்பு இல்ல.. நான் கிஸ் பண்ணினதுதான் தப்பு'ன்னு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? நீ பண்ணினா என்ன.. நான் பண்ணினா என்ன.. கிஸ் ஒன்னுதான..?? அதுல என்ன என் மேல தப்பு இல்ல.. உன் மேல மட்டும் தப்பு..??"
"ம்ம்.. கேள்விலாம் அவ்வளவுதானா.. இல்ல.. இன்னும் இருக்கா..??"
"இப்போதைக்கு இவ்வளவுதான்..!! இதுக்கு நீ மொதல்ல பதில் சொல்லு.. மிச்ச கேள்விலாம் அப்புறம் நான் கேக்குறேன்..!!"
"ஹ்ம்ம்.. சொல்றேன்..!!"
இறுக்கமான குரலில் சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அந்த டேபிளுக்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே, வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தனது கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன், அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வேகமாய் பறக்கிற வாகனங்களையும், வெட்டிப் பரபரப்புடன் அலைகிற மனிதர்களையுமே, சிறிது நேரம் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த மீரா, பிறகு அசோக்கிடம் திரும்பி திடீரென கேட்டாள்.
"இந்த டேபிள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இல்ல அசோக்..??"
"வாட்..??" அசோக் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.
"நீ மொதமொதலா எங்கிட்ட பேச வந்தப்போ.. நான் இதே இடத்துலதான் உக்காந்திருந்தேன்..!! நாம ரெண்டு பேரும் 'ஐ லவ் யூ' சொல்லிக்கிட்டதும்.. இதே டேபிள்லதான்..!! அதுக்கப்புறம் எத்தனையோ தடவை.. இங்க உக்காந்து ரெண்டு பேரும் பேசிருக்கோம்.. கதையடிச்சிருக்கோம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நெறைய தெரிஞ்சிட்ருக்கோம்..!! அப்போ நமக்கு இந்த டேபிள் ரொம்ப ஸ்பெஷல்தான..??"
"ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!" அசோக் ஒரு சிறு குழப்பத்துடனே மெலிதாக புன்னகைத்தான்.
"முன்னாடிலாம் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ஐ மீன்.. நாம மீட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி..??"
"என்ன பண்ணுவ..??"
"எப்போ இங்க சாப்பிட வந்தாலும்.. இதே டேபிள்தான் சூஸ் பண்ணுவேன்..!! இங்க உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்.. தனியா வந்து உக்காந்துகிட்டு.. அப்படியே வெளில வேடிக்கை பாத்துக்கிட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு.. ஹ்ஹ.. ஒருமணி நேரத்துக்கு மேல உக்காந்து.. உலகத்தை மறந்து சாப்பிட்டுட்டு இருப்பேன்.. தெரியுமா..??"
"ம்ம்.. ஞாபகம் இருக்கு.. கவனிச்சிருக்குறேன்..!!"
"ஃபுட்கோர்ட் உள்ள என்டர் ஆகுறப்போவே.. இந்த டேபிள் காலியா இருக்கான்னுதான் மொதல்ல பார்ப்பேன்.. காலியா இருந்தா, நேரா போய் சாப்பாடு வாங்கிட்டு.. இங்க வந்து உக்காந்துக்குவேன்..!! சப்போஸ் வேற யாராவது இங்க உக்காந்திருந்தா.. சாப்பாடு வாங்க மாட்டேன்.. அங்க எங்கயாவது காலியா இருக்குற டேபிள்ள சும்மா உக்காந்துக்கிட்டு.. இந்த டேபிள் காலியாகுற வரை வெயிட் பண்ணுவேன்..!! அப்புறம் இங்க இருக்குறவங்க எந்திரிச்சதும்.. சாப்பாடு வாங்கிட்டு வந்து இங்க உக்காந்துக்குவேன்..!! அந்த அளவுக்கு எனக்கு இந்த டேபிள் ரொம்ப பிடிக்கும்..!!"
மீரா சொல்லிக்கொண்டே போக, அவ்வளவு நேரம் கன்னத்தில் கைவைத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், இப்போது சற்றே கவலையான குரலில் கேட்டான்.
"ஹ்ம்ம்.. ஒரு டேபிளுக்கு இவ்வளவு பில்டப்பா..??"
"ஏன்.. அதுல ஏதாவது தப்பா..??"
"இல்ல.. தப்புலாம் ஒன்னுல்ல.. இருக்கவேண்டியதுதான்..!! ஆனா.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. ஏதேதோ சொல்லிட்டு இருக்கியேன்னுதான் எனக்கு எரிச்சலா இருக்கு..!!"
"ஹாஹா.. ஆமால்ல.. சம்பந்தமே இல்லாம லூஸு மாதிரி உளறிட்டு இருக்கேன்ல..??" மீரா உதடுகள் பிரித்து அழகாக புன்னகைத்தாள்.

first 5 lakhs viewed thread tamil