05-07-2019, 09:19 AM
ஓவியாவிடம் எந்த மாற்றமும் இல்லை!
களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகமாக,களவாணி - 2 படம், தற்போது வெளியாகிறது. படத்தின் நாயகன் விமல் உடன் பேசியதிலிருந்து:
களவாணி - 2 படத்தை பற்றி கூறுங்கள்?
களவாணி முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு உள்ளது. அரிக்கி, மகேஷ் என கதாபாத்திரங்கள், அந்தந்த பாத்திரத்தின் பெயரிலேயே நடிக்கின்றனர். முதல் பாகம், தஞ்சை, ஒரத்தநாடு பகுதியில் நடந்தது.
இரண்டாம் பாகம், கண்ணுக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கிற கதை. ஆனால், கதை மட்டும், தற்போதைய காலத்திற்கேற்றதாக இருக்கும்.இந்த படத்தில், காமெடியில்,
ஆர்.ஜே.விக்னேசும், என் மாமாபாத்திரத்தில், சுதாகர் என்பவரும், ஓவியா தந்தையாக, ராஜமோகன்உள்ளிட்டவர்களும் புதிதாக இணைந்து உள்ளனர்.
இந்த படத்தின் ஸ்பெஷல் என்ன?
களவாணி முதல் பாகம், எல்லா கிராமத்திலும், ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றடைந்தது. அதே போல் இரண்டாம் பாகமும், அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும். காமெடி, நகைச்சுவை என, அனைத்து அம்சமும், களவாணி முதல் பாகத்தை விட, இதில் அதிகமாகவே இருக்கும்.
படத்தின் கதை என்ன?
கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து, கதை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிராமத்தில் நடக்கிற பஞ்சாயத்து தேர்தலில், ஓட்டு போடுபவர்கள், அதிகபட்சம், 3,000 வரை தான் இருப்பர்.அத்தனை பேரும் உறவினர்களாகவே, நண்பர்களாகவே, அனைவருக்கும் தெரிந்தவர்களாகவே இருப்பர். பஞ்சாயத்து தேர்தலில் ஜெயிப்பதற்காக செய்யும் களவாணித்தனம் தான், இந்த படத்தின் கதை.
அரசியல் படமாக இருக்குமா?
அரசியல் பேசும் படமாக இருக்காது. ஊருக்குள் நடக்கிற இயல்பான பஞ்சாயத்து தேர்தலை, காதல், காமெடியுடன் சொல்கிற படமாக இருக்கும்.
களவாணி ஓவியாவுக்கும், 'பிக்பாஸ்' முடித்து திரும்பிய, களவாணி - 2 ஓவியாவுக்கும், வித்தியாசம் பார்த்தீர்களா?
களவாணி படம் தான், ஓவியாவின் முதல் படம். 'பிக்பாஸ்' சென்று விட்டு திரும்பிய ஓவியா, இப்படத்தில் வரும் போது, முதல் படத்தில் பார்த்த, அதே ஓவியாவை போலவே இருந்தார். படப்பிடிப்பில் மற்ற அனைவரிடமும் முதல் பாகத்தில் பழகியதே போலவே பழகினார். அவரிடம் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை.
அடுத்து நடிக்கும் படம்?
மலையாளத்தில், மை பாஸ் படத்தின் ரீமேக்கான, சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்ரேயா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஓவியா, அஞ்சலி, இவர்களில், உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?
இருவரில் யாராக இருந்தாலும்,பாத்திரத்திற்கு ஏற்ற நபர் நடிக்கும் போது, இரண்டு பேருமே, பொருத்தமான ஜோடியாக அமைந்து விடுவர்.
எதிர்காலத்தில் இயக்குனர் ஆகும் ஆசை உண்டா?
இதுவரை இல்லை. நடந்தால் நடக்கும்; இல்லையென்றால் இல்லை

first 5 lakhs viewed thread tamil