Fantasy தெய்வ யட்சி (முடிவுற்ற கதை) - சகோதரன்
#11
Sad 
அவள் முன்னால் வழிகாட்ட பின்னாள் நடந்து சென்றான் கிருஷ்ணன். இது பதினொண்ணாம் நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயிலய்யா. கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எந்நூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவதுஅதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்…” என்றாள்.

 
கிருஷ்ணனுக்கு அவள் சொல்லுவதில் உள்ள உண்மைகளெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்த வரலாறுகள் எல்லாம் தெரியும். ஒரு பெரிய மண்டம் இருந்தது. ஏறக்குறைய எல்லா தூண்களிலும் சிற்பங்கள். இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்குய்யாஎன்றாள்.
 
“இதைப் பாருய்யா.. குறவன் செலைதென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா….இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்கஎன்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்லஅதான்சார் நாயக்கர்காலத்து சிற்பக்கலை….”
 
கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான்இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்ககுறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப்பாருங்ய்யா. எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்கய்யா. அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்? கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குதுஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு…”
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: தெய்வ யட்சி by சகோதரன் - by sagotharan - 04-07-2019, 09:20 PM



Users browsing this thread: 1 Guest(s)