28-12-2025, 10:37 PM
(This post was last modified: Yesterday, 01:04 AM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-12-2025, 06:24 PM)Niruthee Wrote: வணக்கம் நண்பா.. !!
கடுமையான உழைப்பு. வேலைப் பளுவுக்கு இடையிலும் விடா முயற்சி. சிறப்பான கதை வர்ணனை.
எழுத்துப் பயிற்சியில் நன்றாகவே தேறி விட்டீர்கள். இருப்பினும் சிறு விளக்கம் கொடுக்கலாம் என்று தோன்றியது. அதை சொல்லாமல் தவிர்க்கவும் மனமில்லை.
உங்கள் எழுத்து முயற்சியும் பயிற்சியும் விடா முயற்சியும் உங்களுக்கான வெற்றியையும் புகழையும் மன நிறைவையும் நிச்சயமாக கொடுத்தே தீரும்.
அதற்கான வாழ்த்துக்கள்.. !!
அடுத்ததாக எந்தக் கதையாக இருந்தாலும் முடிந்தவரை எழுதும்போதே எழுத்துப் பிழையை நீக்கி விடுங்கள்.
நூறு நல்ல கடலையை சாப்பிட்டாலும் ஒரே ஒரு சொத்தை கடலை மொத்த கடலையின் சுவையையும் கெடுத்து விடும் தன்மை கொண்டது.
அது கடலையின் குற்றம் அல்ல. மனதின் குற்றம். மனித மனம் மிகப்பெரிய சொத்தை கடலை. எது சொத்தையோ அதையே நினைவில் பதித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.. !!
காட்சிகளை மிக அருமையாக எழுத்தாக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.
ஆனால் ஒரு கல்லை சிலையாக வடித்தால் மட்டும் போதாது. அதற்கான நுணுக்கங்களையும் கொடுக்க வேண்டும்.
காட்சிகளை எழுத்தாக்குவதோடு மட்டுமல்லாமல் அந்த எழுத்தின் ஆளுமையையும் உள்ளடக்க சிறிது கவனம் செலுத்துங்கள்.
காட்சி வர்ணனைகளோடு பேசப் படும் வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அதில் நாம் நண்பர்களுடன் உறவினர்களுடன் இயல்பாக பேசக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி காட்சி வடிவமே இல்லாமல் கூட வார்த்தையின் தாக்கத்தை ஏற்படுத்துங்கள். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
காமக்கதைகள் மூலம் அறிமுகமானாலும் நம் எழுத்துப் பயிற்சியும், முயற்சியும் நம்மை நிச்சயமாக அடுத்த நிலைக்கு கூட்டிச் செல்லும்.
மென்மேலும் வளர.. சிறப்புற என் வாழ்த்துக்கள் நண்பா.. !!
என் வாழ்நாளில் மிக பெரிய பாராட்டு இது. மிக்க நன்றி நிருதி..!
இனி எழுதும் பகுதிகளில், நீங்கள் கூறியவற்றில் கவனமாக கையாள முயற்சிக்கிறேன்.
நன்றி..!!!
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)