04-07-2019, 05:29 PM
'Spiderman Far from Home' - விமர்சனம்
ஒரு மிகப்பெரிய பேரிடரை விசாரிக்க நிக் ஃப்யூரியும், ஏஜென்ட் மரியா ஹில்லும் மெக்ஸிகோ வருகின்றனர். அந்தப் பேரிடரைத் தடுக்க க்வெண்டின் பெக் எனப்படும் சூப்பர் ஹீரோ அங்கு வருகிறார். படம் தொடங்குகிறது.
’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் கதை முடிந்து 8 மாதங்கள் கழித்து தொடங்குகிறது படம். நியூயார்க் நகரில் தானோஸால் அழிக்கப்பட்டு மீண்டும் ப்ரூஸ் பேனரால் உயிர்ப்பிக்கப்பட்ட மிட்டவுன் பள்ளி மாணவர்களை 2 வாரச் சுற்றுலாவாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறது.
டோனி ஸ்டார்க்கின் மரணத்தினால் ஏற்பட்ட சோகத்திலிருந்து இன்னும் மீண்டு வராத ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர் தன் காதலை மேரி ஜேனிடம் சொல்வதற்கு இந்த சுற்றுலாவைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். இதனிடையே நிக் ஃப்யூரி அழைப்புகளைத் தவிர்த்து விட்டு ஐரோப்பா செல்கிறார்.
அவர்கள் வெனிஸ் நகருக்குச் செல்லும்போது அங்கே நீர் போன்ற ராட்சத உருவம் ஒன்று தாக்குகிறது. பீட்டர் பார்க்கர் அதைத் தடுக்க முயல்கையில் முதல் காட்சியில் வந்த பெக் அங்கு வந்து அந்த உருவத்தை அழிக்கிறார். பின்னர் பீட்டரைச் சந்திக்கும் நிக் ஃப்யூரி டோனி ஸ்டார்க் கொடுக்கச் சொன்னதாக ஒரு கண்ணாடியைக் கொடுக்கிறார். அது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸின் அனைத்து விதமான தகவல்களையும் உள்ளடக்கிய 'EDITH' என்னும் பல பில்லியன் மதிப்பு கொண்ட கண்ணாடி என பின்னர் பீட்டர் தெரிந்து கொள்கிறார்.
நிக் ஃப்யூரியோடு இருக்கும் பெக் தான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிரகத்தை பஞ்ச பூதங்களான ‘Elemental' எனப்படும் தீய சக்திகளை அழித்து விட்டதாகவும், அவை இப்போது பூமிக்க வந்துள்ளதால் அதை அழிக்கவே தான் வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
'Prague' எனப்படும் நகரத்துக்கு அவர்கள் செல்லும்போது நெருப்பைப் போன்ற ராட்சத உருவம் ஒன்று தாக்குகிறது. பீட்டரின் உதவியோடு அதையும் பெக் முறியடிக்கிறார். அதன்பிறகு EDITH கண்ணாடிக்கு முழு தகுதியுடையவர் பெக் தான் என்று அந்தக் கண்ணாடியை பெக்கிடம் கொடுத்து விடுகிறார் பீட்டர். அதன் பிறகு என்னவானது? Elemental சக்திகளிடமிருந்து பூமி மீட்கப்பட்டதா? பெக் யார்? இதற்கான பதிலே 'Spiderman Far from Home'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 23-வது படமாக வெளியுள்ளது இந்தப் படம். ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே ட்ரைலர் போஸ்டர் எல்லாம் வெளிவந்துவிட்டாலும், படத்தில் இதற்குப் பிறகு மார்வெல் யுனிவர்ஸில் என்ன நடக்கப்போகிறது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.
வழக்கமாக மார்வெல் படங்களில் இருக்கும் நகைச்சுவை வசனங்கள் இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் இதற்கு முந்தைய மார்வெல் படங்களில் இருந்ததைக் காட்டிலும் ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஸ்டான் லீயின் கேமியோ இல்லாமல் வெளியாகும் முதல் மார்வெல் படம் இதுதான்.
படத்தின் வில்லனைப் பற்றிய பின்னணி இன்னும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். விட்ட குறை தொட்ட குறையாக இருப்பது படத்தின் மைனஸ். தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி விறுவிறுப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, படத்தின் வேகத்துக்கு இணையான இசை, நேர்த்தியான கிராபிக்ஸ் என பாராட்ட பல விஷயம் இருக்கிறது.
படத்தில் இரண்டு போஸ்ட் கிரெடிட் சீன்கள் இருக்கிறது. ஒன்று அடுத்த ’ஸ்பைடர்மேன்’ படத்துக்கான லீட். இன்னொன்று ’மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின்’ அடுத்த பகுதிக்கான லீட்.
நல்ல ஒலி, பெரிய திரையுடன் கூடிய திரையரங்கில் 3Dயில் பார்த்தால் முழு அனுபவத்தையும் தரும் 'Spiderman Far from Home'

first 5 lakhs viewed thread tamil