Today, 02:17 AM
(Yesterday, 12:15 PM)rojaraja Wrote: வயதுக்கு ஏற்ற சுரப்பிகள் மாற்றத்தை அதன் போக்கில் விடுவது சரி இல்லை, கட்டு படுத்த பயின்று கொள்வது நன்று. இளம் வயதில் பிடித்தது வயது கூட கூட அது பிடிப்பது இல்லை, மனதுக்கு மிகவும் பரிச்சயம் அடைந்த ஏதுவாகினிலும் அதன் மீதான ஈர்ப்பு (பெண், மனைவி, எதுவாகினும்) குறைவது இயற்க்கை, இப்போது கிடைக்கின்றது பின்னாளில் வேண்டாம் என்று மனது சொல்லும் போது உறவுகள் கசக்கும், எதுவும் கட்டுக்குள் வைப்பது மனித பண்பு, கட்டுக்குள் வைக்காமல் இருப்பது மிருக பண்பு, எதுவும் தவறில்லை, ஆனால் நமது பண்பு?
இது தான் மதில் மேல் பூனை நிலமை என்பது !
மனிதப் பண்பு இது தான் எல்லை என்று எங்கும் எதனாலும் வரையறுக்கப்படவில்லை !
பூகோள எல்லைகளுக்கும், மத ,சமூகக் கோட்பாட்டுக்குள்ளும் அடைக்கப்படும் மனிதனின் பண்புகள் அவன் ஆடையற்று திரிந்த காட்டு வாழ்க்கையில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூகக் கோட்பாட்டுக்குள் அடஙகி (அடக்கி?!) இருக்கின்ற இந்த வாழ்வில் அறிவியல் அவன/ளது உணர்வுகளுக்கு எல்லை இது என வகுத்து முடிக்கவில்லை !
தேவையே பரிமாற்றத்திற்கு முக்கியம் ! Demand makes supply !
தேவையற்ற எதுவும் தானாகவே உதிர்ந்து விடும் !
ஆண் ,பெண் விகிதாச்சாரம் ஒரே சீராக சமப் பங்கீட்டில் இருக்கும் வரை பெரிய அளவு " புரட்சி" ஏற்பட்டு விடுவதில்லை !
ஆண் பெண் விகிதாச்சாரத்தில் சிக்கல் உண்டாகும் பட்சத்தில் இனப்பெருக்க விதிக்கு உட்பட்டு எல்லா தளைகளும் தானாக உடையும்.
இது தான் எதிர்காலத்தில் நடக்கும். மீண்டும் ஒரு சுழற்சி நிகழும் !
ஆண்டுகள் கடக்கலாம். அபடியான ஒரு சூழலை பார்க்காமல் நாம் செத்து போகக் கூட நேரிடலாம் !
இதான் யதார்த்தம் !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)