04-07-2019, 10:14 AM
இந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோ, ராய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். 30ஓவர்களில் 194 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அசுரபலத்துடன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடைசி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது.
ஜேஸன் ராய், பேர்ஸ்ட்டோ அடித்த வேகத்தை பார்த்தபோது, ஸ்கோர் 400 ரன்களைத் தொடும் எனக்கணக்கிடப்பட்டது. ஆனால், மோர்கன் ஆட்டமிழந்தபின் ஸ்கோர் 280-ரன்களுக்குள் படுத்துவிடும் என தோன்றியது. கடைசியில் பிளெங்கெட், அதில் ரஷித் இருவரும் சேர்்ந்து 300 ரன்களுக்கு மேல் உயர்த்தினர்.
அதேபோல ராய், பேர்ஸ்டோ விக்கெட்டுகளை கழற்ற சிரமப்பட்ட நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள், பந்து தேய்ந்தவுடன், கடைசி 20 ஓவர்களில் பந்தின் தையலை குறுக்காகப்பிடித்து வீசும் ஸ்லோ பந்துகள், லெக் கட்டர்கள் ஆகியவற்றே நேர்த்தியாக வீசி விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணியும் பந்துவீச்சில் பிரமாதப்படுத்தியது. குறிப்பாக ஆர்ச்சர், பிளெங்கெட், மார்கஉட் ஆகியோர் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி திணறடித்தனர்.
வில்லிம்யஸன், டெய்லர்
நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை அந்த அணி இன்னும் கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லரை மட்டுமே இருப்பது தெளிவாகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிகோலஸ், கப்தில் இருவரும் மோசமாக ஆடி வருகிறார்கள். கப்தில் என்றோ அடித்த சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் அணியில் நீடிக்கிறார். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் போட்டிையத் தவிர்த்து வேறு எந்த ஆட்டத்திலும் ரன் சேர்்்க்கவில்லை.
வில்லிம்ஸன், டெய்ஸர் ஆட்டமிழந்தவுடனே அணியில் மற்ற வீரர்களின் நம்பிக்கை உடைந்ததுபோன்று பேட் செய்து ஆட்டமிழக்கிறார்கள். 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 20 ஓவர்களுக்கு வெறும் 50 ரன்கள் மட்டுமே சேர்த்து மீதமிருந்த விக்கெட்டுகளை இழந்தது படுமோசம்.
உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக நியூஸிலாந்து வென்ற போட்டிகளில் எல்லாம் வில்லியம்ஸன், டெய்லர்தான் அடித்துக்கொடுத்தார்கள். சில ஆட்டங்களில் மட்டுமே நீஷம், லாதம் பங்களிப்புசெய்தார்கள். தொடர் வெற்றிகளைப் பெற்றுவிட்டு இப்போது தொடர்்ந்து தோல்வியைச் சந்திப்பது அரையிறுதியில் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தி ஆபத்தாக அமையும்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றாலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த திணறுகிறார்கள். அதிலும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு மகிப்பெரிய பலவீனமாகும்.
விக்கெட் சரிவு
308 ரன்கள் இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து அணி களமிறங்கியது. கப்தில், நிகோலஸ் தொடங்கினர். வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே நிகோலஸ் எல்பிடபிள்யு முறையில் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்தில் கப்தில் 8 ரன்னில் ஆர்ச்சரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரன் அவுட்
3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், டெய்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக வில்லியம்ஸன் 27 ரன்னில் மார்க் உட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்த சிறிது நேரத்தில் டெய்லர் 28 ரன்னில் அதில் ரஷித்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். இருவரும் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைந்தது.
50 ரன்கள்
அதன்பின் விக்கெட் டாம் லாதம் மட்டுமே நிதானமாக பேட் செய்தார். மற்ற பேட்ஸ்மேன்களான நீஷம்(19), கிராண்ட்ஹோம்(3), சான்ட்னர்(12), ஹென்றி(4), போல்ட்(4) என விக்கெட்டுகளை சீராக இழந்தனர். லாதம் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியில் அதிகபட்ச ஸ்கோர் லாதம் அடித்த 57 ரன்கள்தான்.
45 ஓவர்களில் 186 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்தது. கடைசி 20 ஓவர்களில் 5விக்கெட்டுகள் இழந்து வெறும் 50 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்த தரப்பில் மார்க்உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிரடி ஆட்டம்
முன்னதாக டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதிரடிக் கூட்டணி பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் இருவரும் முதல் விக்ெகட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆடுகளத்தின் காய்ந்த தன்மையால் பந்துகள் பேட்ஸ்மேனே நோக்கி நன்றாக வந்ததால், இதைப்பயன்படுத்தி இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்ச நொறுக்கினார்கள். பேர்ஸ்டோ 46 பந்துகளிலும், ராய் 55 பந்துகளிலும் அரைசதம் அடிதத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராய் 60 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த ரூட், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 71 ரன்கள் கூட்டணி சேர்த்துப் பிரிந்தார். ரூட் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 95 பந்துகளில், தனது 9-வது சதத்தைப் பதிவு செய்தார். உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்தார். அடுத்த சிறிதுநேரமே களத்தில் இருந்த பேர்ஸ்டோ 106 ரன்னில்(15பவுண்டரி,ஒரு சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.
பொறுப்பற்ற பேட்டிங்
அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20 ரன்களுக்குள்ளாகவே வீழ்ந்தனர். கேப்டன் மோர்கன் மட்டும் 44 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பட்லர்(11), ஸ்டோக்ஸ்(11), வோக்ஸ்(4) ரசித்(16) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பிளெங்கெட் 15 ரன்னிலும், ஆர்ச்சர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
first 5 lakhs viewed thread tamil