Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
27 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து: நியூஸி.க்கு 4-வது இடம்: பாகிஸ்தானுக்கு கதவடைப்பு

[Image: 6565987726709743562659001699922766989361152njpg]

கிரிக்கெட் போட்டியை உலகிற்க்கு அறிமுகம் செய்த இங்கிலாந்து , 1992-ம் ஆண்டுக்குப்பின் இந்தமுறைதான் உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஜானி பேர்ஸ்டோவின் தொடர் சதம், ஜேஸன் ராயின் அதிரடி, கட்டுக்கோப்பு, துல்லியமான பந்து வீச்சு ஆகியவற்றால், செஸ்டர் லீ ஸ்ட்ரீடில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது. 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 186 ரன்களில் சுருண்டு 119 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சதம் அடித்து அசத்திய பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதுவரை இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 3 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து தொடர்ந்து வெற்றிகள் பெற்று கடைசியில் தொடர்தோல்வி அடைந்துள்ளது. 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் ஒருபோட்டி ரத்து என 11 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் 4-வதுஇடத்தில் இருக்கிறது
27 ஆண்டுகளுக்குப்பின்…
இந்த வெற்றியின் மூலம் 1992-ம் ஆண்டுக்குப்பின், அதாவது 27 ஆண்டுகளுக்குப்பி்ன் அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியையும், நியூஸிலாந்து அணியையும் இங்கிலாந்து அணி இந்த முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
[Image: 658858393563531983171675743333493455192064njpg]
 
கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்து கடந்த 44 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல், தவித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவைப்படுகிறது.
கதவடைப்பு
இந் போட்டியின் முடிவு மூலம் பாகிஸ்தானுக்கான அரையிறுதிக் கதவு அடைக்கப்பட்டது. நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் 4-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் வர முடியம்
எப்படி என்று கேட்கிறீர்களா…
அதாவது வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 308 ரன்கள் குவித்து வங்கதேசம் அணியை 0 ரன்களில் சுருட்ட வேண்டும். அல்லது 400 ரன்களை பாகிஸ்தான் சேர்்த்து, வங்கதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதாவது 84 ரன்களுக்குள் வங்கதேசத்தை சுருட்ட வேண்டும்.
நியூஸிலாந்தை வரவிடக்கூடாது என்பதற்காக வங்கதேச அணி வேண்டுமென்றே ஆட்டமிழந்தால் மட்டுமே இதுசாத்தியம். ஆதலால் பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.
அரையிறுதியில் யார் யாரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. இன்னும், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது. இதில் அணிகள் பெறும் வெற்றியின் அடிப்படையில் யாருடன் யார் மோதுவது என்பது முடிவாகும்.
மிரட்டல் கூட்டணி
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரைக்கும் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ கூட்டணி அவர்களுக்கு மிகப்பெரிய பலமாகும். பேர்ஸ்டோ இந்தியாவுக்க எதிராக சதம் அடித்து, தொடர்ச்சியாக இந்த போட்டியிலும் சதம் அடித்தார். இந்த ஜோடி தொடர்ந்து 10-வது முறையாக 100ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப்பை கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுக்கும் வலுவான தொடக்கம் அடுத்தடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் தோளில் பாரமின்றி, அழுத்தமின்றி பேட் செய்ய முடிகிறது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் எந்தஅணி மோதினாலும், இந்த கூட்டணியை தொடக்கத்திலேயே உடைத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்துவிட்டதுபோலத்தான்.

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-07-2019, 10:14 AM



Users browsing this thread: 38 Guest(s)